
குளிர்சாதன பெட்டி என்று அழைக்கப்படும் பிரிட்ஜை, நாம் சமைத்த பொருட்களையும், காய்கறிகள் பழங்கள் போன்றவற்றையும், பல்வேறு வகை உணவுப் பொருட்களையும் சேமித்து வைக்க பயன்படுத்துகிறோம். பல நாட்களுக்கு அவை கெட்டுப் போகாமல் இருப்பதற்காக, பயன்படுத்தப்படும் இந்த ஃப்ரிட்ஜ் நமது வாழ்க்கையை ஓரளவுக்கு எளிதாக்கியுள்ளது. நேரத்தை மிச்சப் படுத்துவதற்காக, அடுத்த நாளுக்கு தேவையான காய்கறிகள் பழங்கள் போன்றவற்றை துண்டங்களாக வெட்டி சேமித்து வைக்கும் பழக்கமும் நம்மில் பலருக்கு உள்ளது. சில பொருட்களை ஃப்ரிட்ஜில் சேமித்து வைத்து பயன்படுத்துவதால் பல்வேறு ஆரோக்கிய பாதிப்புகள் (Health Tips) ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
சாதம்
பொதுவாகவே ஃப்ரிட்ஜில் சமைத்த உணவுகளை, சேமித்து வைத்து, சூடுபடுத்தி பயன்படுத்துவதால், அதன் ஊட்டச்சத்துக்கள் அழிந்து போவதோடு, பல்வேறு உடல்நல பாதிப்புகளும் ஏற்படும். அதிலும் சாதத்தை ஃப்ரிட்ஜில் வைத்து, மீண்டும் சூடு படுத்தி அருந்துவதால், செரிமான பிரச்சனைகள் ஏற்படும் என்று, வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
காபி பவுடர்
காபி பவுடரை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கும். இருக்க வேண்டும் என்று நினைத்து, அதில் வைத்து நாம் பயன்படுத்துகிறோம். ஆனால் காபி பவுடர் அல்லது கொட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பதால், அது ஈரப்பதத்தை உறிஞ்சி அதன் தன்மை மாற வாய்ப்பு உள்ளது என்கின்றனர் நிபுணர்கள். அதோடு குமட்டல் வாந்தி போன்ற செரிமான பிரச்சனைகளும் ஏற்படலாம்.
வெங்காயம்
குளிர்சாதன பெட்டியில் வெங்காயத்தை வைப்பது, அதில் பூஞ்சையை ஏற்படுத்தி, பாக்டீரியாக்கள் உருவாக காரணமாகும். இதனால் செரிமான பிரச்சனை ஏற்படலாம். அதோடு வெங்காய வாசனை மற்ற பொருட்களுக்கு பரவி, அதன் சுவையையும் மனத்தையும் கெடுக்கும் வாய்ப்பு உண்டு. பலருக்கு வெங்காயத்தை நறுக்கி ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகப்படுத்தும் பழக்கம் உள்ளது. இதனை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
பூண்டு
பூண்டை எப்போதுமே ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது. அதனை காற்றோட்டமான சூழலில் தான் வைக்க வேண்டும். வெங்காயத்தைப் போலவே பூண்டை ஃப்ரிட்ஜில் வைப்பதாலும் பூஞ்சை ஏற்பட்டு பாக்டீரியாக்கள் உண்டாகும்.
மசாலாக்கள்
மசாலாக்கள் பிரெஷ் ஆக இருக்க வேண்டும் என நினைத்து, பல குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கின்றனர். எனினும் மசாலாக்களை, பிரிட்ஜில் சேமித்து வைப்பதால், அதன் ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு, வறண்டு போய், அதன் சுவையும் கெட்டுவிடும்.
பிரட்
பிரட்டை குளிர்சாதன பெட்டியில் வைக்க கூடாது. இதனால் பிரட் வளர்ந்து போய், அதன் சுவை பாதிக்கப்படுவதோடு, அதனை சூடு படுத்தி சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியமும் பெரிதும் பாதிக்கப்படும்.
தேன்
சுத்தமான தேனை அரை வெப்ப நிலையில் வைத்தாலே போதும். எந்த சூழ்நிலையிலும் அது கெட்டுப் போகாத ஒரு பொருள். நாம் இப்போது கடையில் வாங்கும் தேன், பலவிதப் பொருட்கள் கலக்கப்பட்டு வருகிறது. எனினும் இதனையும் கூட பிரிட்ஜில் வைக்க கூடாது. ஃப்ரிட்ஜில் வைக்கும் போது அதன் சுவை மாறுவதோடு, அதன் ஊட்டச்சத்துக்கள் முற்றிலுமாக அழிந்து விடும்.



