பசும்பாலை விட சத்து மிகுந்த அரிசி பால்… குடித்தால் கொலஸ்ட்ரால் வருமா? வீட்ல எப்படி தயாரிக்கலாம்?

பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் மிகவும் ஏற்ற உணவாகும். தாய்ப்பால் கொடுக்காத குழந்தைகளுக்கு பார்முலா என்னும் பால் பவுடரை நீரில் கலந்து கொடுப்பது வழக்கம். அல்லது பசும்பாலை சிலர் குழந்தைக்கு கொடுக்கின்றனர். சில நேரங்களில் பசும்பால் குழந்தைக்கு ஜீரணம் ஆவதில்லை. மற்ற சில குழந்தைகளுக்கு பசும்பால் ஒரு வித ஒவ்வாமையை உண்டாக்குகிறது. அந்த நேரங்களில் தாய்மார்கள் குழந்தைக்கு எந்த உணவைக் கொடுப்பது என்று கவலை கொள்கின்றனர். திட உணவுகளை எடுத்துக் கொள்ளும் பருவத்தில் எந்த ஒரு சிரமும் இல்லை. ஆனால் திரவ உணவுகளை எடுத்துக் கொள்ளும் இந்த கால கட்டங்களில் காலையிலும் மாலையிலும் குழந்தை வயிறு நிரம்ப சாப்பிடக்கூடிய ஆகாரம் எதுவாக இருக்கும் என்று தாய்மார்கள் தேடும் நேரத்தில் அவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் ஒரு உணவு உள்ளது.

அது அரிசி பால். இதில் லாக்டோஸ் இல்லை என்பதால் குழந்தைக்கு ஒரு சிறந்த தீர்வாக இந்த உணவு உள்ளது. சிலர் தங்கள் குழந்தைக்கு பாதாம் அல்லது சோயா பாலை கொடுக்கலாம் என்று நினைக்கின்றனர். ஆனால் சில குழந்தைகள் இத்தகைய பருப்பு மற்றும் சோயா போன்றவை ஒவ்வாமல் இருக்கலாம். ஆகவே இந்த பதிவை படித்து, அரிசி பாலின் நன்மைகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.


அரிசி பால் என்பது என்ன?

அரிசியில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை பால் அரிசி பால். அரிசி ஆலையில் அரிசியை அரைத்து அதன் துகள்களை நீக்குவதன் மூலம் இது தயாரிக்கப்படுகிறது. பழுப்பு அரிசி கொண்டு தயாரிக்கப்பட்ட அரிசி மாவைக் கொண்டு இதனைத் தயாரிப்பது மற்றொரு முறையாகும். அரிசி பால் இயற்கையிலேயே இனிப்பு சுவையைக் கொண்டது. அரிசியில் உள்ள கார்போ சத்து அரைக்கப்ப்படும்போது சர்க்கரையாக மாறுவது இதன் காரணமாகும். அரிசியைப் போல் அரிசி பாலும் கார்போ சத்து அதிகம் கொண்ட ஒரு உணவாகும். பால் ஒவ்வாமை கொண்ட குழந்தைகளுக்கு அரிசி ம=பால் ஒரு வரவேற்கப்படக்கூடிய மாற்று உணவாகவும் பாதுகாப்பான உணவாகவும் உள்ளது.


ஊட்டச்சத்து

அரிசி பாலில் மிக உயர்ந்த அளவு கார்போஹைட்ரெட், சர்க்கரை மற்றும் கலோரிகள் பசும்பாலைத் தவிர வேறு எந்த பாலில் காணப்படாத அளவிற்கு உள்ளது. ஒவ்வொரு கப் அரிசி பாலிலும் கீழ் கண்ட ஊட்டச்சத்து விபரங்கள் உள்ளன..
கலோரி – 120
சர்க்கரை – 10 கிராம்
மொத்த கார்போஹைட்ரெட் – 22 கிராம்
புரதம் – 0 கிராம்
மொத்த கொழுப்பு – 2 கிராம்

குழந்தைகளுக்கு கொடுக்கலாமா?

ஒவ்வாமை பாதிப்புள்ள குழந்தைகளுக்கு அரிசி பால் ஒரு சிறந்த மாற்று உணவாக உள்ளது. அதே நேரத்தில் தாய்ப்பால் அல்லது பார்முலா என்னும் பால் பவுடர் பாலை அருந்தும் குழந்தைகளுக்கு இது ஒரு ஆரோக்கிய மாற்றாக பரிந்துரைக்கப்படவில்லை. அரிசி பால் என்பது ஒவ்வாமை ஏற்படுத்தாத சில வகை பாலில் ஒன்றாகும். ஆனால் இந்த பாலில் கால்சியம் சத்து மற்றும் வைட்டமின் பி 12 சத்து ஆகியவை இல்லை, காரணம், இது தாவர அடிப்படையைக் கொண்ட பால் அல்ல. குழந்தைக்கு எந்த ஒருவகை பாலும் ஏற்றுக் கொள்ளாத போது பெற்றோர்கள் இதனை ஒரு சிறந்த மாற்றாக தேர்வு செய்யலாம். ஆனால் ஊட்டச்சத்து நிபுணர்கள் கொழுப்பு மற்றும் இதர ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை மட்டுமே பரிந்துரைக்கின்றனர்.

rice-milk-receipe-thinatamil
rice-milk-receipe-thinatamil

நன்மைகள்

அரிசி பாலில் லாக்டோஸ் முற்றிலும் இல்லை என்பதால் ஒவ்வாமைக்கான அறிகுறிகள் இந்த பாலில் முற்றிலும் இல்லை. மேலும் பருப்பு அல்லது கொட்டைகள் மூலம் தயாரிக்கப்படும் பாலில் உள்ள அபாயங்கள் இதில் இல்லை. பால் ஒவ்வாமை உள்ள குழந்தைகளுக்கு இது ஒரு பாதுகாப்பான மாற்று உணவாக இருக்கும். உங்கள் குழந்தையின் உணவில் பால் சேர்ப்பதன் அவசியத்தை இது பூர்த்தி செய்யும். இதன் சர்க்கரை இருப்பு காரணமாக மற்ற எல்லா பால் உணவுகளை விட இனிப்பு சுவை அதிகம் கொண்டது.

வைட்டமின் மற்றும் கால்சியம் போன்றவற்றுடன் எளிதில் செறிவூட்டப்படுகிறது. இது ஒரு சைவ பால் வகையைச் சார்ந்தது. இதில் கொலஸ்ட்ரால் முற்றிலும் இல்லை என்பதால் கொழுப்பு அற்ற பாலில் இது ஒரு சிறப்பான தேர்வாக உள்ளது. வயிற்றுப் போக்கு உள்ள குழந்தைகளுக்கு பால் பொருட்களை கொடுக்கக் கூடாது, ஆனால் அத்தகைய பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு அரிசி பால் ஒரு அற்புத தீர்வைத் தருகிறது. குழந்தைக்கு எளிதில் செரிமானம் ஆவதால் இந்த அரிசி பால் உணவு குழந்தைக்கு மிகவும் பாதுகாப்பானது.

ஆபத்துகள்

அரிசி பாலில் புரதச்சத்து இல்லை, என்பதால் பசும்பாலுக்கு ஒரு சிறந்த மாற்று உணவாக இருப்பதில்லை. பசும்பால் தினசரி பருகுவதால், குழந்தைகளுக்கு ஒரு ஆரோக்கியமான அளவு புரத சத்து கிடைக்கிறது. அரிசி பால் அருந்துவதால் இந்த சத்து அவர்களுக்கு குறைகிறது. உற்பத்தியாகும் அரிசி ஒரு கனிம ரசாயன மூலகத்தைக் கொண்டுள்ளது. பெரியவர்களுக்கும் வளர்ந்த பிள்ளைகளுக்கும் இந்த ரசாயனம் எந்த ஒரு பாதிப்பையும் உண்டாக்குவதில்லை, ஆனால் குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் இந்த ரசாயனம் சேதத்தை உண்டாக்குகிறது. குறிப்பாக வெள்ளை அரசியுடன் ஒப்பிடுகையில் பழுப்பு அரிசியில் இந்த ரசாயன மூலகம் அதிகம் உள்ளது. அரிசி பாலில் உப்பு, நீர், எண்ணெய் மற்றும் அரிசி ஆகியவை பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் இதில் இரும்பு அல்லது மற்ற மினரல்கள் போன்ற ஊட்டச்சத்துகள் இல்லை. இரண்டு வயதிற்கு குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு பாலில் முழுகொழுப்பு மிகவும் அவசியம், ஆனால் அரிசி பாலில் கொழுப்பு முற்றிலும் இல்லை. அரிசி பாலில் கார்போஹைட்ரெட் மற்றும் சர்க்கரை உயர்ந்த அளவில் இருப்பதால், நீரிழிவு நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இதனை பயன்படுத்த முடியாது. அரிசி பாலில் குறைந்த ஊட்டச்சத்து மதிப்பு இருப்பதால் , 12 மாதங்களுக்கு குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு பாலுக்கு மாற்றாக எந்த ஒரு உணவும், குறிப்பாக அரிசி பால் பரிந்துரைக்கப்படுவதில்லை. மேலும் இதனை பருகுவதால் தவிர்க்க முடியாத ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு இது வழிவகுக்கிறது.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles