நம் உடலில் அன்றாடம் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா?.. வியப்பான தகவல் இதோ..!

மனிதனாக பிறந்த அனைவருக்கும் நமது உடலின் மீது அதிக அக்கறை இருக்கும். நல்ல உணவுகளையும், உடற்பயிற்சிகளையும் பின்பற்றினாலே நாம் ஆரோக்கியத்துடன் வாழலாம். அப்படி நமது உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

  • பொதுவாகவே அனைவருக்கும் உமிழ் நீரை பார்த்தால், அருவருப்பு வரும். ஆனால் ஒரு நாளுக்கு, 0.75 – 1.5 லிட்டர் வரை, வாயில் உமிழ் நீர் சுரக்கிறது. ஒரு மனிதனின் வாழ்நாள் முழுவதும் சுரக்கும் உமிழ் நீரை வைத்து, இரண்டு நீச்சல் குளத்தையே நிரப்பலாமாம்.
  • உடல் முழுவதும், ஆக்சிஜனை கொண்டு சேர்ப்பது, ரத்த சிவப்பணுக்கள். இவை, நரம்பு வழியாக, ஒரு முறை உடல் முழுவதும் சுற்றி வர, ஒரு நிமிஷம் போதும்.
  • பெரும்பாலும் அனைவருக்கும் கறுப்பு நிறத்தில் தான், கருவிழி இருக்கும். என்ன தான் கறுப்பாக இருந்தாலும், பிறக்கும்போது, நீல நிறத்தில் தான் இருக்கும். வெளிச்சத்தில் இருக்கிற, புற ஊதா ஒளிக்கற்றை தான், குழந்தைகளின் கண்ணுக்கான நிறத்தை கொண்டு வரும்.
  • நம் கை, கால்களில் நகம் வெட்டின மாதிரி இருக்கும்; கொஞ்ச நாளிலேயே வளர்ந்துவிடும். ஆனால், வேரிலிருந்து முழுமையாக நகம் வளர, கிட்டத்தட்ட ஆறு மாதம் ஆகும்.
  • பொதுவாகவே, அனைவருக்கும் அடிக்கடி தோல் உரியும். வாழ்நாள் முழுவதும், உடம்பிலிருந்து மொத்தமாக உரிந்து விழும் தோலின் எடை, கிட்டத்தட்ட, 18 கிலோவாம்.
  • உடலில் மிக நீளமான உறுப்பு, தோல் தான். நன்றாக வளர்ந்த ஆணின் தோலை முழுதாக நீட்டி அளந்தால், 20 அடிக்கு வரும்.
  • நம் சிறுநீரகத்தில், 1 மில்லியன், அதாவது,10 லட்சம், ‘பில்டர்’கள் உள்ளன. சிறுநீரகத்தால், ஒரு நிமிஷத்துக்கு, 1.3 லிட்டர் ரத்தத்தை சுத்தம் செய்ய முடியும்.
  • பெண்களின் கருப்பையில், ஐந்து லட்சம் கருமுட்டைகள் உருவாகும்; ஆனால், 400 முட்டைகளுக்கு தான், குழந்தையாக உருவாக வாய்ப்பு கிடைக்கும்.
  • நம் மேல் வரும், வியர்வை நாற்றம், ஒவ்வொருவரின் அடையாளம். இரட்டையர்களைத் தவிர, உலகத்தில் அனைவருக்கும், இந்த நாற்றம் மாறுபடுமாம்.
  • நம் உடலில் ஐந்து லட்சம் வியர்வை சுரப்பிகள் உள்ளன. இந்த வியர்வை சுரப்பிகள் ஒவ்வொன்றும், தினமும், 400 மி.லி., வியர்வையை சுரக்கின்றன.
  • சுற்றுப்புறத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும், 90 சதவீத விபரங்கள், பார்வை மூலமாக தான் கிடைக்கிறது.
Healthy-Body-thinatamil
Healthy-Body-thinatamil
  • உங்களுக்கு நீங்களே, ‘கிச்சு கிச்சு’ மூட்ட முடியாது.
  • ஒரு பவுண்ட், அதாவது, 454 கிராம், சிமென்ட் கான்கிரீட், அதே எடையிலான மனித எலும்பு என, இரண்டையும் வைத்து சோதனை செய்யபட்டது. அதில், மனித எலும்பு, கான்கிரீட்டை விட, நான்கு மடங்கு வலுவானது என, நிரூபணமாகி உள்ளது.
  • எதையாவது சுவைக்க வேண்டுமெனில், அந்த பொருள், முதலில், உமிழ் நீரில் கரைய வேண்டும். இல்லையெனில், நம்மால் சுவையை உணர முடியாது.
  • சராசரியாக, ஒரு ஆண், ஒரு நாளைக்கு, 10 மில்லியன், அதாவது, 1 கோடி, விந்தணுவை உற்பத்தி செய்ய முடியும்.
  • மனிதர்கள், வெப்ப ரத்த உயிரிகள் என்பது, அனைவருக்கும் தெரியும். நம் உடல், 36.5 முதல் 37.5 டிகிரி செல்ஷியஸ், வெப்ப நிலையை தாங்கும். உடல் வெப்பத்தை வைத்து, 3.5 லிட்டர் தண்ணீரை கொதிக்க வைக்க, 30 வினாடி போதும்.
  • நாம் எவ்வளவு உயரமாக இருந்தாலும், துாங்கும்போது, 1 செ.மீ., உயரம் குறைந்து விடுவோம். காரணம், நம் முதுகெலும்பில் உள்ள குறுத்தெலும்புகள், துாங்கும்போது சுருங்கி விடும்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles