வெந்தயம் கசப்பாக இருந்தாலும் நார்ச்சத்து, புரோட்டீன், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து போன்றவை ஏராளமாக நிறைந்துள்ளது.
இத்தகைய வெந்தயத்தை இரவில் முழுவதும் நீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டு அந்நீரை குடித்து வந்தால் பல நன்மைகள் கிடைக்கும்.
Fenugreek in empty stomach
- Advertisement -
நன்மைகள்
- வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து நம் உடலின் சர்க்கரை அளவை சீராக்குவதால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது.
- வெந்தயத்தில் பொட்டாசியம் இருப்பதால், ரத்தத்தையும், இருதய துடிப்பும் கட்டுக்குள் வைப்பதுடன், கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை ரத்தில் குறைக்கிறது.
- நெஞ்சு எரிச்சல் மற்றும் அஜீரணக் கோளாறுகள், ரத்தச்சோகை போன்ற பிரச்சனைகளை குணமாக்க வெந்தயத்தை முளைக்க வைத்து சாப்பிடலாம்.
- வெந்தயக்கீரையை அரைத்து முகத்தில் அரை மணி நேரம் தடவி வர, முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், முகப்பருக்கள், சுருக்கங்கள் போன்றவற்றை நீங்கும்.
- Advertisement -
- வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து தலைமுடியின் அடிக்கால்களில் தடவி 30 நிமிடம் கழித்து குளித்தால் பொடுகு, முடி உதிர்வது குறையும்.
- மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் உடல் உபாதைகள் மற்றும் பெண்களுக்கு சாதாரணமாக ஏற்படும் இரும்புச்சத்து கோளாறு போன்ற பிரச்சனைகளை வெந்தயம் குணமாக்குகிறது.
- சிறிது வெந்தயத்தை மென்று தின்றதும், 2 சிறிய வெங்காயத்தை மோரில் நறுக்கி போட்டு அதை சாப்பிட்டு வர உடல் எடை குறையும்.
- சிறிதளவு வெந்தயத்துடன் 2 வெற்றிலையை சேர்த்து நன்கு மென்று சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி, வயிற்றுக் கடுப்பு குணமாகும்.
- ஒரு துண்டு இஞ்சியுடன் சிறிதளவு வெந்தயத்தை அரைத்து சாப்பிட்டால் உடலில் உள்ள பித்தம் விலகும்.
- உணவில் வெந்தயம் அடிக்கடி சேர்த்து வந்தால் மலச்சிக்கல் வராது. அதுவே 1 டம்ளர் மோரில் வெந்தயம், சீரகப்பொடி கலந்து குடித்தால் வாய்வு தொல்லை நீங்கும்.