வீட்டிலிருந்து வேலை செய்பவர்களே!… இதையெல்லாம் தயவுசெய்து செய்திடாதீங்க… சைபர் பிரிவு எச்சரிக்கை

வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுடைய கணினிகள் இணையம் வழியாக ஹேக் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக மத்திய சைபர் பிரிவு எச்சரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது வீட்டில் இருந்து வேலை செய்து வருபவர்களுடைய கணினியில் உள்ள தகவல்கள் இணையம் மூலம் திருடப்பட வாய்ப்புள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சைபர் பிரிவு எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய சைபர் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், “பணியாளர்கள் தங்களுடைய அலுவலங்களில் இணைய சேவையை பயன்படுத்துவதற்கும் வீட்டில் இருந்து இணைய சேவையை பயன்படுத்துவதற்கும் பல வித்தியாசங்கள் உள்ளன.

அலுவலகங்களில் செய்யப்பட்டிருக்கும் இணைய சேவைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் வீட்டில் பயன்படுத்தும்போது இருக்காது. பொது இணைய சேவை மூலம் உங்களுடைய கணினி ஹேக் செய்யப்பட்டு, தகவல் திருடப்படலாம் என்பதால் பொது இலவச வைஃபை சேவையை பயன்படுத்த வேண்டாம்.

மேலும் உங்களுடைய கணினி மற்றும் லேப்டாப்பில் ஆன்டி வைரஸ் மென்பொருள் முறையாக செயல்படுகிறதா என அடிக்கடி சோதனை செய்து பார்க்க வேண்டும்.

தேவையில்லாத செயலிகளை பதிவிறக்கம் செய்வது, அலுவலக வேலைகளை செய்யும் சாதனங்களில் சமூக வலைதளத்தைப் பயன்படுத்துவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். அத்துடன் உங்களுடைய கடவுச்சொல்லையும் பலமானதாக வைக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles