உலகத்தில் இருக்கும் அனைவருக்கும் பிடித்த மற்றும் அவசியமான ஒரு விஷயமென்றால் அது தூக்கம்தான்.
உலகில் வெற்றிகரமானவர்கள் என்று அடையாளப்படுத்தப்படுபவர்களின் தூக்க முறையானது சாதாரண மக்களுடன் ஒப்பிடும் போது வித்தியாசமானதாக உள்ளது.
பில் கேட்ஸ்
பில் கேட்ஸை உலகில் தெரியாதவர்கள் யாருமில்லை. உலக பணக்காரர்களில் இவரின் பெயரை தவிர்த்து ஒரு பட்டியலை ஒருபோதும் தயாரிக்க முடியாது.
மிகப்பெரிய தொழிலதிபரும், முதலீட்டாளராக உள்ளார். 1975 ஆம் ஆண்டில், கேட்ஸ் மற்றும் பால் ஆலன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை நிறுவினார்.
இது உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாக மாறியது. இவர் 12 மணி முதல் 7 மணி வரை என ஒரு நாளுக்கு இவர் 7 மணி நேரம் தூங்குகிறார்.
பராக் ஒபாமா அமெரிக்காவின் 44 வது ஜனாதிபதியாக பணியாற்றிய ஒரு உலக பிரபலமான அரசியல்வாதி ஆவார். அமெரிக்க வெள்ளை மாளிகையை அலங்கரித்த முதல் கருப்பின ஜனாதிபதி இவர்தான்.
இவர் ஒருநாளைக்கு 1 மணி முதல் 7 மணி வரை என 6 மணி நேரம் தூங்குகிறார்.
பெஞ்சமின் பிராங்க்ளின்
அமெரிக்காவை உருவாக்கியவர்களில் பெஞ்சமின் பிராங்க்ளின்-க்கு பெரும்பங்கு உள்ளது.
பல்துறை அறிஞராக இருந்த பிராங்க்ளின் எழுத்தாளர், அரசியல் கோட்பாட்ட்டாளர், விஞ்ஞானி என பல துறைகளில் நிபுணராக இருந்தார்.
இவர் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை என 7 மணி நேரம் தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார்.



