குடிக்கும் பாட்டில்களில் பல டிசைன் மற்றும் வண்ணங்கள் வந்தாலுமே, பீர் பாட்டில்களின் நிறம் எப்போதும் பச்சை அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும். இதற்கு பின்னால் என்ன காரணம் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.
முதல் பீர் நிறுவனமானது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக வரலாற்றின் பக்கங்களில் பதிவு செய்யப்பட்ட தகவல்கள் கூறுகின்றன.
அதாவது பீர் (Beer) ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படுகிறது. உலகின் முதல் பீர் நிறுவனம் பண்டைய எகிப்தில் திறக்கப்பட்டதாக கூறப்படுகின்றன.
அந்த நேரத்தில் பீர் பானம், நிறம் ஏதும் இல்லாத சாதாரண பாட்டில்களில் விற்கப்பட்டது. இருந்தாலும், சூரியனின் கதிர்கள் அந்த பாட்டில்களில் ஊடுருவி செல்வதால் பீர் சீக்கிரம் கெட்டுப் போனது.
வீரியம் நிறைந்த அல்ட்ரா-வயலட், அதாவது புற ஊதா கதிர்கள் காரணமாக, பீர் பானத்தில் ஒரு விதமான கெட்டுப் போன வாசனை வர ஆரம்பித்தது. அதன் பின்னர் இந்த பிரச்சனையிலிருந்து விடுபட ஒரு தீர்வு வேண்டும் என தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது.
சூரிய ஒளியின் காரணமாக பீர் கெட்டுப் போவதை தடுக்க, பீர் தயாரிப்பாளர்கள் ஒரு யோசனை செய்தனர். சூரியனின் புற ஊதா கதிர்களால் பாதிக்கப்படாத வகையிலான பாட்டிலில் பீர் நிரப்ப முடிவு செய்தார்.
இதற்கு, பழுப்பு நிற பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டு அவை சிறந்த பலன்களைக் கொடுத்தன. மேலும், பல வருடங்களுக்குப் பிறகு, இரண்டாம் உலகப் போரின்போது பழுப்பு பாட்டில்கள் கிடைக்காததால் பீர் பாட்டில்கள் பச்சை பாட்டில்களில் அடைக்கப்பட்டன.
பீர் நிறுவனங்கள் பின்னர் பச்சை நிற பாட்டில்களையும் பயன்படுத்த தொடங்கின. ஏனெனில் இவற்றில் கூட சூரியனின் வலுவான கதிர்கள் ஏற்படுத்தும் பாதிப்பு மிக மிக குறைவு.