Sunday, May 19, 2024

தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது எப்படி? – சிக்கல்களும் தீர்வுகளும்

- Advertisement -

உடற்பயிற்சி: எனக்கும் தான் ஆசைதான் பாஸ், ஜிம்முக்கு தொடர்ந்து சென்று சிக்ஸ்பேக் கொண்டுவரனும்னு, ஆனால் இந்த பாலப்போன சோம்பல் வந்து என்னை முடக்கிப் போட்டு விடுகிறது என்று பலர் கூறக் கேட்டிருப்போம். இது ஜிம்முக்கு மட்டுமல்ல ஏதோ ஒரு விளையாட்டை ஆர்வமுடம் ஆரம்பிக்கும் நபர்கள் காலப்போக்கில், அதனுடனான தனது ஆர்வத்தை இழந்து இறுதியில் அதனை முழுவதுமாக கைவிட்டு விடுவார்கள்.

சரி இதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்தால் உடற்பயிற்சி ஆரம்பிப்பதை விட அதனை நீண்ட நாள் கடைப்பிடிப்பதில் தான் சூட்சமம் இருக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஆம் ஒரு பயிற்சியை ஆரம்பிப்பது எளிதான ஒன்றாம். ஆனால் அதனை நீண்ட நாள் கடைப்பிடிப்பதற்கு நாம் உளவியல் ரீதியான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டுமாம்.

- Advertisement -

உடற்பயிற்சி

தூண்டுதல்: எந்த ஒரு பயிற்சியை தொடர்ந்து செய்ய நமக்கு தொடர்ச்சியான ஒரு தூண்டுதல் நிச்சயம் தேவைப்படும். அந்தத் தூண்டுதல்தான் நமக்கு அதன் மீதான ஆர்வத்தை அதிகரிக்கச் செய்து அதனை தொடர்ந்து செய்ய வைக்கும். எடுத்துக்காட்டாக, நீங்கள் யோகாப் பயிற்சியை தொடர்ந்து செய்ய விரும்பினால் அதற்கான தூண்டுதல்களை முதலில் கண்டறிய வேண்டும். அவை யோகா பயன்கள் குறித்த போஸ்டர்களை வீட்டின் சுவரில் ஒட்டி வைப்பது, பயிற்சி செய்யும் போது ஏதேனும் நல்ல இசையைக் கேட்டு செய்வது போன்றவையாக இருக்கலாம்.

- Advertisement -

1598431553754 -

பயிற்சி குறித்த அறிவு : உங்களுக்கு என்ன பலன் வேண்டும் என்பதை முன்பே தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அந்த பலனுக்கான பயிற்சியை தெளிவாக கண்டறிவது மட்டுமல்லாமல், அது குறித்த முழுமையான அறிவையும் வளர்த்தெடுக்க வேண்டும். அப்போதுதான் உங்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். அந்தப் பலன் உங்களுக்கு பயிற்சியை தொடர்ந்து செய்வதற்கான உந்துதலைத் தரும்.

கைப்பட எழுதுதல்: பயிற்சியின் மூலம் நீங்கள் என்னவாக ஆக விரும்புகிறீர்கள் என்பதை கைப்பட எழுத வேண்டும். அவை உங்களது மூளையில் ஒரு வித தூண்டுதலை ஏற்ப்படுத்தி உங்களை தொடர்ந்து இயங்க வைக்கும்.

ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்தல்: உங்களுக்கு பல பயிற்சிகளை ஒரே நாளில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கலாம். ஆனால் அவை நீங்கள் எதிர்பார்க்கும் விளைவிற்கு தடங்கலாக அமைய வாய்ப்பிருக்கிறது. ஆதலால் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுங்கள். உங்களது முழு கவனத்தையும் அதன் பக்கம் திருப்புங்கள். அதை அடையுங்கள். பின்னர் பிற பயிற்சிகளின் மீது கவனம் செலுத்துங்கள்.

30 நாட்களுக்கு முன் முடிவு எடுத்தல்: ஏதாவது ஒரு பயிற்சியை செய்யப் போகீறீர்கள் என்றால், அது குறித்தான முடிவை அதை செய்ய போகும் நாளிலிருந்து 30 நாட்களுக்கு முன்னர் எடுத்து விடுங்கள். இந்த முடிவு ஒரு வித தூண்டுதலை உங்கள் மூளையில் ஏற்படுத்தி உங்களை தயார் செய்யும்.

பலன்கள் எளிதாக இருக்கும் படி பார்த்துக்கொள்ளல்: இதுதான் மிக முக்கியமானது. நீங்கள் ஒவ்வொரு முறை பயிற்சி செய்து முடித்தப் பின்னரும் உங்களுக்கு நீங்களே பரிசு அளித்துக்கொள்ளுங்கள். எ.கா., நீங்கள் யோகப்பயிற்சியை அன்றைய நாளில் வெற்றி கரமாக செய்து முடித்து விட்டீர்கள் என்றால், பயிற்சி முடிந்தவுடம் அரைமணி நேரம் ஒதுக்கி உங்களுக்குப் பிடித்த பாடல்களை கேளுங்கள். இந்த சின்ன பரிசுகள் உங்களை அடுத்த நாளும் பயிற்சியை செய்ய வைக்கும்.

ஒத்த அதிர்வுள்ள நண்பர்களுடன் இணைந்து கொள்ளுதல்: உங்களைப் போன்றே பயிற்சி செய்பவர்களுடன் இணைந்து கொள்ளுங்கள். ஆன்லைனில் அதற்கான குரூப்கள் இருந்தால் அதில் இணைந்து கொள்ளுங்கள். அவர்கள் கொடுக்கும் ஆலோசனைகள் உங்களை பயிற்சி செய்யத்தூண்டும்.

1598431573577 -

மற்றவர்களிடம் பயிற்சிக் குறித்து பேசுவது: நீங்கல் செய்து முடித்த பயிற்சி குறித்தும், அதன் பலன்கள் குறித்தும் அதை பற்றிய அறியாத மனிதர்களிடம் பேசுங்கள்

சிறு சிறு டார்க்கெட்கள்; ஒரே நாளில் நாம் ஒபாமா ஆக முடியாது என்பதை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு பலனுக்கு ஏற்றபடியான முறையான திட்டமிடலை உருவாக்குவதோடு, குறுகிய கால இடைவெளிக்கான கோல்களையும் செட் செய்து விடுங்கள். பொறுமையாக முயற்சி செய்யுங்கள். முதல் கோலை நீங்கள் எட்டியவுடன் அடுத்த கோலை அடைவதற்கான உந்துதல் உங்களுக்கு கிடைக்கும்.  அது அப்படியே உங்களை அடுத்தக்கட்ட கோலுக்கு அழைத்துச் செல்லும். இவை அனைத்தையும் செய்ய மன உறுதி கட்டயாம் தேவை.

– கல்யாணி பாண்டியன்

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Top 5 This Week

Related Posts

Popular Articles

error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link