நடிகர் அஜித்திற்கு மூளையில் கட்டியா…? அறுவை சிகிச்சை முடிந்தது? – பரபரப்பு தகவல்கள்!

நடிகர் அஜித்திற்கு மூளையில் கட்டியா...? அறுவை சிகிச்சை முடிந்தது? - பரபரப்பு தகவல்கள்!
நடிகர் அஜித்திற்கு மூளையில் கட்டியா…? அறுவை சிகிச்சை முடிந்தது? – பரபரப்பு தகவல்கள்!

சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு நடிகர் அஜித் குமார் இன்று வருகை தந்தார். தொடர்ந்து, வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக நடிகர் அஜித் குமார் மருத்துவமனை வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், தற்போது அவருக்கு மூளைப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தொலைக்காட்சி ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. நடிகர் அஜித் குமாருக்கு மூளையில் சிறிய கட்டி இருந்ததாகவும், அதனை நான்கு மணிநேர அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அதனை வெற்றிகரமாக அகற்றியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரளா, மதுரை ஆகிய இடங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட மருத்துவ நிபுணர்களால் நடிகர் அஜித் குமாருக்கு இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, மூளைப்பகுதியில் ‘ஸ்டன்ட்’ அதாவது ‘ஸ்கிரீன்’ வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் போனில் தொடர்பு கொண்டு அஜித் குமாரை நலம் விசாரித்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், அஜித் குமாரின் மருத்துவ சிகிச்சை குறித்தோ, உடல்நிலை குறித்த எவ்வித அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொலைக்காட்சி ஊடகங்களில் இதுகுறித்து செய்திகள் வெளியானதால் ரசிகர்கள் மத்தியில் சற்று பரபரப்பு நிலவி வருகிறது. மேலும், நடிகர் அஜித் குமார் விரைவில் குணமடைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் எனவும் ரசிகர்கள் சிலரின் வேண்டுதல்களும் சமூக வலைதளங்களில் காண முடிகிறது.

நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடைசியாக கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரியில் துணிவு திரைப்படம் வெளியானது. அதன்பின், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் திரைப்படம் நடிக்க ஒப்பந்தமானார் அஜித் குமார். முதலில் விக்னேஷ் சிவனின் திரைப்படத்தில் நடிக்க இருந்த நிலையில், சில காரணங்களால் விக்னேஷ் சிவன் அதில் இருந்து விலகினார்.

அதை தொடர்ந்து, இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்திற்கு விடாமுயற்சி என பெயரிடப்பட்டது. தொடர்ந்து நீண்ட நாள்களாக படம் குறித்த எந்த அப்டேட்டும் வராத நிலையில், ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். சமீபத்தில், அதிமுக முன்னாள் எம்எல்ஏ சைதை துரைசாமியின் மகனான வெற்றி துரைசாமி உயிரிழந்ததை தொடர்ந்து, அவருக்கு நடிகர் அஜித் குமார் அஞ்சலி செலுத்த வந்திருந்தார். வெற்றி துரைசாமியும், நடிகர் அஜித் குமாரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles