ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றுவதோடு, சில சமயங்களில் சுப யோகங்கள் அல்லது ராஜயோகங்களை உருவாக்கும். அப்படி உருவாக்கும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தெரியும்.
அந்த வகையில் ஒரு அரிய சுப யோகமானது சுமார் 500 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ளது. அது தான் பஞ்ச திவ்ய ராஜயோகம். இந்த ராஜயோகமானது மாளவ்ய ராஜயோகம், புதாதித்ய ராஜயோகம், சச ராஜயோகம், கஜலட்சுமி ராஜயோகம், லட்சுமி நாராயண ராஜயோகம் ஆகிய 5 சுப யோகங்கள் ஒரே வேளையில் உருவாகும் போது ஏற்படும். இந்த யோகத்தினால் ஒருவர் அபரிமிதமான செல்வத்தை பெறுவதோடு, அதிர்ஷ்டத்தின் ஆதரவையும் பெறுவார்கள்.
மேலும் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தையும் பெறுவார்கள். இப்போது 500 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள பஞ்ச திவ்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
பஞ்ச திவ்ய ராஜயோகமானது மிதுன ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலனைத் தரும். முக்கியமாக வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியுடன், முன்னேற்றத்தையும் பெறக்கூடும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். மேலும் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகளும் வெற்றிகரமாக மீண்டும் தொடங்கப்படும் மற்றும் இந்த வேலைகளால் எதிர்காலத்தில் நல்ல பலன் கிடைக்கும். ஏற்கனவே செய்துள்ள முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு பஞ்ச திவ்ய ராஜயோகமானது அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும். இந்த யோகத்தால் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள். பணியிடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவைகள் கிடைப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. இதனால் உங்களின் நிதி நிலை இருமடங்கு அதிகரிக்கும். நிறைய பொருள் இன்பங்களைப் பெறுவீர்கள். புதிய வாகனம் மற்றும் வீடு வாங்குவதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு பஞ்ச திவ்ய ராஜயோகமானது வாழ்க்கையையே எதிர்பாராத அளவில் சிறப்பாக மாற்றும். திருமணமாகி நீண்ட காலம் குழந்தைக்காக காத்துக் கொண்டிருந்தால், இந்த யோக காலத்தில் குழந்தை பாக்கியத்தைப் பெறலாம். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபத்தைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. வேலை தேடிக் கொண்டிருந்தால், நல்ல வேலை வாய்ப்பு தேடி வரும். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் அனைத்து காரியங்கள் அல்லது வேலைகளிலும் வெற்றிகளைப் பெறக்கூடும். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள்.