பெண்களைக் குறி வைக்கும் பரோட்டா – திடுக்கிடும் தகவல்கள்..!!

இன்றைய காலகட்டத்தில், நம் அனைவர்க்கும் மிகவும் பிடித்தமான உணவாக, விலை குறைவான உணவாக, நினைத்தவுடன் வாங்கி உண்டு வயிறு நிரப்பிக் கொள்ளும் உணவாக நம்மிடையே பிரபலமடைந்து இருப்பது பரோட்டா எனும் உணவு. இந்த பரோட்டாவில் தான், ஊருக்கு ஊர் எத்தனை வகை; அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடுகள். பரோட்டாக்களில் புகழ் பெற்ற விருதுநகர் பரோட்டா, தூத்துக்குடி பரோட்டா, கொத்து பரோட்டா, சில்லி பரோட்டா என்று பரோட்டாவின் வகைகளை எண்ணும் போதே, சொல்லும் போதே நாவில் எச்சில் ஊறிவிடுகிறது.

அப்படிப்பட்ட பரோட்டா உருவான கதை மற்றும் அதன் சாதக பாதகங்கள் பற்றி இப்பதிப்பில் படித்தறிவோம்..! வாருங்கள் தோழியரே!

பரோட்டாவின் கதை??!

பரோட்டா எனும் உணவு மைதாவால் செய்யப்படுவது. இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது, தமிழகத்தில் இவ்வுணவு இல்லாத இடம் இல்லை என்றும் கூறலாம்; வட மாநிலங்களில் மைதாவால் செய்யப்பட்ட பரோட்டாவினை பார்ப்பது என்பதே மிகவும் அரிது. 2-ஆம் உலகப்போரின் போது ஏற்பட்ட கோதுமை மாவுப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன; அப்பொழுதிலிருந்து இந்த பரோட்டா உணவும் மக்களிடையே பிரபலமடைய தொடங்கியது.

எப்படி செய்வார்கள்?
மைதா மாவினில், உப்பு, நீர் விட்டு பிசைந்து, பின் எண்ணெய் சேர்த்து, உருண்டைகளாக உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அவ்வுருண்டைகளை தேய்த்து, துணி துவைப்பது போல் நன்கு அடித்து, பெரிய கைக்குட்டை போல் செய்து, பின்பு அதை அப்படியே கோன் ஐஸ்கிரீம் மேற்பாகம் போல் சுருட்டி, மீண்டும் அதை வட்ட வடிவில் அல்லது தேவைக்கேற்ற வடிவில் தேய்த்து, தோசைக்கல்லில் போட்டு எடுப்பார்கள்.

admin panel image a193e290 0f6e 4325 8180 f5ab2e82db51 1523270822753 |

அபாயத்தை ஏற்படுத்தும் மைதா!
நன்றாக மாவாக அரைக்கப்பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும்; அதை பென்சாயில் பெராக்சைடு (benzoyl peroxide ) என்னும் இரசாயனம் கொண்டு வெண்மையாக்குகிறார்கள்; அது தான் மைதா. கோதுமையில் சேர்க்கப்படும் Benzoyl peroxide என்பது, நாம் முடியில் அடிக்கும் டையில் உள்ள இரசாயனம் ஆகும்.

இந்த இரசாயனம் மாவிலுள்ள புரதத்துடன் சேர்ந்து நீரிழிவு நோய்க்கு காரணியாய் அமைந்து, பலவித உடல் உபாதைகளையும் உண்டாக்குகிறது. இது தவிர Alloxan எனும் இரசாயனம் மாவை மிருதுவாக்க கலக்கபடுகிறது; மேலும் Artificial colors – செயற்கை நிறங்கள், Mineral oils – தாது எண்ணெய்கள், Taste Makers – சுவையூட்டிகள், Preservatives – பதப்படுத்திகள், Sugar – சர்க்கரை – Saccarine, Ajinomotto – அஜினமோட்டோ போன்ற உப பொருட்களும் மாவினில் சேர்க்கப்படுகிறது. இவை அனைத்தும் மைதாவைமேலும் அபாயகரமாக்குகிறது.

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

இரவில் கூடாது..
இதில் உள்ள Alloxan எலிகளுக்கு நீரிழிவு நோய் வர வைப்பதற்கு பயன்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது, எனவே, பரோட்டாவிலுள்ள Alloxan மனிதனுக்கும் நீரிழிவு நோய் வர துணை புரிகிறது என்பது நிரூபணமாகி உள்ளது. மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா செரிமானத்திற்கு உகந்ததல்ல; மைதாவில் நார்ச்சத்து கிடையாது, நார்ச்சத்து இல்லா உணவானது, நம் செரிமான சக்தியை குறைத்து விடும். இது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எளிதில் நோய் பாதிப்புகளை ஏற்படுத்தி விடக்கூடியது; ஆகையால், பெண்கள் மற்றும் குழந்தைகள் கட்டாயமாக இரவினில் பரோட்டா உண்பதை தவிர்க்க வேண்டும்.

ஆகவே பரோட்டாவினை இரவில் உண்பதை கண்டிப்பாய் தவிர்க்க வேண்டும்; இதில் சத்துகள் எதுவுமில்லை என்பதால், குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது. எனவே குழந்தைகளை மைதாவினால் செய்த பரோட்டா, கேக், பிரட், ரொட்டி போன்ற பேக்கரி பண்டங்களை உண்ண விடாமல் தவிர்ப்பது நல்லது.

மைதாவிற்கு தடை!

யூரோப், லண்டன், சீனா ஆகிய நாடுகள், மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன. மைதாவினை நாம் உட்கொள்ளும் போது சிறுநீரகக்கல், இருதயக்கோளறு, நீரிழிவு நோய் போன்றவை உண்டாவதற்கு வாய்ப்புகள் அதிகம். கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து பிரச்சாரம் செய்யத்தொடங்கி, அதைக்குறித்து விழிப்புணர்வு ஏற்படத் தொடங்கிவிட்டது; மைதாவின் தீமைகள் குறித்து ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர், கேரளா மக்கள்.

இதைப்படித்த பின்பாவது பரோட்டாவின் தீமைகளை உணர்ந்து, விழிப்புணர்வு அடைந்து, நம்மை மற்றும் நம் குழந்தைகளை நோய் நொடிகளில் இருந்து காப்போமாக! தெரிந்தே, காசு கொடுத்து வினையை விலைக்கு வாங்குவதை இனிமேலாவது தவிர்ப்போமாக..!!!

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles