இன்றைய நவீன உலகில் நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படும் பொருட்களை தினசரி கடைக்கு சென்று வாங்க முடியாத நிலை நிலவுகிறது.

இதனால் அவர்கள் வாரத்திற்கு ஒரு முறை கடைக்கு சென்று உணவுப் பொருட்களை வாங்கி அவற்றை பிரிட்ஜில் சேமித்து வைத்து விடுகின்றனர்.

இன்றைய தொழில்நுட்ப உலகில் இலத்திரனியல் பொருட்கள் இல்லாத வீடே இல்லை என்று தான் சொல்ல முடியும். அதில் நமது தினசரி வாழ்விற்கு பிரிட்ஜ் இன்றியமையாத பொருளாக விளங்குகின்றது.

பிரிட்ஜில் 34 டிகிரி பாரன்ஹீட் முதல் 40 டிகிரி பாரன்ஹீட்டுக்கு இடைப்பட்ட அளவில் வெப்பநிலை இருக்குமாறு பராமரிக்க வேண்டியது அவசியமானதாகும்.

இதனால் உணவுப் பொருட்கள் நீண்ட காலம் பிரஷ்ஷாக பயன்படுத்தப்படும் வகையில் இருக்கும்.

அந்தவகையில் நாம் அன்றாடம் பாவிக்கும் காய்கறிகளை எத்தனை நாட்கள் பிரிட்ஜில் வைக்கலாம் என்று இங்கு பார்ப்போம்.

அன்றாடம் நீங்கள் பயன்படுத்தும் எவற்றை …?எவ்வளவு நாளுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்?

 • பீன்ஸ்– இதை நன்கு கழுவி, பிரிட்ஜில் வைத்திருந்து 3 – 5 நாட்களுக்குள் பயன்படுத்தவேண்டும்.
 • கத்தரிகாய்- இதை வெளியிலும் வைக்கலாம், பிரிட்ஜில் வைப்பதானால் பிளாஸ்டிக் பையில் போட்டு 3 – 4 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.
 • தக்காளி- வெளியில், பிரிட்ஜ் இரண்டு இடத்திலும் வைக்கலாம் ஆனால் ஒரு வாரத்திற்குள் பயன்படுத்த வேண்டும்.
 • கேரட்- நன்கு கழுவி, தலைப்பாகத்தை நீக்கிவிட்டு பிளாஸ்டிக் பையில் போட்டு பிரிட்ஜில் இரண்டு வாரம் வைத்திருக்கலாம்.
 • பீட்ருட்- இரண்டு வாரம் வைத்திருக்கலாம்.
 • காலிபிளவர், முள்ளங்கி – இரண்டு வாரம் பிரிட்ஜில் வைத்திருக்கலாம்.
 • வெண்டைக்காய் – 5 – 7 நாட்கள் பிரிட்ஜில் வைக்கலாம்.
 • உருளைக்கிழங்கு– வெளியில் காற்றோட்டமான இடத்தில் இரண்டு மாதம் வைக்கலாம்.
 • வெங்காயம் – வெளியில் காற்றோட்டமான இடத்தில் ஒரு மாதம் வைக்கலாம்.
 • குடமிளகாய்– நன்கு கழுவி உலர்த்திய பிறகு பிளாஸ்டிக் பையில் போட்டு ஒரு வாரம் பிரிட்ஜில் வைக்கலாம்.
 • கீரைவகைகள்– பிளாஸ்டிக் பையில் 3 – 5 நாட்கள் வைக்கலாம்.
 • முட்டகோஸ், செல்லரி – பிளாஸ்டிக் பையில் 2 வாரங்கள் வைக்கலாம்.
 • பிரோக்லி, மஷ்ரும் – அதிகபட்சம் 2 -3 நாட்கள் வைக்கலாம்.
 • பூசனிக்காய், வெள்ளரிக்காய் – ஒரு வாரம் வைக்கலாம்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here