மகா சிவராத்திரி 2024: சனி-சுக்கிரன் சேர்க்கையில் 3 ராசிக்காரர்களுக்கு அபூர்வ பலன்..!

மகா சிவராத்திரி 2024: சனி-சுக்கிரன் சேர்க்கையில் 3 ராசிக்காரர்களுக்கு அபூர்வ பலன்..!
மகா சிவராத்திரி 2024: சனி-சுக்கிரன் சேர்க்கையில் 3 ராசிக்காரர்களுக்கு அபூர்வ பலன்..!

மகா சிவராத்திரி மார்ச் 8 ஆம் தேதி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட இருக்கும் நிலையில், அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் வெகுவிமரிசையாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த சூழலில் இந்த மகா சிவராத்திரி 3 ராசிகளுக்கு ஆபூர்வ பலன்களை கொடுக்க இருக்கிறது. சிவ பெருமானுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடைபெறுவதாக நம்பப்படும் இந் நல்லநாள் இதுவரை நல்ல காலத்தை எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு புது வழியை காட்ட இருக்கிறது. அதனால், மகா சிவராத்திரி நாளில் விரதம் இருந்து சிவ பெருமானை பக்தர்கள் தரிசிக்க இருக்கின்றனர். இப்போது வர இருக்கும் மகா சிவராத்திரிக்கு ஒரு நாளுக்கு முன்னதாக அதாவது மார்ச் 7 ஆம் தேதியன்று சனி மற்றும் சுக்கிரன் சேர்க்கையும் நடைபெற இருக்கிறது.

சுக்கிரன் கும்ப ராசிக்கு செல்கிறார். மார்ச் 31 வரை சுக்கிரன் இந்த ராசியில் இருப்பார். இந்த ராசி பெயர்ச்சி பலரது வாழ்க்கையை பிரகாசமாக்கும் நம்பப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தின்படி, மஹாசிவராத்திரி அன்று சனி-சுக்கிரன் கூட்டணி 3 ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியாக பெரும் நன்மை பயக்கும். அந்த அதிர்ஷ்டகார ராசிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம். அவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்பதையும் தெரிந்து கொள்வோம்.

ரிஷபம் –

சுக்கிரனின் சஞ்சாரத்தால் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு செல்வ வளம் பெருகும். எங்காவது பணம் சிக்கியிருந்தால் அந்த சிக்கலுக்கு வழி பிறக்கும். குடும்பத்தில் நல்ல செய்தி வரலாம். ஆரோக்கியம் மேம்படும், திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உடன்பிறந்தவர்களுடன் மகிழ்ச்சியான தருணங்களை கொண்டாடும் வாய்ப்பு உள்ளது.

மிதுனம் –

இந்த ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உருவாகும். அதாவது முதலீடு, தொழில் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்துவீர்கள். அதற்காகன சரியான நேரமும் கூட. முதலீடுகள் லாபகரமாக இருக்கும். செலவுகள் குறைய வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் உங்கள் வங்கி இருப்பு தொடர்ந்து அதிகரிக்கலாம். நோய்கள் விலகும். பணியில் உங்களுக்கு இருக்கும் சதிகாரர்களின் தந்திரங்களை முறியடிப்பீர்கள். தொழிலில் அதிக முன்னேற்றம் அடையலாம். தைரியத்துடனும் பலத்துடனும் வெற்றியை அடைவீர்கள்.

துலாம் –

உத்தியோகத்தில் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். வேலை தொடர்பான பலன்கள் மேலும் அதிகரிக்கலாம். எதிர்பாராத லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம். அதிக கவனம் செலுத்துவதால் குழந்தைகள் படிப்பில் சிறப்பாக செயல்படுவார்கள்.நல்ல காலமும் நேரமும் கூடி வருவதால், இந்த சரியான சந்தர்ப்பத்தை மூன்று ராசிக்காரர்களும் பயன்படுத்திக் கொள்ளும்பட்சத்தில் உங்கள் வாழ்க்கையில் அடுத்தகட்டத்துக்கு முன்னேறுவீர்கள். இனி வாழ்க்கையும் பிரகாசமாகும்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles