Friday, March 29, 2024

Top 5 This Week

Related Posts

எந்த வீட்டில் பெண்கள் வெள்ளிக்கிழமை தினங்களில் இப்படி வழிபாடு செய்கிறார்களோ, அந்தக் குடும்பத்தில் நிச்சயம் கஷ்டம் என்ற வார்த்தைக்கே இடம் இல்லை.

ஒரு வீட்டில் நிம்மதியும் சந்தோஷமும் நிலைத்திருக்க வேண்டுமென்றால், அது அந்த வீட்டில் வசிக்கும் பெண்கள் கையில் தான் உள்ளது. யாருடைய வீட்டில் தான் பிரச்சனைகள் இல்லை? யாருடைய வீட்டில் தான் பண கஷ்டம் இல்லை. அவை அனைத்தையும் அனுசரித்து பக்குவமாக குடும்பத்தை, நிம்மதியான நிலையில் நடத்திச் செல்லக்கூடிய பொறுமை என்பது பெண்களுக்கு அவசியமாக தேவைப்படுகிறது.

 

- Advertisement -

நம்முடைய வீட்டில் பிரச்சனைகள் வருவதற்கு, நிறைய பெண்கள் தங்களுடைய பொறுமையை இருப்பதும் ஒரு காரணம் தான். தேவையற்ற பிரச்சனைகள் வராமல் இருக்க வேண்டும் என்றால், வீட்டில் உள்ளவர்கள் நிம்மதியாக வாழவேண்டும் என்றால், அந்த வீட்டில் இருக்கும் பெண் வெள்ளிக்கிழமை வழிபாட்டை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

Contact Now!

poojai

பொதுவாகவே வெள்ளிக்கிழமை என்றதுமே பெண்கள், வியாழக்கிழமை அன்றே தங்களுடைய வீட்டை சுத்தம் செய்து விடுவார்கள். வெள்ளிக்கிழமை காலையில் பூஜை செய்வதற்கு தேவையான பூக்களை தயார் செய்துவிடுவார்கள். இப்படியாக சில பெண்கள் தங்களுடைய கடமைகளை தவறாமல் செய்கிறார்கள் என்பதும் உண்மையான விஷயம் தான். இப்படிப்பட்ட பெண்களே அந்த வீட்டின் கண்களாகவும் இருக்கிறார்கள்.

- Advertisement -

 

குறிப்பாக அந்த வெள்ளிக்கிழமை தினத்தில் அன்று மட்டுமாவது காலை, பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே வீட்டில் பூஜை செய்வது மிகவும் நல்லது என்று சொல்லப்பட்டுள்ளது. பிரம்ம முகூர்த்த நேரம் என்றால், நீங்கள் வெகுசீக்கிரம் கண்விழிக்க வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது. காலை 5 மணி அளவில் கண்முழித்து விட்டு, வாசல் கூட்டி மாக்கோலம் இட்டு, 6 மணிக்கு முன்பாக வீட்டில் தீபம் ஏற்றி, உங்கள் வீட்டில் இருக்கும் அம்மனின் திரு உருவப் படத்தை உற்று நோக்கி, 5 நிமிடங்கள் மனதார பூஜை செய்தால் கூட போதும்.

poojai arai

தீபம் ஏற்றி வைத்துவிட்டு அந்த தீப ஒளியில், நீங்கள் அம்மனை வழிபாடு செய்யும்போது, அந்த அம்மனின் முகத்தில் இருக்கும் அமைதி, அம்மனின் கண்களை பார்ப்பதன் மூலம் நமக்கு ஏற்படக்கூடிய நேர்மறை சிந்தனை இவை அனைத்தும், பெண்ணின் குண நலன்களையே மாற்றிவிடும் என்று சொல்லப்பட்டுள்ளது. கண்களை மூடிக்கொண்டு பிரார்த்தனை செய்யாமல், கண்களை திறந்து அம்மனை முழுமனதோடு தரிசனம் செய்து வேண்டுதல் வைக்க வேண்டும்.

 

சுலபமாக உங்களுக்கு புரியும்படி சொன்னால், இப்படி வழிபாடு செய்து வரும் பெண்களாகிய நீங்கள் அந்த வீட்டின் அம்மன் ஸ்வரூபமாகவே மாறிவிடுவீர்கள். எந்த பிரச்சனைக்கும் சுலபமான தீர்வினை, அமைதியான முறையில் தேடும் வழியை நீங்கள் பின்பற்றுவீர்கள். நீங்கள் சாந்த ஸ்வரூபியாக மாறி விடுவார்கள். உங்களுடைய மனதில் இருக்கும் தேவையற்ற சிந்தனைகள் நீங்கி, உங்களுக்கு வரக்கூடிய கோபங்கள் கூட குறைய ஆரம்பிக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் உங்களுடைய வீட்டில் பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு ஏது?

 

poojai arai

இறுதியாக ஒன்றை மட்டும் நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். காலையில் நீங்கள் வெள்ளிக்கிழமை அன்று பூஜை செய்யும் போது, உங்களுடைய வீட்டில் சாந்த ஸ்வரூபத்தில் இருக்கும் அம்மனைப் பார்த்து தான் வழிபாடு செய்யவேண்டும். ஆக்ரோஷத்துடன் இருக்கும் எந்த ஒரு தெய்வத்தின் திருவுருவப் படத்தையும் பார்த்து வழிபாடு செய்வது என்பது அவ்வளவு உகந்தது அல்ல.

 

deepam

மகாலட்சுமி, மீனாட்சி அம்மன், காமாட்சி அம்மன், சாந்தமாக இருக்கும் துர்கா தேவி, அஷ்டலட்சுமிகளின் திருவுருவப் படங்கள் இப்படியாக சாந்த சொரூபிணியாக இருக்கும் தெய்வங்களை உற்று நோக்கி, தரிசனம் பெற்று தொடர்ந்து 3 வாரம் வெள்ளிக்கிழமை, பிரம்ம முகூர்த்த நேரத்தில் வழிபாடு செய்து பாருங்கள். உங்களுக்குள் வரும் மாற்றத்தை நீங்களே உணர முடியும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Popular Articles

error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link