Tags #Covid-19
Tag: #Covid-19
தடை நீக்கம்! அஸ்டிராஜெனேகா தடுப்பூசி குறித்து பிரான்ஸ் அரசு முக்கிய அறிவிப்பு
வயதானவர்கள் இப்போது ஆக்ஸ்போர்டு-அஸ்டிராஜெனேகா தடுப்பூசி போடலாம் என்று பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.தரவு இல்லாததைக் காரணம் காட்டி, 65 வயதிற்குட்பட்டவர்களுக்கு மட்டுமே அஸ்டிராஜெனேகா தடுப்பூசி பயன்படுத்த கடந்த மாதம் பிரான்ஸ் ஒப்புதல் அளித்தது நினைவுக் கூரத்தக்கது..இந்நிலையில் தொலைக்காட்சியில் பேசிய பிரான்ஸ் சுகாதார அமைச்சர் ஆலிவர் வேரன், முன்னர் வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட 65 முதல் 74 வயதிற்குட்பட்டவர்கள் அஸ்டிராஜெனேகா தடுப்பூசி போடலாம் என கூறினார்.75 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி மையத்தில் Pfizer அல்லது மாடர்னா தடுப்பூசி வழங்கப்படும்…
கனேடியர்கள் யாரெல்லாம் ஆக்ஸ்போர்டு-அஸ்டிராஜெனேகா தடுப்பூசியை போடக்கூடாது! வெளியான முக்கிய தகவல்
ஆக்ஸ்போர்டு-அஸ்டிராஜெனேகா தடுப்பூசியை யாரெல்லாம் போடக்கூடாது என்பது குறித்து கனடாவின் தேசிய ஆலோசனைக்கு குழு முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.கனடாவில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி நாடு முழுவதும் டோஸ்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய கனேடியர்களுக்கு ஆக்ஸ்போர்டு-அஸ்டிராஜெனேகா-வின் கொரோனா வைரஸ் தடுப்பூசியை பரிந்துரைக்கவில்லை என்று நோய்த்தடுப்பு மருந்துகளுக்கான தேசிய ஆலோசனைக் குழு (என்ஏசிஐ) தெரிவித்துள்ளது.இந்த நேரத்தில் இந்த தடுப்பூசியின் செயல்திறன் குறித்த வரையறுக்கப்பட்ட தகவல்களால் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு…
அமெரிக்க எல்லைகளில் கொரோனா சோதனையை தொடங்கும் கனடா; விதிகளை மீறினால் 750,000 டொலர் அபராதம்!
புதிய உருமாறிய கொரோனா வைரஸ்கள் பரவலைக் கட்டுப்படுத்த அமெரிக்க எல்லைகளில் COVID-19 ஸ்வாப் சோதனைகளை கனடா இன்று முதல் தொடங்குகிறது.கனடாவின் Public Health Agency 117-க்கும் மேற்பட்ட அமெரிக்க-கனடா நுழைவு துறைமுகங்களில் பயணிகளுக்கு on-site swab சோதனைகளை கட்டாயமாக்கியுள்ளது. மேலும், பயணத்திற்கு முன்னும் பின்னும் கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகளை அறிவித்தது.கனடாவுக்குள் நுழைவதற்கு 72 மணி நேரத்திற்குள் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட எதிர்மறை COVID-19 PCR சோதனை முடிவுகளுக்கு விலக்கு அளித்து, அமெரிக்க நுழைவுத் துறைமுகத்தில் COVID-19 சோதனையை நிர்வகிப்பதாக கனடா…
சர்வதேச சுற்றுலா பயணிகளே… தயவுசெய்து எங்கள் நகரத்திற்கு வராதீர்கள்! பிரபல பிரான்ஸ் நகர மேயர் முக்கிய அறிவிப்பு
பிரான்ஸ் நகரமான நைஸில் சுற்றுலா பயணிகள் குவிவதை தடுக்க வார இறுதி நாளில் ஊரடங்கு அமுல்படுத்த வேண்டும் என அந்நகர மேயர் Christian Estrosiஅழைப்பு விடுத்துள்ளார்.நைஸ் நகரம் பிரான்சில் மிக உயர்ந்த கொரோனா நோய்த்தொற்று விகிதத்தைக் கொண்டுள்ளது.அந்நகரில் 1,00,000 பேருக்கு என்ற விகிதத்தில் வாரத்திற்கு 740 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன, தேசிய சராசரியை விட இது மூன்று மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.இதனிடையே நைஸ் நகரில் வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடுமையாக்குவது குறித்து இந்த வார இறுதியில்…
கனடா – அமெரிக்கா இடையிலான பயணத் தடை மீண்டும் நீட்டிப்பு!
கோவிட்-19 தொற்றுநோயால் அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையில் அத்தியாவசியமற்ற பயணங்களுக்கான தடை இப்போது மார்ச் 21-ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கனடா, அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ நாடுகளுக்கு இடையிலான அத்தியாவசியமற்ற பயணத் தடை பிப்ரவரி 21-ஆம் திகதி வரை அறிவித்திருந்த நிலையில், தொற்றுநோய் காரணமாக இப்பொது மேலும் ஒரு மாதத்துக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.இப்படி 11-வது முறை தடை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அமேரிக்கா மற்றும் கனடாவுக்கு இடையிலான எல்லை மூடப்பட்டு முழுதாக ஒரு வருடம் ஆகவுள்ளது.அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையேயான வர்த்தகம் போன்ற…
கனடாவில் புதிய சிக்கல்! உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரிப்பு: கவலையில் நிபுணர்கள்
கனடாவில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்தாலும், உருமாறிய வைரஸ் பாதிப்புகள் அதிகரித்திருப்பதாக சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.கனடாவில் இதுவரை 830,000க்கும் அதிகமான கொரோனா பாதிப்புகளும், 21,500க்கும் அதிகமான இறப்புகளும் பதிவாகியுள்ளன.கடந்த ஜனவரியில் ஒவ்வொரு நாளும் 8,000-க்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் பதிவாகியிருந்த நிலையில், கடந்த 7 நாட்களாக ஒரு நாளைக்கு 3,000-க்கும் குறைவான பாதிப்புகள் மட்டுமே பதிவாகி வருகின்றன.இந்நிலையில், நாட்டில் இப்போது மொத்தமாகவே 35,700 பாதிப்புகள் செயலில் உள்ளதாக கனடாவின் Public Health Agency தெரிவித்துள்ளது.பாதிப்புகள் குறைந்து…
நெருக்கடி நிலையை அமுல்படுத்த தயாராகும் பிரான்ஸ்! கட்டுப்பாடுகள் குறித்து வெளியான முக்கிய தகவல்
பிரான்சில் வியாழக்கிழமை முதல் நெருக்கடி நிலை அமுல்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.நாட்டில் பரவி வரும் புதிய வகை உருமாறிய கொரோனாவை எதிர்கொள்ள பிராந்திய சுகாதார அமைப்புகள் மற்றும் மருத்துவமனைகளில் ‘நெருக்கடி அமைப்பை’ அமுல்படுத்த பிரான்ச தயாராகி வருதவாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்த நடவடிக்கை, பயன்படுத்த தயாராக இருக்கக்கூடிய மருத்துவமனை படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், அவசரமற்ற அறுவை சிகிச்சையை தாமதப்படுத்துதல் மற்றும் அனைத்து மருத்துவ ஊழியர்களையும் அணிதிரட்டுதல் ஆகியவை அடங்கும்.கடந்த ஆண்டு மார்ச் மற்றும் நவம்பர் மாதங்களில் நாடு ஊரடங்கில் இருந்த…
கனடாவுக்கு வரும் பயணிகளுக்கு பிப்ரவரி 22 முதல் கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு! அரசு முக்கிய அறிவிப்பு
பிப்ரவரி 22 முதல் கனடாவுக்கு வரும் பயணிகள், கொரோனா சோதனை செய்யப்பட்டு, அதன் முடிவு கிடைக்கும் வரை சொந்த செலவில் ஹோட்டலில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.புதிய ஆபத்தான கொரோனா வைரஸ்களிடமிருந்து முன்னெச்சரிக்கையாக இருக்கும் வகையில், அத்தியாவசியமற்ற விமானப் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.அத்தியாவசியமற்ற விமானப் பயணிகள் கனடாவுக்குப் புறப்படுவதற்கு முன்னர், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டலில் மூன்று இரவு தங்குவதற்கு தங்கள் சொந்த செலவில் முன்பதிவு செய்ய வேண்டியிருக்கும்…
கனடா அரசின் தடுப்பூசி திட்டம் ‘தோல்வி’! பிரதமர் ட்ரூடோவுக்கு குவியும் எதிர்ப்பு: அம்பலப்படுத்திய கருத்து கணிப்பு
ஜஸ்டின் ட்ரூடோ அரசாங்கத்தின் கொரோனா தடுப்பூசி திட்டம் ‘தோல்வியானது’ என கிட்டதட்ட 60% கனேடியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளதாக Angus Reid Institute கருத்து கணிப்பு வெளிப்படுத்தியுள்ளது.கனடாவில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பிரதமர் ட்ரூடோ மற்றும் எம்.பி.க்கள் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.Angus Reid Institute கருத்து கணிப்பில், 41% பேர் தடுப்பூசி விஷயத்தில் கனடாவால் இதற்கு மேல் பெரிதாக செய்திருக்க முடியாது என ஆதரவு தெரிவித்துள்ளனர்.அதேசமயம் அதிகபட்சமாக 59% பேர் கனடா அரசு திட்டமிடுதலில் தோல்வியடைந்துவிட்டதாக…
‘மிகவும் பதட்டமாக’ உள்ளது! பிரான்சில் புதிய முழு ஊரடங்கு அமுல்படுத்த வேண்டும்! மருத்துவமனை கூட்டமைப்பின் தலைவர் முக்கிய தகவல்
கொரோனா நோய்த்தொற்றுகள் பரவுவதைத் தடுக்க புதிய நாடு தழுவிய ஊரடங்கு அமுல்படுத்தப்பட வேண்டும் என பிரான்சின் மருத்துவமனை கூட்டமைப்பின் தலைவர் Frederic Valletoux அழைப்பு விடுத்துள்ளார்.புதிய ஊரடங்கு அமுல்படுத்துவது தொடர்பான விவகாரத்தில் அரசாங்கத்திற்கும் சுகாதார அதிகாரிகளுக்கும் இடையில் கருத்து முரண்பாடு நிலவி வருவதற்கு மத்தியில் Frederic Valletoux இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.தலைநகர் பாரிஸுக்கு தெற்கே உள்ள Fontainebleau-வின் மேயராக இருக்கும் Frederic Valletoux, தற்போதைய சூழலில் மருத்துவமனைகளில் நிலைமை கட்டுப்பாட்டில் இருக்கிறது, அதேசமயம் பல பகுதிகளில் ‘மிகவும்…