Welcome to an exciting future! A 2-seater electric coupé, Renault TREZOR Concept is the beginning of a new cycle of concept cars and explores the styling and technology of future models. With its welcoming style and its services geared towards driving pleasure, this electric GT embodies our vision of future mobility and our automotive passion.
From – Renault Official site
Renault TREZOR
ட்ரசோர் (TREZOR) என்றால் பிரெஞ்சு மொழியில் புதையல் என்று அர்த்தம். இந்த கார், ரெனோ நிறுவனத்திற்கான ஒரு புதையல் தான். பணத்தை கொட்டும் புதையல். இந்தாண்டு அக்டோபரில் நடக்கவுள்ள பாரீஸ் மோட்டார் கண்காட்சியில் இந்த கான்செப்ட்டின் இறுதி வடிவத்தை ரெனோ வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் புதிய ட்ரசோர் காரை ரெனோ நிறுவனத்தின் தலைமை வடிவமைப்பாளரான லாரன்ஸ் வான் டென் அக்கர் வெளியிட்டுள்ளார். 2012ம் ஆண்டு முதல் ரெனோ தயாரித்து வெளியிட்டுள்ள பெரும்பாலான கார்களுக்கு இவர்தான் டிசைனிங் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரசோர் காரின் முன்பக்கத்தில் ஆங்கில எழுத்தான சி வடிவத்தில் முகப்பு விளக்குகள் உள்ளது. அதை சுற்றி பெரியளவிலான காற்றை உள்ளிழுக்கும் அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. காரின் முகப்பு விளக்குகளை இணைக்கும் விதமாக ஸ்லிம்கிரோம் க்ரில் பெரியளவிலான ரெனோ நிறுவன இலச்சினையுடன் முன்பக்கத்தில் மத்திய பகுதியில் உருவாக்கப்பட்டுள்ளது. காரின் பக்கவாட்டிலிருந்து அளவீடு செய்தால், ட்ரோசரின் உயரம் 1080 மி.மீ உள்ளது. இந்த காருக்கு, 20 இஞ்ச் அளவு கொண்ட சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. காரின் மொத்த உள்கட்டமைப்பும் தெரியும் விதமாக காரின் ரூப் செயல்பாடு உள்ளது.
மின்சார திறன் பெற்ற இந்த காரின் மோட்டார் ரெனோவின் பார்மூலா இ ரேஸிங் காரிலிருந்து பெறப்பட்டுள்ளது. 2 வித மோட்டார்களில் இருந்து இந்த மின்சார மோட்டாருக்கு சக்தியூட்டப்படுகிறது. துவக்க நிலையில் இருந்து 100 கி.மீ வேகத்தை வெறும் 4 நொடிகளில் எட்டிப்பிடித்து விடுகிறது.
இந்த கார் அதிகப்பட்சமாக 345 பிஎச்பி பவர் மற்றும் 380 என்.எம் டார்க் திறன் வழங்குகிறது. இந்த காரில் இருக்கும் பேட்டரிகள் மீண்டும் ரீசார்ஜ் செய்யும் திறன் பெற்றவை. ஒரு பிரேக் ஆற்றல் மூலம் இயக்கப்படும் இந்த திறன் பார்முலா ஈ காரிலும் உள்ளது. ரெனோ ட்ரசோர் கார், சாலையில் செல்லும்போது நிச்சயமாக பலரது கண்ணை பறிக்கும். இதனுடைய டிசைன் மற்றும் ஸ்டைல் திறன், ட்ரசோர் காரை எதிர்கால வாகன துறைக்கான முக்கிய தயாரிப்பாக பார்க்கப்படுகிறது. விலை விவரம் அறிவிக்கப்படவில்லை.