குழந்தைகளின் முன்பு இந்த பொருட்களை வைக்க வேண்டாம்! உயிருக்கு ஆபத்து!

குழந்தைகளின் முன்பு இந்த பொருட்களை வைக்க வேண்டாம்! உயிருக்கு ஆபத்து!
குழந்தைகளின் முன்பு இந்த பொருட்களை வைக்க வேண்டாம்! உயிருக்கு ஆபத்து!

புதிதாகப் பிறந்த குழந்தைகள் மற்றும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை வளர்ப்பது பற்றி வாஸ்து சாஸ்திரத்தில் பல நடைமுறை ஆலோசனைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வாஸ்து குறிப்புகளை பின்பற்றுவது குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சியில் சாதகமான விளைவை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. இந்து வேதத்தின்படி, புதிதாகப் பிறந்த குழந்தை மற்றும் 5 வயதிற்குட்பட்ட குழந்தையின் அருகில் சில பொருட்களை வீட்டில் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால் அது கெட்ட சகுனத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அவர்களின் உயிருக்கு கூட ஆபத்தை விளைவிக்கும்.

உடைந்த பொம்மைகள்

குழந்தைகள் எப்போதும் பொம்மைகளை விரும்பி விளையாடுவார்கள். ஆனால் அதனை அடிக்கடி உடைந்து விடுகிறார்கள். இது போன்ற சமயத்தில் உடைந்த பொம்மைகளை குழந்தைகளுக்கு அருகில் வைக்க கூடாது. ஏனெனில் உடைந்த பொம்மைகள் எதிர்மறை ஆற்றலை பரப்புகின்றன. வாஸ்து சாஸ்திரத்தின் படி, இது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. உடைந்த பொம்மைகள் இருந்தால் உடனடியாக தூக்கி போடுவது நல்லது.

கண்ணாடி

வீட்டில் கண்ணாடிகள் இருப்பது சகஜம் தான். குழந்தைகள் விளையாடும் இடத்திலோ, அவர்கள் கண்ணில் படும் வகையில் கண்ணாடிகளை வைக்க கூடாது. கண்ணாடிகள் குழந்தைகளின் உருவங்களையும் ஆற்றலையும் பிரதிபலிக்கின்றன. குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்களின் உருவத்தின் பிரதிபலிப்பைத் திரும்பத் திரும்பப் பார்ப்பது அவர்களின் தூக்கத்தைக் கெடுக்கும். எனவே குழந்தைகளை கண்ணாடிக்கு அருகில் கொண்டு செல்லாமல் இருப்பது நல்லது.

முள் செடிகள்

வாஸ்து சாஸ்திரத்தின் படி, முள் செடிகளை வீட்டில் வைக்கக்கூடாது. ஏனெனில் அவை எதிர்மறை ஆற்றலை கொண்டுள்ளன. தவறுதலாகக் கூட குழந்தைககளின் கைகளில் அவை கிடைக்கக் கூடாது. வாஸ்துவை தவிர, முட்கள் குழந்தைகளின் பிஞ்சு கைகளை கிழிக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே வீட்டிலோ அல்லது வீட்டை சுற்றியோ முள் செடிகள் இருந்தால் உடனடியாக அவற்றை அகற்றுவது நல்லது.

கலைப்பொருட்கள்

வாஸ்து சாஸ்திரத்தின் படி, வன்முறை அல்லது தீய கருப்பொருள்களை சித்தரிக்கும் எதிர்மறை கலைப் பொருட்களை வீட்டில் வைக்க கூடாது. இது குழந்தைகள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும். இது குழந்தைகளுக்கு நல்லதல்ல. எனவே அவர்களின் கண்ணில் படும் வகையில் இந்த பொருட்களை வைக்க கூடாது.

கனமான டேபிள்

குழந்தை விளையாடும் பகுதியில் கனமான டேபிள் அல்லது சேர் போன்ற பொருட்களை வைக்க கூடாது. இது அவர்களின் ஆற்றல் ஓட்டத்தைத் தடுக்கலாம். இதனால் குழந்தைக்கு அசௌகரியம் ஏற்படும். மேலும் அதில் இடித்து கொள்ளவும் அதிக வாய்ப்புள்ளது. எனவே, வீட்டில் குழந்தைகள் விளையாடும் இடத்திலோ அல்லது கைப்படும் இடத்திலோ இந்த பொருட்கள் இருக்கக்கூடாது.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles