foot care health
சமையலறைக்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில பொருட்கள் உடலில் ஏற்படும் பிரச்சனைகளுகு நன்மை தருவதாக அமையும். இதில் உப்பு தண்ணீர் அதிகளவில் கால்களில் படுவதால் பாதத்தில் வெடிப்பு ஏற்படும். அவ்வாறு ஏற்படும் வெடிப்பு புண்ணாக மாறி வலியை உண்டாக்கும். இதை சரி செய்ய நம் சமையலறையில் இருக்கும் சில பொருட்கள் மருந்துகளாக வேலை செய்யும். அப்படிபட்ட 10 பொருட்களை பார்ப்போம்
லிஸ்டரின் மற்றும் வினிகர்
1 கப் லிஸ்டரின், 1 கப் வினிகரில் 2 கப் தண்ணீருடன் சேர்த்து கலந்து, 15 நிமிடங்கள் பாதத்தில் ஊற்றிய பிறகு படிகக்கல்லை வைத்து தேய்த்துவிடுங்கள். பின் சுத்தமான தண்ணீர்ல் கழிவி துடைத்து இதை தினமும் செய்து வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
ஆற்றல்மிக்க நச்சரிவகையும் மற்றும் ஆல்கஹாலும் லிஸ்டரினில் உள்ளதால் காலின் விரலில் இருக்கும் கிருமிகளை அழித்து தோலை ஆற்றலாக பாதுகாக்கிறது. வினிகரில் இருக்கும் அமிலங்கள் காலில் இருக்கும் உலர்ந்து மற்றும் இறந்த தோலை மென்மையாக மாற்றி சுத்தப்படுத்தும்.
அரிசி மாவு, தேன் மற்றும் வினிகர்
3 தேக்கரண்டி அரிசிமாவு, தேன் 1 தேக்கரண்டி, ஆப்பிள் சைடர் வினிகர் 2-3 துளிகள் கலந்து பேஸ்ட்டாக கால்களின் தேய்த்து, இதை வாரத்தில் 2-3 முறை செய்து வந்தால் கிருமிகளை அழித்து தோலை மென்மையாக்குகிறது.
வாழைப்பழம்
இரு வாழைப்பழங்களை குழைத்து காலில் தேய்த்து 20 நிமிடங்களுக்கு பிறகு துடைத்து வந்தால் வாழைப்பழத்தில் இருக்கும் வைட்டமின் ஏ, பி6, சி ஆகியவை தோலில் இருக்கும் நெகிழ்ச்சித்தன்மையை பாதுகாத்து பராமரிக்கிறது.
தேன்
தினமும் தூங்க செல்வதற்கு முன் ஒரு கப் சூடான் நீரில் 1 கப் தேனைக் கலந்து 20 நிமிடங்கள் காலில்
தடவி மசாஜ் செய்து படிக்கல் பயன்படுத்தி துடைத்துவிடுங்கள். தேனில் நச்சுயிரி எதிப்பி, பூஞ்சை எதிர்ப்பி, கிருமி நாசினி ஒட்டுண்ணி எதிர்ப்பி போன்ற குணங்களும், வைட்டமின்கள், கால்சியம், பொட்டாசியம் சல்ஃபர், பாஸ்ந்பேட் போன்ற கனிமங்களும் உள்ளன. இவை உட்புற திசுக்களில் இருந்து வெளிப்புற தோலிற்கு நீரை அளித்து, கிருமிகளை அழிக்கிறது.
தாவர எண்ணெய்
தூங்குவதற்கு முன் கால்களை கழுவி துணியா துடைத்து பிறகு குதிகால் மற்றும் கால்விரல்களில் தாவர எண்ணெயையை தடவி சாக்ஸை போட்டு கொண்டு தூங்கினால், தாவர எண்ணெயில் இருக்கும் புரதமின் A, D, E போன்ற வைட்டமின்கள் புதிய செல்களை உருவாக்கி தோலிற்கு பாதுகாப்பை அளிக்கிறது.
விக்ஸ்
படுக்கும் முன் பாதங்களில் விக்ஸினை தடவி 5 நிமிடங்கள் மசாஜ் செய்தபின் சாக்ஸினை அணிந்து கொண்டு காலையில் மிதமான தண்ணிரில் கழுவி வந்தால் விக்ஸில் இருக்கும் கற்பூரம், யூகலிப்டஸ், மெண்டால் ஆகியவை தோலில் ஈரப்பதத்தை தக்க வைத்து குளிர்ச்சியை அளிக்கிறது.
பேக்கிங் சோடா
3 தேக்கரண்டி பேக்கிங் சோடாவை நீரில் கலந்து பாதங்களை நன்கு ஊறவைத்து பின் தேய்த்து கழுவ வேண்டும். வாரத்தில் இருமுறை செய்தால் பாத்தில் இருக்கு அழுக்குகளை நீக்குவதோடு பாதங்களுக்கு அழகை தரும்.
கற்றாழை ஜெல்
தொடர்ந்து 4-5 நாட்களுக்கு சூடான நீரினால் காலினை படிகக்கல் பயன்படுத்தி துடைத்து, கற்றாழை ஜெல்லை கொண்டு பாதங்களில் தடவிவந்தால், வைட்டமின்கள் ஏ, சி, ஈ ஆகிய ஆக்ஸிஜனேற்ற பண்புகள் கொண்டிருக்கும். கொழுப்பு, கேப்செஸ்டரால், β- சைமோஸ்டெரால் மற்றும் லுப்புல் ஆகியவை அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருக்கின்றன. இவை காயத்திற்கு நல்ல மருந்தாக அமையும்.
வாசலின் மற்றும் எலுமிச்சை சாறு
பாத வெடிப்பிற்கு மிக முக்கியமான காரணம் வறண்ட சருமம். வறட்சியால் சரும செல்கள் பலமிழந்து இருக்கும் போது கொழுப்புப் படிவங்கள் எளிதில் உடைந்து வெடிப்பை உண்டாக்குகிறது. தினமும் இரவில் வாசலினை தடவி விட்டு படுத்தால் பாத வெடிப்பு குணமாகும்.
பேதியுப்பு (எப்சம் உப்பு)
அரை கப் எப்சம் உப்பினை தேவையான சூடான நீரில் கலந்து 15 நிமிடங்கள் பாதங்களில் தேய்த்து 2-3 வாரங்கள் தொடர்ந்து செய்து வந்தால், காலில் ஏற்படும் வீக்கத்தை குறைத்து தோலை மென்னையாக்குகிறது.



