#Bigil #Vijay #Nayantara #Yogi Babu #Vivek #Kathir #Indhuja #Jackie Shroff #A.R.Rahman #Atlee Kumar
Bigil Review தளபதி விஜய் படங்கள் என்றாலே உலகம் முழுவதும் தமிழர்களிடத்தில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் விஜய்யுடன் இணைந்து தெறி, மெர்சல் என இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்த அட்லீ பிகில் மூலம் மூன்றாவது முறையாக கைக்கோர்க்க, இன்று உலகம் முழுவதும் பிகில் சுமார் 4000 திரையரங்குகளுக்கு மேல் ரிலிஸாகியுள்ளது. எங்கு திரும்பினாலும் இன்று ஒரே பிகில் பேச்சு தான், அப்படியான பிகில் சத்தம் ஓங்கி ஒலித்ததா? என்பதை பார்ப்போம்.

பிகில் திரை விமர்சனம் Bigil Review – Vijay excels in his career-best movie

கதைக்களம் பிகில் படம்
மைக்கல் விஜய் தன் ஏரியா பசங்களுக்கு ஒன்று என்றால் முதல் ஆளாக ஓடி வந்து உதவக்கூடியவர். தன்னால் முடிந்த அளவிற்கு தன் ஏரியா புல்லிங்களை பெரியாளாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்றார்.

அப்படியிருக்க அவரை ஒரு கும்பல் எப்போதும் கொலை செய்ய துரத்துகிறது. அப்போது எதிர்ப்பாராத விதமாக தமிழ்நாடு பெண்கள் அணி கோச் விஜய்யின் நண்பர் தாக்கப்படுகின்றார்.

அதனால் அந்த புட்பால் டீமிற்கு கோச் செய்ய முடியாமல் போக, அந்த இடத்திற்கு ஒரு டைமில் ஒட்டு மொத்த ஸ்டேட்டையும் கலக்கிய விஜய்யை கோச் ஆக சொல்கிறார்.

ஆனால், அவரை ஏற்க மறுக்கும் பெண்கள், அவர்கள் மனதில் வென்றதோடு, அந்த அணியையும் விஜய் எப்படி வெல்ல வைக்கின்றார் என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்
விஜய்..விஜய்..விஜய் மட்டும் தான், அவர் ஒருவரை நம்பி தான் படம் என்றாலும், இத்தனை நட்சத்திரங்கள் இருந்தும் விஜய் மட்டுமே தான் முழுப்படத்தையும் தோளில் சுமக்கின்றார். ஆட்டம், பாட்டம் என்று ஜாலியாகவும் சரி, தன் புல்லிங்கோ முன்னேற வேண்டும் என்று கத்தியை எடுத்த ராயப்பனாகவும் சரி தொட்டதெல்லாம் கோல் தான்.

ஆனால், ராயப்பன் கதாபாத்திரம் அப்பாவாக இல்லாமல் அண்ணனாக காட்டியிருந்தால் இன்னும் தூளாக இருந்திருக்கும். ஏனெனில் விஜய்க்கு வயதான கதாபாத்திரம் கொஞ்சம் கூட செட் ஆகவில்லை, அதிலும் நயன்தாரா அவரை அப்பா என்று கூப்பிடுவதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாதவை.

Bigil Movie Download
Bigil Movie Download

படம் பெண்களுக்கு முக்கியத்துவம் கொண்டது, சிங்கப்பெண்ணே பாடல் எல்லாம் பட்டித்தொட்டியெல்லாம் ஹிட் அடித்தாலும் படமாக பார்க்கும் போது அங்கும் இங்கும் எமோஷ்னல் ஒர்க் ஆகியுள்ளதே தவிர படம் முழுவதும் ஒரு நிறைவு இல்லை.

அதிலும் படத்தின் முதல் பாதி ஒரு கட்டத்தில் பொறுமையை சோதித்து அட புட்பால் மேட்சுக்கு போங்கப்பா என்று சொல்ல வைக்கின்றது. அதே நேரத்தில் மேட்ச் வரும்போது எட்ஜ் ஆப் தி சீட் வருவோம் என்று பார்த்தால் மாற்றி மாற்றி கோல் அடிக்கிறார்களே தவிர நமக்கு எந்த ஒரு ஆர்வமும் வரவில்லை, இதற்கு சக்தே இந்தியாவும் ஒரு காரணம்.

படத்தில் தன்னை கோச்சாக ஏற்றுக்கொள்ள விஜய் போடும் போட்டி, ஆசிட் அடிக்க பெண்ணிடம் பேசும் காட்சிகள், கிளைமேக்ஸில் தன் அணியை திட்டி வெறுப்பேற்றுவது, அதிலும் அந்த குண்டம்மா விஷயம் என இரண்டாம் பாதி முழுவதும் கைத்தட்டலுக்கு குறைவில்லாத காட்சிகள். இவை முதல் பாதியிலும் இருந்திருக்கலாம்.

Bigil Movie Download
Bigil Movie Download

மேலும் விஜய் காமெடி செய்யும் போது சென்னை ஸ்லாங்கில் பேசுவது, சீரியஸாக பேசும் போது நார்மல் தமிழில் பேசுகிறார். புல்லிங்கோவை கௌரவப்படுத்துகிறோம் என்று தொடர்ந்து தமிழ் சினிமா கிண்டல் மட்டுமே செய்து வருகின்றது.

படத்தின் மிகப்பெரிய பலம் விஷ்ணுவின் ஒளிப்பதிவு, செம்ம கலர்புல் காட்சிகள், ரகுமானின் பின்னணி இசை மாஸுக்கு கைக்கொடுக்கவில்லை என்றாலும் எமோஷ்னல் காட்சிக்கு சூப்பர். ரூபன் இன்னும் கொஞ்சம் கத்திரி போட்டு இருக்கலாம்.

க்ளாப்ஸ்
படத்தின் இரண்டாம் பாதி, அவை தான் விஜய் ரசிகர்களுக்கான படம்.

படத்தின் டெக்னிக்கல் விஷயங்கள்.

டீசரில் மோசமாக தெரிந்த சிஜி காட்சி திரையில் நன்றாகவே உள்ளது.

பல்ப்ஸ்
படத்தின் முதல் பாதி, ராயப்பன் கதாப்பாத்திரம் இன்னும் அழுத்தமாக இருந்திருக்கலாம்.

கதிர், நயன்தாரா, ஆனந்த் ராஜ் என பல நட்சத்திரங்கள் எதற்கு என்றே தெரியவில்லை.

போட்டிகளில் சுவாரஸ்யம் கூட்டியிருக்கலாம்.

மொத்தத்தில் தெறி, மெர்சலை ஒப்பிடுகையில் பிகில் சத்தம் கொஞ்சம் குறைவு தான்.

Bigil Movie rating
Bigil Movie Rating: 4/5