கடந்த சில ஆண்டுகளில் இல்லாதளவில் புதிய வடிவில் கொரோனா வைரஸ் என்னும் நோய் ஆட்டிப்படைத்து வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் உலகளவில் பலியாகியுள்ளனர்.
லட்சக்கணக்கானவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் மக்களை காக்க முனைப்புடன் போராடி வருகின்றன. அரசுடன் இணைந்து மக்களும் எதிர்த்து நிற்கும் சூழல் உருவாகியுள்ளது.
சினிமா பிரபலங்களும் இதற்காக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் நாட்டில் சில அசாதாரண சூழல்களும் நிலவி வருகின்றன. இந்நிலையில் மத்திய அரசின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் விதமாக பிக்பாஸ் காஜல் பசுபதி பதிவிட்டுள்ளார்.
இதில் அவர் பசில சாவு, இல்ல கொரோனால சாவு என குறிப்பிட்டு உணவகத்தில் இருப்பவர்களை போலிசார் அடிக்கும் காட்சிகளை பகிர்ந்துள்ளார்.
Pasila saavu 😒
Illa coronala saavu 🙇 https://t.co/yTC1H2FQA9— Kaajal Pasupathi (@kaajalActress) March 25, 2020



