Thursday, April 24, 2025

மூட்டு வலிக்கு முடிவு கட்டும்… ‘சூப்பர்’ மூலிகை டீ இது தான்..!!

- Advertisement -
மூட்டு வலிக்கு முடிவு கட்டும்... ‘சூப்பர்’ மூலிகை டீ இது தான்..!!
மூட்டு வலிக்கு முடிவு கட்டும்… ‘சூப்பர்’ மூலிகை டீ இது தான்..!!

இன்றைய மோசமான வாழ்க்கை முறையாலும், தவறான உணவுப் பழக்கத்தாலும் மூட்டு வலி, கீல்வாதம் போன்ற பிரச்சனைகளால் முதியவர்கள் மட்டுமின்றி இளைஞர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். வலியைக் குறைக்க நம்மில் பலர் பல்வேறு வகை வலி நிவாரண மாத்திரைகள், களிம்புகள் மற்றும் கிரீம்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால், அதன் மூலம் கிடைப்பது தற்காலிக நிவாரணம் மட்டுமே. மேலும், அதற்கு பக்க விளைவுகளும் உண்டு. இயற்கையான முறையில் வலியைக் குறைப்பது எப்போதுமே மிகவும் சிறந்தது.

வீட்டு வைத்தியம் மூலம் மூட்டு வலியில் இருந்து நிவாரணம் பெறலாம். இன்றைய காலகட்டத்தில் மூட்டு வலி ஒரு தீவிர நோயாக மாறியுள்ள நிலையில், மூட்டு வலி பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெற, மூலிகை டீ பெரிதும் உதவும். இதன் உதவியுடன் மூட்டு வலி (Joint Pain Remedies) சிக்கலை முழுமையாக தீர்க்க முடியும். வலி நிவாரணியாக செயல்படும் சிறப்பு டீ தாயாரிக்கும் முறையை பற்றி தெரிந்து கொள்வோம்…

- Advertisement -

மூட்டு வலியை போக்கும் டீயை தயாரிக்க, இஞ்சி, மஞ்சள் மற்றும் கருமிளகு ஆகியவை தேவைப்படும். இவை நாம் சமையிலில் அன்றாடம் பயன்படுத்தும் பொருள் தான். ஆயுர்வேதத்தில், இந்த வீட்டு வைத்தியம் மூட்டு வலியைப் போக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. முழங்கால்களை உராய்வில் இருந்து காக்க தேவையான மூட்டுக்களில் எண்ணெய் பசையை வழங்குவதோடு, வீக்கம் மற்றும் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும் இந்த அற்புத மூலிகை டீயை தயாரிக்கும் முறையை தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

மூலிகை தேநீர் தயாரிக்கும் முறை

மூலிகை தேநீர் தயாரிக்க, துருவிய இஞ்சி ஒரு துண்டு, அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு சிட்டிகை கருமிளகு தூள் அகியவை தேவை. பிறகு ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி, இஞ்சி, மஞ்சள் தூள் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும். சிறிது நேரம் கொதித்த பிறகு, அதில் ஒரு சிட்டிகை கரு மிளகு பொடி மற்றும் தேன் சேர்த்து பருகவும்

- Advertisement -

நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால் தேன் சேர்ப்பதை தவிர்க்கவும் அல்லது குறைந்த அளவில் சேர்த்துக் கொள்ளவும். இந்த மூலிகை டீயின் சுவையும் அனைவருக்கும் பிடிக்கும். இது மூட்டு வலி மற்றும் வீக்கத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும். இதனை நீங்கள் ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை சாப்பிடலாம்.

மூலிகை தேநீரால் கிடைக்கும் நன்மைகள்

ஆயுர்வேதத்தில், இந்த தேநீர் மூட்டு வலிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தசை மற்றும் மூட்டு வலியைப் போக்குவதில் நன்மை பயக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இஞ்சியில் நிறைந்துள்ளன. மஞ்சளிலும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது உடலில் வீக்கத்தை போக்கி வலியை போக்குகிறது. இது தவிர, எண்ணற்ற மருத்துவ பலன்கள் கொண்ட கருப்பு மிளகும் வலியைப் போக்க உதவுகிறது. எனவே, நீங்கள் மூட்டு வலியில் இருந்து நிவாரணம் பெற இதை தாராளமாக உட்கொள்ளலாம்.

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Hot this week

🌞 சூரிய பெயர்ச்சி 2025: இந்த 3 நட்சத்திரக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது!

🌞 சூரிய பெயர்ச்சி 2025 - அதிர்ஷ்டம் பொங்கப்போகும் 3 நட்சத்திரங்கள்! ஜோதிடத்தில்...

2025-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்!

சனி பகவான் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாகவும், கர்ம மற்றும் நீதி...

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்!

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இவை உங்க ராசியா? சூரியனும்...

2025-ல் கேது பெயர்ச்சி: தொழிலில் அதிர்ஷ்டம் சேரும் 3 முக்கிய ராசிகள்!

2025-ல் கேது பெயர்ச்சியின் முக்கிய தாக்கம் ஜோதிடத்தில் ராகு, கேது ஆகிய கிரகங்கள்...

Tamil Trending News

🌞 சூரிய பெயர்ச்சி 2025: இந்த 3 நட்சத்திரக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது!

🌞 சூரிய பெயர்ச்சி 2025 - அதிர்ஷ்டம் பொங்கப்போகும் 3 நட்சத்திரங்கள்! ஜோதிடத்தில்...

விராட் கோலியின் இளம் வீரருடன் மோதல்: தண்டனையும் விளைவுகளும் (Video)

விராட் கோலியின் இளம் வீரருடன் மோதல்: ரசிகர்களிடையே கடும் விமர்சனம் அவுஸ்திரேலிய அணியின்...

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவால் இந்தியா சோகத்தில் இந்தியாவின் முன்னாள் பிரதமர்...

2025-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்!

சனி பகவான் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாகவும், கர்ம மற்றும் நீதி...

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்!

2025-ல் சூரியனும் சனியும் கும்ப ராசியில் சேரும்: இவை உங்க ராசியா? சூரியனும்...

சரிகமப-வில் மக்கள் வாக்குகளின் அடிப்படையில் வெளியேறிய 2 போட்டியாளர்கள்!

சரிகமப-வில் மக்கள் வாக்குகளின் அடிப்படையில் வெளியேறிய 2 போட்டியாளர்கள்! சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ்...

38 லட்சத்துடன் வெளியேறிய ரஞ்சித் – பிரியா ராமன் போட்ட கண்டிஷன் | BiggBoss Tamil Season 8

38 லட்சத்துடன் வெளியேறிய ரஞ்சித் - பிரியா ராமன் போட்ட கண்டிஷன் Biggboss...

இலங்கையில் புதிய ஆட்டோக்கள்! – பழைய வாகனங்களின் விலை குறையலாம்!

இலங்கையில் புதிய ஆட்டோக்கள் வரவிருக்கும் தகவல் வாகன சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.🔴...

Related Articles

error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link