Saturday, September 7, 2024

தினமும் 3 பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் 7 நன்மைகள்!

- Advertisement -
தினமும் 3 பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் 7 நன்மைகள்!
தினமும் 3 பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் 7 நன்மைகள்!

உடலை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தாலோ அல்லது நோய்வாய்ப்படாமல் இருக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டாலோ உடனே நம் டயட் லிஸ்டில் இருக்க வேண்டிய ஒரு முக்கியமான உணவு பொருள், பேரிச்சம்பழம். பார்ப்பதற்கும் சுவைப்பதற்கும் சிறியதாக இருந்தாலும் இதில் அடங்கியுள்ள நன்மைகள் உடலில் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்தும் என மருத்துவர்களால் கூறப்படுகிறது.

இவற்றை இனிப்பிற்காக மட்டுமில்லாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்காகவும் டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம் என்று கூறுகின்றனர் மருத்துவர்கள். குறிப்பாக ஒரு நாளைக்கு மூன்று பேரிச்சம்பழம் சாப்பிட வேண்டும் என்பதும் அவர்களின் கூற்றாக இருக்கிறது. அப்படி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா? இங்கு பார்ப்போம்.

- Advertisement -

புரதச்சத்து:

“கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது” என்று கூறுவர். அதுபோல பேரிச்சம் பழங்கள் பார்ப்பதற்கு அளவில் சிறியதாக இருக்கலாம் ஆனால் இதனுள் எண்ணிலடங்கா புரதச்சத்துக்கள் இருக்கிறது. பொட்டாசியம், மக்னிசியம், வைட்டமின் பி6 மற்றும் பைபர் சத்துக்கள் போன்றவை ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்தையும் பேணி காக்க உதவும். உடலில் இருக்கும் அணுக்களை பாதுகாக்கும் சத்துக்களும் பேரிச்சம்பழத்தில் உள்ளதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு மருத்துவ ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

செரிமான பிரச்சனைகள்:

பேரிச்சம் பழத்தில் கவனிக்க கூடிய வகையில் இருக்கும் இன்னொரு சத்து, செரிமான கோளாறுகளை நிவர்த்தி செய்வதாகும். இதில் அதிக பைபர் சத்துக்கள் இருப்பதால் இயற்கையாகவே மலச்சிக்கலை நீக்க உதவுவதாக மருத்துவர்கள் தரவில் கூறப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள ஒரு பிரபல பல்கலைக்கழகம் சிலரை நடத்திய ஆய்வில், அவர்களுக்கு பேரிச்சம்பழம் சாப்பிட்ட ஒரு சில நாட்களிலேயே குடல் ஆரோக்கியம் மேம்பட்டிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

ஆற்றல்:

உடலுக்கு இயற்கையாகவே ஆற்று தேவைப்படும் போது பேரிச்சம் பழத்தை சாப்பிடலாம் என்கின்றனர் மருத்துவர்கள். இதில் இருக்கும் கார்போஹைட்ரேட், இயற்கை சர்க்கரை கனிமங்களான குளுக்கோஸ் உள்ளிட்டவை உடல் நீண்ட நேரம் செயல்பட ஆற்றல் அளிக்கிறது. இதனால் தினமும் உடற்பயிற்சி செய்பவர்கள் அதற்கு முன்னர் பேரிச்சம்பழம் சாப்பிடலாம் என்று கூறுகின்றனர் மருத்துவர்கள்.

இருதய செயல்பாடு:

இதயத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது ஒட்டுமொத்த உடல் நலத்திற்கும் நல்லதாகும். தினமும் மூன்று பேரிச்சம் பழமும் சாப்பிடுவது உடலில் உள்ள கலோரி அளவை குறைக்கவும் இதய நோய் வராமல் காப்பாற்றவும் உதவுவதாக ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதனால் கெட்ட கொழுப்பு எனப்படும் LDL கொலஸ்ட்ரால் அளவு குறைந்து, இதய நோய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

மூளைக்கு நல்லது:

நமது மூளைக்கு நன்றாக செயல்படுவதற்கு மூல காரணமாக இருப்பது நான் சாப்பிடும் உணவில் இருக்கும் நியூட்ரியன் சத்துக்கள்தான் எனக்கூறப்படுகிறது. அந்த வகையில் பொட்டாசியம் சத்துக்கள் அதிகம் உள்ள பேரிச்சம் பழங்களை சாப்பிடும் போது மூளையில் உள்ள நரம்புகள் சரியாக இயங்கும் என்று கூறப்படுகிறது. நினைவுத்திறனும் இதனால் அதிகரிக்கலாம் என்று மருத்துவர்கள் தரப்பில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.

எலும்புக்கு வலு சேர்க்கும்:

நமக்கு வயது ஏற ஏற நமது எலும்புகளும் வலுவிழக்க ஆரம்பிக்கலாம். பேரிச்சம்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம் உள்ளிட்ட இயற்கை சத்துக்கள் இருக்கின்றன. எலும்புகளை வலுவாக்க உதவுவதாக கூறப்படுகிறது.

ரத்த சர்க்கரை அளவு:

சர்க்கரை நோய் இருப்பவர்கள் கூட பேரிச்சம்பழத்தை தங்களின் டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம் என்ற ஒரு கருத்து உலாவி வருகிறது. இது உண்மைதான் என்று கூறுகின்றனர் மருத்துவர்கள். இதில் இருக்கும் இயற்கை சர்க்கரை, ரத்ச சர்க்கரை அளவை குறைக்கும் என்றும் கூறப்படுகிறது.

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Hot this week

365 நாட்களுக்கு பின் வரும் சுக்ராதித்ய யோகம்: இந்த ஜாக்போட்டில் தலை தூக்கும் ராசிகள்.

பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் பெயர்ச்சியை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகின்றன.ஜோதிட சாஸ்த்திரத்தின் படி,...

சனி பெயர்ச்சி: மகாராஜ பொற்காலம், அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்கு

ஜோதிடத்தின் படி, சனி அனைத்து கிரகங்களிலும் மெதுவாக நகரும் ஒரு கிரகமாகும்....

இன்றைய ராசிபலன் – 07 செப்டம்பர் 2024 எதிர்பாரா பணவரவைப் பெறப்போகும் ராசிகள் .

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உள்ளது....

18 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் சூரியன்-கேது: இனி ராஜாவாக வாழப்போகும் ராசிகள்.

பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் பெயர்ச்சியை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகின்றன.ஜோதிட சாஸ்த்திரத்தின் படி,...

Tamil Trending News

Leo vs GOAT எந்த படம் முதல் நாளில் அதிக வசூல் பெற்றது?

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான தி கோட் திரைப்படம், நேற்று வெளியானது....

GOAT Movie review : விஜய்யின் The GOAT படம் மாஸா? தூசா? விமர்சனம் இதோ!!

வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடித்திருக்கும் படம், தி கோட் (The...

வெளியீட்டிற்கு முன்னதாகவே சாதனைகள் படைக்கும் தளபதி விஜய்யின் “தி கோட்” திரைப்படம்

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் நடிக்கும் 'தி கோட்' திரைப்படம்...

பிக்பாஸ் சீசன் 8-ல் போட்டியாளராக சிவகார்த்திகேயனின் நண்பர்!! யார் தெரியுமா?

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஹிட் ஆன ஷோவாக இருக்கிறது, பிக்பாஸ். இந்த...

எகிறும் சுகர் லெவலை அதிரடியாய் குறைக்கும் இன்சுலின் இலை… பயன்படுத்துவது எப்படி!

இன்றைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் காரணமாக, நீரிழிவு...

GOAT படத்தின் ஆதி முதல் அந்தம் வரை!! அப்படி என்ன இதுல ஸ்பெஷல்? இதோ பாருங்க..

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம், தி கோட் (The...

இன்னும் 21 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி.. டென்ஷனால் கதறப் போகும் ராசிகள் இவைதான்

sukra peyarchi-2024 சுக்கிரன் பெயர்ச்சி துலாம், ரிஷபம் ராசிகளுக்கு அதிபதியான சுக்கிரன்...

Related Articles

error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link