உடல் தெம்பில்லாத வாலிபர்கள், பூப்பெய்திய பெண்கள், புது மணத்தம்பதிகள், நீடித்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என சகலருக்கும் மருந்தாக கொடுக்கப்படுவது நாட்டுக் கோழி கறி.
அன்றைய காலத்தில் உறவினர்கள் வந்துவிட்டாலே, கோழி அடித்து அறுசுவை உணவுடன் ஆரோக்கியத்தை கொடுத்து அனுப்பிய மரபு நம் தமிழர்களுடையது.
சளி, இருமல் எனச் சற்றுத் தளர்ந்தாலே, மிளகு சேர்த்த நாட்டுக் கோழி ரசம் வைத்துக் கொடுத்து, நோய் நீக்கிய குடும்ப மருத்துவச்சிகள் அக்காலத்தில் ஏராளம்.
நாட்டுக்கோழிக் குழம்பு குழைத்த சாதத்தைச் சாப்பிட்டு, வீரத்துடன் வாழ்ந்த மனிதர்கள் அப்போது அதிகம்.
தசைகளுக்குத் தெம்பைக் கொடுக்கவும், நரம்புகளுக்கு உரத்தை அளிக்கவும் நாட்டுக் கோழியினங்கள் உதவுகின்றன.
சுவாச நோய்களுக்கும் நாட்டுக் கோழி சிறந்த மருந்து, கோழிக்கறி சாப்பிட்டால், வாத, பித்த, கப நாடி வகைகளில், பித்த நாடி மேலோங்கி இருக்கும் என்று நாடி விஞ்ஞானம் சொல்கிறது.