
2030ல் தங்கம் விலை ஒரு லட்சத்தை தொடும் என நகைக் கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.அட்சய திருதியை முன்னிட்டு நடைபெற்ற விற்பனையில் கடந்த ஆண்டு காட்டிலும் 30 சதவீதம் அளவிற்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் 15,000 வரை தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது. இருந்தபோதிலும், மக்கள் தங்கம் அதிக அளவில் வாங்கி வருவதாக தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக தங்கத்தின் மீது முதலீடு செய்தால் முழு லாபம் அடைய முடியும் என்றும் தங்கம் விலை தற்போது காட்டிலும் இன்னும் பன்மடங்கு அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.
இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.6,750க்கும், ஒரு சவரன் ரூ.54,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 2030ல் ஒரு லட்ச ரூபாய் வரை தங்கத்தின் விலை உயரும் என்றும், 2030ல் தங்கம் விலை ஒரு லட்சத்தை தொடும் எனவும் நகைக் கடை உரிமையாளர் ஜெயந்தி லால் தெரிவிக்கிறார்.