Thursday, January 28, 2021
Home மருத்துவம் ஆரோக்கியம் குளிக்கும் போது செய்யும் இந்த தவறுதான் பல நோய்களுக்கு காரணமாம்!

குளிக்கும் போது செய்யும் இந்த தவறுதான் பல நோய்களுக்கு காரணமாம்!

குளியல் சமன் குளிர்வித்தல், குளிர்வித்தலோ மருவி குளியல் ஆனது. மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம். இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் நேங்கியிருக்கும். காலை எழுந்ததும் இந்த வெப்பக்கழிவை உடலில் இருந்து நீக்குவதற்காகக் குளிர்ந்த நீரில் குளிக்கிறோம்.

அதனால் குளிப்பதற்கு முன்பாக நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

வெந்நீரில் குளிக்க கூடாது.

எண்ணெய் குளியலின் போது மட்டுமே மிதமான வெந்நீர் பயன்படுத்த வேண்டும்.
குளிர்ந்த நீரை அப்படியே மொண்டு தலைக்கு ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும் தவறு.
நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால்,
இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலை.
எதற்கு இப்படி. காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி, விழி மற்றும் காது வழியாக வெளியேறும்.
நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும்.
இப்பொழுது நம் முன்னோர்களின் குளியல் முறையை கண்முன்னே கொண்டு வாருங்கள்.
குளத்தில் ஒவ்வொறு படியாக இறங்குவார்கள். காலில் இருந்து மேல் நோக்கி நினையும்.

- Advertisement -

வெப்பம் கீழ் இருந்து மேல் எழுப்பி இறுதியில் தலை முங்கும் போது கண், காது வழியே வெப்பக் கழிவு வெளியேறிவிடும்.

- Advertisement -

இறங்கும் முன் ஒன்று செய்வார்கள் கவனித்ததுண்டா??
உச்சந்தலைக்கு சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்துவிட்டு இறங்குவார்கள்.

இது எதற்கு… உச்சந்தலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது. சிரசு எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வோண்டும்.எனவே உச்சியில் சிறிது நினைத்து விட்டால் குளத்தில் இறங்கும் போது கீழ் இருந்து மோலாக எழும் வெப்பம் சிரசை தாக்காமல் காது வழியாக வெளியேறிவிடுகிறது. வியக்கவைக்கிறதா.

நம் முன்னோர்களின் ஒவ்வொறு செயலுக்கும் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.

குளித்துவிட்டு சிறிது நேரம் ஈரத் துணியோடு இருப்பது மிக நல்லது.
அதே ஈரத்துணியோடு நாம் அரச மரத்தை சுற்றி வந்தால் 100% சத்தமான பிராணவாயுவை நமது உடல் தோல் மூலமாக கிரகித்துக்கொள்ளும்.

பித்தம் நீங்கி பிராணவாயு அதிகரித்தால் அனைத்து நோய்களும் ஓடிவிடும். புத்தி பேதலிப்பு கூட சரியாகும்.

குளியலில் இத்தனை விடையங்கள் இருக்கும் போது. குளியல் அறை என்றாலே அதில் ஒரு ஹீட்டர் வேர, இப்படி சுடு தண்ணீரில் சோப்பும், ஸ்சேம்பையும் போட்டு குளிச்சிட்டு வந்தா நாம நோயாளியா இல்லாம வேற எப்படி இருப்போம்.

குளிக்க மிக நல்ல நேரம் – சூரிய உதயத்திற்கு முன்,குளிக்க மிகச் சிறந்த நீர் – பச்சை தண்ணீர்.

உலர்ந்த பூந்தி கொட்டையைக் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்

பேன், பொடுகு தொல்லையிலிருந்து விடுபட, வாரமிருமுறை தலையில் தேய்த்துக் குளிக்கலாம்.தினசரி குளியலில் சோப்புக்குப் பதிலாக இந்த பூந்தி கொட்டையை தேய்த்துக் குளித்தால், தோல் நோய்கள் நம்மை அண்டாது.

உலர்ந்த பூந்தி கொட்டையைக் உடைத்து, கொட்டையை நீக்கி, அதன் தோலை வெதுவெதுப்பான நீரில் ஊற வச்சுக்கோங்க. ஊறவைத்த தண்ணீரில், சீயக்காய் சேர்த்து தலைக்கு குளிச்சீங்கன்னா, உங்க கூந்தல் பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். முடி உதிரலும் குறையும்.

பூந்தி கொட்டையின் மற்ற பயன்கள் வெள்ளி பாத்திரங்கள், ஆபரணங்களைச் சுத்தம் செய்யலாம். இதனைப் பயன்படுத்தி பட்டுத் துணிகளைத் துவைத்தால், சாயம் போகாமல் பட்டு ஜரிகையை பளிச்சென்று இருக்கும்.

வீட்டில் ஏற்கனவே வேறு குளியல் பொடி உபயோகப்படுத்துபவர்கள் பத்தில் ஒரு பங்கு பூந்திக்கொட்டை பொடியை கலந்துகொள்ளலாம். பூந்திக்கொட்டையை லேசாக வறுத்து, மேற்தோலை உரித்து, இடித்து வைத்துக் கொண்டு அவ்வப்போது சோறு வடித்த கஞ்சி அல்லது சீயக்காய் தூளுடன் கலந்து தலையில் தேய்த்து, அலசி, குளித்துவரலாம்.

நாம் பயன்படுத்தும் பலவிதமான சோப்புகளில், சுண்ணாம்பு சேர்க்கப்படுவதால் தோல் வறட்சி, வியர்வை கோளங்களில் அடைப்பு, ரோமக்கால்களில் அடைப்பு, ரோமங்கள் வெடித்து, தோலின் மென்மையான புற அடுக்கு தடித்து, வீங்கி நிறம் மாறல், நகமும், தோலும் இணையும் இடத்தில் வெடிப்பு ஏற்பட்டு, அங்கு பூஞ்சை மற்றும் பாக்டீரியா கிருமிகள் வளருதல் என பல தொல்லைகள் ஏற்படுகின்றன.

வீட்டில் கொசுகளை விரட்ட

நாட்டில் அதிக அளவில் தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதற்கு காரணமான கொசுவை ஒழிப்பதில் அரசு மும்முரம்காட்டி வருகிறது . இருந்தபோதிலும்,கொசுவினால் ஏற்படும் டெங்குவை கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமம் நிலவி வருகிறது.

டெங்கு வந்தவுடன் என்ன செய்வது என்பதை விட, வருமுன் காப்பது சிறந்தது அல்லவா….எனவே அதற்கு காரணமான கொசுவை முதலில் ஒழிப்போம்….

கொசுவை ஒழிக்க என்ன செய்ய வேண்டும் ?

ஒரு லிட்டர் விளக்கெண்ணெய் வாங்கி கொள்ளுங்கள்.
பிறகு 250 மில்லி சுத்தமான வேப்பை எண்ணெய் வாங்கி கொள்ளுங்கள்.
இரண்டு எண்ணெய்களையும் ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
பிறகு மாலை 6 மணி முதல் நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு அறையிலும் ஒரு அகல் தீபத்தில் இந்த எண்ணெயை ஊற்றி , பஞ்சு திரிக்கொண்டு தீபமேற்றுங்கள் !!!
நீங்கள் கற்பனை செய்ய இயலாது ஆனால் உண்மை, கொசுக்கள் உங்கள் அறையை அண்டவே அண்டாது !!!
விளக்கு நின்று நிதானமாக எரியும் !!!
இது உடலுக்கு மிகவும் உகந்தது !!! கொசு விரட்டி சுருள்கள் மற்றும் இயந்திரங்கள் உடலுக்கு கேடு விளைவிக்கும் !!!

இன்று டெங்கு காய்ச்சல் , மலேரியா , சிக்குன்குனியா போன்ற புது புது வைரஸ் காய்ச்சல் தான் தற்போது வரபிரசாதமாக உள்ளது

இப்பொழுது சொல்லுங்கள் நமது மூதாதையர்கள் விஞ்ஞானிகள் தானே ???

அவர்களின் செயல் அனைத்தையுமே மூடநம்பிக்கை என்று நாம் எண்ணி கைவிட்டதின் விளைவு ,இன்று டெங்கு காய்ச்சல் , மலேரியா , சிக்குன்குனியா போன்ற புது நோய்கள் . இது போல் நாம் இழந்தவை ஏராளம்!!!

அயல்நாட்டாரை கொண்டு வியப்படையாமல் நமது பொக்கிஷங்களை பேணி பாதுகாப்போம் !!!நமது உடல் நலத்தை !! சமுதாய நலத்தை சீரழிவிழிருந்து மீட்டெடுப்போம் !!!

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

- Advertisment -

ஏனைய செய்திகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:
x
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software