
நம் வாழ்வில் எண்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அப்படி எண்களை மையமாக கொண்டு கணிக்கப்படும் ஜோதிடத்திற்கு எண் கணிதம் என்று பெயர். ஒருவரின் எதிர்காலத்தை இந்த எண் கணிதத்தைக் கொண்டு தெரிந்து கொள்ள முடியும்.
இன்றைய காலக்கட்டத்தில், இந்த எண் கணிதம் மிகவும் பிரபலமான ஒன்றாகிவிட்டது. ஜோதிடர்களும் எண்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலத்தைப் பற்றி கணிக்க முடியும் என்று நம்புகிறார்கள். எதிர்காலத்தை மட்டுமின்றி, ஒருவரின் பலம் மற்றும் பலவீனத்தைப் பற்றியும் இந்த கண்களைக் கொண்டு கண்டறிய முடியும்.
எண் கணிதத்தில் மொத்தம் 1 முதல் 9 வரையிலான எண்கள் உள்ளன. இந்த ஒவ்வொரு எண்ணும் ஒரு கிரகத்திற்கு சொந்தமானது என கூறப்படுகிறது. எனவே, அது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சரி, இப்போது 09 ஜூன் 2024 முதல் 15 ஜூன் 2024 வரையிலான காலகட்டத்திற்கான எண் கணித பலன்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
எண் 1
1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பேச்சு மற்றும் நடத்தையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பாதகமான சூழ்நிலைகளில் நீங்கள் மிகவும் பொறுமையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
வேலை சம்பந்தமான பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால், அவசரப்பட்டு எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். வார இறுதியில், உங்கள் உடல்நலம் திடீரென மோசமடைவதால் உங்களின் முக்கியமான வேலைகள் சில தடைபடலாம். இந்த வாரத்தில் நீங்கள் மருத்துவத்திற்காக நிறைய பணம் செலவழிக்கலாம்.
எண் 2
2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 2. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பணியிடத்தில் மதிப்பையும், மரியாதையையும் பெறுவார்கள். உங்கள் செயல்திறன் நன்றாக இருக்கும். பண விஷயத்தில் எந்த விதத்திலும் அலட்சியமாக இருக்க வேண்டாம்.
உங்கள் செலவுகளை நீங்கள் கண்காணிக்க வேண்டும். உங்கள் வருமானத்தை மனதில் வைத்து செலவு செய்தால் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம். உறவுகளைப் பொறுத்தவரை இந்த வாரம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். காதலிப்பவர்களுக்கும், திருமணமானவர்களுக்கும் ரொமான்டிக்காக இருக்கும்.
எண் 3
3,12,21,30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 3. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த வாரம் குடும்ப உறுப்பினர்களால் மன அழுத்தத்திற்கு உள்ளாகலாம். அவசரத்தைத் தவிர்த்து, அமைதியாக வேலை செய்வது நல்லது. இல்லாவிட்டால் உங்கள் கடின உழைப்பு வீணாகிவிடும்.
வெளியூரில் வேலை செய்ய விரும்பினால், அதற்கான முயற்சிகளை இந்த வாரத்தில் தொடங்குவது நல்லது. பணத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுவதைத் தவிர்க்கவும். தகுந்த நேரம் வரும்போது உங்கள் பிரச்சனை கண்டிப்பாக தீரும். விரைவில் பணம் சம்பாதிக்க வேண்டுமென்று தவறான பாதையில் செல்ல வேண்டாம். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
எண் 4
4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 4. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் அலுவலகத்தில் பாதகமான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும். உங்கள் வேலையை விட்டு விலகுவது குறித்தும் யோசிக்கலாம். இருப்பினும், அவசரப்பட்டு இதுபோன்ற முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
அதிகரிக்கும் வேலை அழுத்தம் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையையும் பாதிக்கும். இரண்டிற்கும் இடையில் சமநிலையை பேணினால் நல்லது. வேலையுடன் உங்கள் உறவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள். நிதி ரீதியாக இந்த வாரம் அதிர்ஷ்டமாக இருக்கும். உங்கள் பணம் நீண்ட காலமாக எங்காவது சிக்கியிருந்தால், இந்த வாரத்தில் உங்கள் பணத்தை திரும்பப் பெறலாம்.
எண் 5
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 5. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, நிலுவையில் உள்ள பணிகளை எளிதாக செய்து முடிப்பீர்கள். உங்கள் முக்கிய கவலைகள் நீங்கும். வாரத்தின் நடுப்பகுதியில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள்.
திடீரென்று குறுகிய தூரம் பயணம் செய்யலாம். உங்கள் துணையுடன் உங்களுக்கு கருத்து வேறுபாடு இருந்தால், இந்த வாரத்தில் உங்களுக்கிடையேயான அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வரும். பணம் தொடர்பான விஷயங்களில் கவனக்குறைவைத் தவிர்க்க வேண்டும், இல்லையெனில் நீங்கள் பெரிய சிக்கலில் சிக்கிக்கொள்ளலாம்.
எண் 6
6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு காதலைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். உங்களின் நம்பிக்கை அதிகரிக்கும். வேலை தேடிக் கொண்டிருந்தால், எதிர்பார்த்த வேலை கிடைக்கும். ஆனால் அதற்கு சற்று கடினமாக உழைக்க வேண்டும். வியாபாரம் செய்தால் இந்த வாரம் உங்களுக்கு பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
எண் 7
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 7. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்களின் திருமண வாழ்வில் சில குழப்பங்கள் ஏற்படும். இதைத் தவிர்க்க வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரத்தை செலவிடுங்கள். காதல் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், உங்கள் விருப்பம் நிறைவேறும். உங்கள் நிதி நிலையை வலுப்படுத்த நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும்.
இந்த வாரத்தில், வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. விரைவில் உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த வாரம் பரபரப்பாக இருக்கும். கடின உழைப்பு மற்றும் தன்னம்பிக்கையின் அடிப்படையில் நீங்கள் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் நஷ்டம் வரலாம். அவசரப்பட்டு எந்த முடிவுகளை எடுக்காமல் இருந்தால் நல்லது.
எண் 8
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். அதுவும் பணிபுரிபவர்கள் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெற கடுமையாகப் போராட வேண்டியிருக்கும், ஆனால் உங்கள் கடின உழைப்புக்கு சரியான பலன்கள் நிச்சயம் கிடைக்கும்.
வேலையில் மிகவும் பிஸியாக இருப்பீர்கள். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட முடியாது. பணம் தொடர்பான ஏதேனும் விஷயம் உங்களை தொந்தரவு செய்தால், இந்த வாரத்தில் உங்கள் பிரச்சனை தீர்க்கப்படலாம். வார இறுதியில் நல்ல பணத்தைப் பெறுவீர்கள்.
எண் 9
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 9. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த வாரம் தங்கள் எண்ணங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். இல்லாவிட்டால் உங்கள் பிரச்சனைகள் மேலும் அதிகரிக்கும். அலுவலகத்தில் அதீத நம்பிக்கையினால் மிகவும் சங்கடப்பட வேண்டியிருக்கும். வேலையுடன் உங்கள் நடத்தையையும் நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும்.
கூட்டு வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த வாரம் மிகவும் சாதகமாக இருக்கும். நீங்கள் அதிக லாபம் ஈட்டுவீர்கள், உங்கள் வணிகமும் வளரும். உறவுகளைப் பொறுத்தவரை இந்த வாரம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். திருமணமாகாதவராக இருந்தால் உங்கள் விருப்பப்படி வாழ்க்கைத் துணையைப் பெறலாம். ஆரோக்கியம் மேம்படும், மனநலமும் சிறப்பாக இருக்கும்.