பரிஸ் 1 ஆம் வட்டாரத்தில் உள்ள நகைக்கடை ஒன்று கொள்ளையிடப்பட்டுள்ளது.
விலையுயர்ந்த நகைகளை விற்பனை செய்யும் Vendôme நகைக்கடையே இன்று சனிக்கிழமை காலை கொள்ளையிடப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வருகை தந்த மூன்று கொள்ளையர்கள், ஆயுதங்கள் மூலம் அச்சுறுத்தி அங்கிருந்து நகைகளை கொள்ளையிட்டுச் சென்றனர்.
கொள்ளையிடப்பட்ட நகைகளின் மதிப்பு கணக்கிடப்படவில்லை. விசாரணைகளை மேற்கொண்டுவரும் காவல்துறையினர்,
கண்காணிப்பு கமராவில் பதிவான காட்சிகளை அடிப்படையாகக் கொண்டுகொள்ளையர்களுக்கு வலை வீசியுள்ளனர்.