மீந்து போன பழைய உணவை பலர் சாப்பிடுவது இல்லை. இனி அப்படி சாப்பிடுவதற்கு செய்த சப்பாத்தி மீந்து போயிருந்தால் தூக்கி எறிந்துவிட வேண்டாம்.
அதை சக்கரை நோயாளிகள் சாப்பிட்டால் சக்கரையை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
மீந்து போன பழைய சப்பாத்தி இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் மற்றும் இரத்த அழுத்தத்தை சீராக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக மீந்து போன உணவுப் பொருட்கள் தீங்கு விளைவிக்கக்கூடியவை என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது.
ஆனால் சப்பாத்தி விஷயத்தில் அது பொய். சப்பாத்தியானது 15 மணிநேரம் வரை வைத்திருந்து சாப்பிட ஏற்ற உணவுப் பொருள்.
இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவெனில், இப்படி மீந்து போன சப்பாத்தியைக் கொண்டு பல புதிய உணவுகளைத் தயாரித்து சாப்பிடலாம்.
இப்போது ஏன் மீந்து போன சப்பாத்தி ஆரோக்கியமானது என்பது குறித்து காண்போம்.
மீந்து போன சப்பாத்தியின் நன்மைகள்
ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த கோதுமை மாவில் இருந்து தயாரிக்கப்படுவது தான் மீந்து போன சப்பாத்தியும்.
இதில் நார்ச்சத்து அதிகமாகவும், க்ளைசீமிக் இன்டெக்ஸ் மற்றும் சோடியம் குறைவாக இருப்பதால், ஸ்நாக்ஸாக சாப்பிட ஏற்றது.
சர்க்கரை நோய்க்கு நல்லது
- இரவில் சுட்டு மீந்து போன சப்பாத்தி சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
- ஏனெனில் இது இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவும். ஆகவே உயர் இரத்த சர்க்கரை அளவைக் கொண்டவர்கள், மீந்து போன சப்பாத்தியை சாப்பிட யோசிக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை.
குறிப்பு
- மீந்து போன பழைய சப்பாத்தி என்றதும் இரண்டு மூன்று நாட்களுக்கு முன் சமைத்த சப்பாத்தியைக் குறிப்பிடவில்லை.
- சப்பாத்தி சுட்டு 15 மணிநேரத்திற்குள், சுத்தமான இடத்தில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இந்நிலையில் உள்ள சப்பாத்தியை மட்டுமே சாப்பிடலாம்.
- ஒருவேளை மிகவும் பழைய பூஞ்சைகள் வரக்கூடிய நிலையிலான சப்பாத்தியை சாப்பிட்டால், ஆரோக்கியம் தான் மோசமாகும். எனவே கவனமாக இருங்கள்.