சமீப காலங்களில் மாரடைப்பு என்பது மிக சகஜமாகிவிட்டது. ஒரு காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்த இதய பிரச்சனைகள் இப்போது பலரை பாடாய் படுத்தத் தொடங்கியுள்ளன. ஆரோக்கியமான மனிதர்களை கூட இது விட்டுவைப்பதில்லை. சிலர் துரதிஷ்டவசமாக இதனால் உயிரிழகிறார்கள். இன்றைய அவசர வாழ்க்கைமுறை, ஆரோக்கியமற்ற உணவுமுறை, அலுவலகம், வீடு என அனைத்து இடங்களிலும் இருக்கும் இறுக்கம் என இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.
இவற்றை போலவே கொழுப்பு கல்லீரலும் இதய நோய்க்கு காரணமாகலாம் என கூறப்படுகின்றது. கொழுப்பு கல்லீரல் பிரச்சனையை பலர் லேசாக எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், இதன் காரணமாக பல பெரிய நோய்கள் நம்மை தாக்கக்கூடும். அவற்றில் இதய நோய்களும் அடங்கும்.
கொழுப்பு கல்லீரல் மற்றும் இதய நோய் இடையே உள்ள தொடர்பு என்ன?
கொழுப்பு கல்லீரல் காரணமாக, இதய நோய் அபாயம் கணிசமாக அதிகரிக்கிறது. கல்லீரல் நோய் முக்கியமாக மது அருந்துவதாலும், ஆரோகியமற்ற உணவுகளை உட்கொள்வதாலும் ஏற்படுகினறது. கொழுப்பு கல்லீரல் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். மோசமான உணவுப் பழக்கம் உள்ளவர்களுக்கும், மது அருந்தாதவர்களுக்கும் இது அதிகமாக ஏற்படுவதை சமீப காலங்களில் பார்த்து வருகிறோம்.
கொழுப்பு கல்லீரல் பிரச்சனையில் கல்லீரலில் கொழுப்பு சேரத் தொடங்குகிறது. இதன் காரணமாக இதயம் தொடர்பான கடுமையான நோய்கள் ஏற்படக்கூடும்.
கொழுப்பு கல்லீரலால் ஏற்படும் பிரச்சனைகள்
கல்லீரலில் கொழுப்பு சேர்வதால், இன்சுலின் உற்பத்தி செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது.
இதனால், கல்லீரலில் வீக்கம் ஏற்படுகின்றது.
இது மட்டுமின்றி, லிப்பிட்களுடன் சேர்ந்து வளர்சிதை மாற்றத்தில் பல பிரச்சனைகளும் ஏற்படக்கூடும்.
இதன் காரணமாக, பெருந்தமனி தடிப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகள் போன்ற பல தீவிர நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது.
தவறான வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் இந்த நோய்களை அதிகரிக்கக்கூடும் என்பது கசப்பான உண்மையாகும்.
போதுமான உடல் செயல்பாடுகள் இல்லாமல் இருப்பது இந்த நோயை இன்னும் அதிகரிக்கும்.
ஆரோக்கியமற்ற உணவுகளால் இந்த நோயின் தீவிரம் அதிகரிக்கின்றது.
தூக்கமின்மையும் கொழுப்பு கல்லீரல் நோய்க்கு மிக ஆபத்தாகலாம்.
கொழுப்பு கல்லீரல் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும்.
இரவில் நேரம் கடந்து உண்ணக்கூடாது.உடல் செயல்பாடுகள் முறையாக இருக்க வேண்டும்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும்.
போதுமான அளவு தூக்கம் இருக்க வேண்டும்.
அவ்வப்போது கல்லீரல் சோதனை செய்துகொள்ள வேண்டும்.