Saturday, February 8, 2025

IPL 2024 : சன்ரைசர்ஸ் – குஜராத் போட்டி மழையால் ரத்து! பிளே ஆஃப் சுற்றில் சன்ரைசர்ஸ்

- Advertisement -

ஐபிஎல் 2024 கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. இதுவரையில் நடந்த போட்டிகளின் படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் அணியாக தகுதிச் சுற்றுக்கு முன்னேறியது. ராஜஸ்தான் ராயல்ஸ் 2ஆவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. எஞ்சிய 2 இடங்களுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே போட்டி நிலவிய நிலையில், மூன்றாவது இடத்தை இன்று உறுதி செய்திருக்கிறது சன்ரைசர்ஸ் அணி, வருணபகவான் இடைவிடாமல் பெய்து கொண்டே

இருந்ததால் ஒருபந்து கூட வீசப்படாமல் இன்றைய ஐபிஎல் போட்டி கைவிடப்பட்டது. இதனையடுத்து 10. 15 மணி வரை காத்திருந்த நடுவர்கள், அதன்பிறகு போட்டியை கைவிடுவதாக அறிவித்தனர்.

- Advertisement -

இதனால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பிரித்து வழங்கப்பட்ட நிலையில், ஐபிஎல் 2024 தொடரில் பிளே ஆப் சுற்றை மூன்றாவது அணியாக உறுதி செய்திருக்கிறது சன்ரைசர்ஸ் அணி. அந்த அணி இதுவரை விளையாடிய 14 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றியும், 5 போட்டிகளில் தோல்வியையும் தழுவியிருக்கிறது.

- Advertisement -
IPL 2024 : சன்ரைசர்ஸ் - குஜராத் போட்டி மழையால் ரத்து! பிளே ஆஃப் சுற்றில் சன்ரைசர்ஸ்
IPL 2024 : சன்ரைசர்ஸ் – குஜராத் போட்டி மழையால் ரத்து! பிளே ஆஃப் சுற்றில் சன்ரைசர்ஸ்

குஜராத் அணிக்கு எதிரான ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டதால் மொத்தம் 15 புள்ளிகளை பெற்று பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்தது. அடுத்து விளையாட இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்று,ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் தோல்வியை தழுவினால், ஹைதராபாத் அணி இரண்டாவது இடத்தை பிடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இதன் மூலம் பிளே ஆஃப் சுற்றில் குவாலிஃபையர் ஒன்றில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும்.

- Advertisement -

அதேநேரத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் மூன்றாவது அணியாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறியிருக்கிறது. அந்த அணி இதுவரை விளையாடிய 14 போட்டிகளில் 5ல் வெற்றியும், 7 போட்டிகளில் தோல்வியும் தழுவியிருக்கிறது. சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது.

இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் 12 புள்ளிகளுடன் 7வது இடத்தைப் பிடித்து வெளியேறியுள்ளது. இப்போது மூன்று அணிகள் ஐபிஎல் 2024 தொடரில் பிளே ஆஃப் இடத்தை உறுதி செய்திருக்கும் நிலையில் நான்காவது இடத்துக்கான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் போட்டி போட இருக்கின்றன.

இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டி வரும் 18 ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இப்போட்டியில் 18 ரன்களுக்கும் அதிகமாக அல்லது 11 பந்துகள் மீதம் வைத்து ஆர்சிபி அணி வெற்றி பெற்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பிளே ஆஃப் வாய்ப்பை தட்டிப் பறித்து, ஆர்சிபி அணி முன்னேற வாய்ப்பு இருக்கிறது.

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Hot this week

2025-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்!

சனி பகவான் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாகவும், கர்ம மற்றும் நீதி...

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்!

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இவை உங்க ராசியா? சூரியனும்...

2025-ல் கேது பெயர்ச்சி: தொழிலில் அதிர்ஷ்டம் சேரும் 3 முக்கிய ராசிகள்!

2025-ல் கேது பெயர்ச்சியின் முக்கிய தாக்கம் ஜோதிடத்தில் ராகு, கேது ஆகிய கிரகங்கள்...

சனிபகவான் உருவாக்கும் ஷஷ மஹாபுருஷ ராஜயோகத்தால் வெற்றி அடையப்போகும் 5 ராசிகள்!

கும்ப ராசியில் சனிபகவான் பெயர்ச்சியால் உருவாகியுள்ள ஷஷ மஹாபுருஷ ராஜயோகம் மிகப்பெரிய...

Tamil Trending News

விராட் கோலியின் இளம் வீரருடன் மோதல்: தண்டனையும் விளைவுகளும் (Video)

விராட் கோலியின் இளம் வீரருடன் மோதல்: ரசிகர்களிடையே கடும் விமர்சனம் அவுஸ்திரேலிய அணியின்...

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவால் இந்தியா சோகத்தில் இந்தியாவின் முன்னாள் பிரதமர்...

2025-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்!

சனி பகவான் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாகவும், கர்ம மற்றும் நீதி...

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்!

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இவை உங்க ராசியா? சூரியனும்...

சரிகமப-வில் மக்கள் வாக்குகளின் அடிப்படையில் வெளியேறிய 2 போட்டியாளர்கள்!

சரிகமப-வில் மக்கள் வாக்குகளின் அடிப்படையில் வெளியேறிய 2 போட்டியாளர்கள்! சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ்...

38 லட்சத்துடன் வெளியேறிய ரஞ்சித் – பிரியா ராமன் போட்ட கண்டிஷன் | BiggBoss Tamil Season 8

38 லட்சத்துடன் வெளியேறிய ரஞ்சித் - பிரியா ராமன் போட்ட கண்டிஷன் Biggboss...

இலங்கையில் புதிய ஆட்டோக்கள்! – பழைய வாகனங்களின் விலை குறையலாம்!

இலங்கையில் புதிய ஆட்டோக்கள் வரவிருக்கும் தகவல் வாகன சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.🔴...

இந்த ராசிகளின் வரமும் சாபமும் என்ன? இப்போது தெரிஞ்சிக்கொள்ளுங்கள்!

இந்த ராசிகளில் பிறந்தவரா நீங்க? அப்போ உங்க வரமும் சாபமும் என்னன்னு...

Related Articles

error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link