
ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கிரக பெயர்ச்சிகள் முக்கியமான ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றன. அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன.கிரகங்களின் சேனாதிபதியாக கருதப்படும் செவ்வாய் இந்த மாதம் பெயர்ச்சியாக உள்ளார். மார்ச் 15 ஆம் தேதி மாலை 6:22 மணிக்கு செவ்வாய் சனியின் ராசியான கும்பத்தில் பெயர்ச்சியாவார். ஏப்ரல் 23 வரை அவர் இந்த ராசியில் இருப்பார்.
சனிபகவானின் ராசியான கும்பத்தில் செவ்வாயின் பெயர்ச்சி முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. இதம் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும். இவர்களுக்கு பண வரவு அதிகமாகும். வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேஷம்
கும்பத்தில் செவ்வாயின் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை அளிக்கும். வேலை தேடிக் கொண்டிருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு இப்பொழுது நல்ல வேலை கிடைக்கும். ஏற்கனவே நல்ல வேலையில் இருப்பவர்களுக்கு பணியிடத்தில் ஊதிய உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். பண வரவு அதிகம் ஆகும். இதனால் நிதிநிலை மேம்படும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் அதிகமாகும். போட்டி தேர்வுகளை எழுதும் மாணவர்கள் வெற்றி பெறுவார்கள்
ரிஷபம்
செவ்வாயின் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு புதிய வாய்ப்புகளை கொண்டு வரும். பணியிடத்தில் மேலதிகாரிகள் மற்றும் உடன் பணி புரிபவர்களின் பரிபூரண ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கு இப்பொழுது லாபம் அதிகரிக்கும். வெளிநாடு செல்ல விரும்பவர்களுக்கு இப்பொழுது அதற்கான வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும்.
சிம்மம்
கும்ப ராசியில் செவ்வாயின் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு பலவித நன்மைகளை அளிக்கப் போகின்றது. உங்கள் தைரியமும் ஆற்றலும் அதிகரிக்கும். அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் புதிய பணிகளை இப்பொழுது தொடங்கலாம். ஒப்போது தொடங்கப்படும் பணிகளால் லாபம் உண்டாகும். இப்போது செய்யப்படும் முதலீடுகள் மூலம் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும்
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி பல செல்வங்களை அள்ளித் தரும். உடல் நலம் மேம்படும். சட்ட சிக்கலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும். பொறுமையாக காத்திருந்தால் அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். உறவினர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி அற்புதமாக இருக்கப் போகிறது. இந்த பெயர்ச்சி காலத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு, சமூகத்தில் மதிப்பு மரியாதை என அனைத்தும் கிட்டும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவை பெறுவீர்கள். வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். குழந்தை வரம் வேண்டி காத்திருக்கும் பெற்றோருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பண வரவு அதிகமாகும். பணத்தை சேமிப்பதில் வெற்றி காண்பீர்கள்.



