Tags Corona virus
Tag: corona virus
பிரான்ஸ் மக்களுக்கு எச்சரிக்கை! இது கொரோனாவில் இருந்து நம்மை காப்பாற்றாது: சுகாதார ஆலோசனை குழு சொன்ன தகவல்
பிரான்ஸ் மக்கள் பெரும்பாலானோர் துணியால் முகக்கவசத்தை பயன்படுத்தி வருவதால், அது புதிய வகை கொரோனா பரவில் இருந்து பாதுகாக்காது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முகக்கவசம் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.முகக்கவசம் அணியாமல் இருந்தால், அபராதமோ அல்லது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், இப்போது முகக்கவசம் என்பது ஒரு அன்றாட நாம் பயன்படுத்தும் ஒரு பொருள் போன்று ஆகிவிட்டது.அந்த வகையில், பிரான்சிலும் முகக்கவசம் கட்டாயம் என்பதால், அங்கிருக்கும் மக்களின் பெரும்பாலானோர் துணிகளால் ஆன…
பிரான்சில் நோயாளிகளுக்கு போடப்படும் கொரோனா தடுப்பூசி விவரங்கள் அறிவிக்கப்படுமா? சுகாதார அமைச்சர் விளக்கம்
பிரான்சில் கொரோனா நோயாளிகளுக்கு போடப்படும் தடுப்பூசி விவரங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.உலகின் ஒரு சில நாடுகளில் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் போடப்பட்டு வருகிறது.ஆனால், பிரான்சில் கொரோனா வைரசுக்கான தடுப்பூசிகள் வழங்கப்படுவதில் வெளிப்படைத் தன்மை இல்லை என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.இதை அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது. இந்நிலையில், தற்போது பிரான்ஸ் அரசு, கொரோனா தடுப்பூசி போடப்படும் விவரங்களை…
பிரான்சில் இந்த நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ்! கடும் அச்சத்தில் மக்கள்
பிரித்தானியாவில் தீவிரமாக பரவி வரு உருமாறிய கொரோனா வைரஸ் இப்போது, பிரான்சின் லில் நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவலை இன்னும் கட்டுப்படுத்தாத நிலையில், பிரித்தானியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.இது தீவிரமாக பரவுவதாக கூறப்படுகிறது. இதனால் கடுமையான நடவடிக்கைகள் அங்கு உள்ளன.இந்நிலையில், மிகவும் மோசமான தொற்றை ஏற்படுத்தும், பிரித்தானிய வைரசின் தொற்றானது, லில் நகரத்திலும் கண்டறியப்பட்டுள்ளது.இங்கு இரண்டு பேரிற்கும், பிரித்தானிய வைரசின் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என Hauts-de-France இன் பிராந்திய சுகாதார நிறுவனமான, ARSஇன் பொது இயக்குநர்…
கொரோனா பரவலின்போது பூக்களுக்காக மட்டும் 600,000 டொலர்கள் செலவு செய்த ஜனாதிபதி: கொந்தளிக்கும் நாட்டு மக்கள்
உலகமெல்லாம் கொரோனா பரவிக்கொண்டிருந்த நேரத்தில், பூக்களுக்காக மட்டுமே 600,000 டொலர்கள் செலவு செய்துள்ள ஒரு நாட்டின் ஜனாதிபதியையும் அவரது மனைவியையும் மக்கள் கரித்துக்கொட்டுகிறார்கள்.இப்படி மக்களின் தூற்றுதலுக்கு ஆளாகியிருப்பது, வேறு யாருமில்லை, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானும் அவரது காதல் மனைவி பிரிஜிட் மேக்ரானும்தான்.ஆம், பாரீஸிலிருக்கும் தங்கள் அதிகாரப்பூர்வ இல்லமான Elysee Palaceஐ பூக்களால் அழகு படுத்துவதற்காக, 540,709 டொலர்கள் (600,000 யூரோக்கள்) செலவிட்டுள்ளனர் நாட்டின் முதல் குடிமக்களான இமானுவல் மேக்ரானும் அவரது மனைவி பிரிஜிட் மேக்ரானும்.இத்தனைக்கும் இந்த…
லில் நகரத்திலும் பிரித்தானிய வைரஸ் தொற்று!!
மிகவும் மோசமான தொற்றை ஏற்படுத்தும், பிரித்தானிய வைரசின் தொற்றானது, லில் நகரத்திலும் கண்டறியப்பட்டுள்ளது. இங்கு இரண்டு பேரிற்கு, பிரித்தானிய வைரசின் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என Hauts-de-France இன் பிராந்திய சுகாதார நிறுவனமான, ARSஇன் பொது...
பிரான்சில் கொரோனா சிகிச்சை மையங்கள் எங்கெல்லாம் இருக்கிறது? மக்களுக்கு அரசு எடுத்துள்ள புது முயற்சி
பிரான்சில் கொரோனா சிகிச்சை மையங்கள் எங்கெல்லாம் இருக்கிறது என்பது தொடர்பான தகவல்கள் அடங்கிய, இணையதளம் விரைவில் அறிமுகப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.கொரோனா வைரஸ் பரவல் பிரான்சில் 27 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 67 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து நாட்டில் கொரோனா தாக்கம் இருப்பதால், இந்த வைரஸை கட்டுக்குள் கொண்டு வர கடும் கட்டுப்பாடுகளும், கொரோனா வைரசுக்குரிய சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.அதுமட்டுமின்றி, தடுப்பு மருந்துகள் வழங்கப்படுவது தீவிரமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எங்கெல்லாம் சிகிச்சைமையங்கள் உள்ளன என்பது தொடர்பான தகவல்களையும், இலவச…
கனடாவுக்குள்ளும் நுழைந்தது தென்னாப்பிரிக்க கொரோனா வைரஸ்!
கனடாவில் தினசரி கொரோனா எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், தென்னாப்பிரிக்க கொரோனா வைரஸும் கனடாவுக்குள் நுழைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.நேற்று மட்டும் ஒரே நாளில் கனடாவில் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 9,197.128 பேர் பலியாகியுள்ள நிலையில், கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 16,707 ஆக உயர்ந்துள்ளது.கனடாவின் பொது சுகாதார அலுவலரான Dr. Theresa Tam கூறும்போது, முதல் தென்னாப்பிரிக்க திடீர் மாற்றம் கொண்ட வைரஸ் ஆல்பர்ட்டாவில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.ஏற்கனவே, கனடாவில் 14 பேருக்கு பிரித்தானிய திடீர்…
கனடாவிலும் நுழைந்த புதிய கொரோனா வைரஸ்! 2 பேருக்கு உறுதி: எந்த மாகாணத்தில் தெரியுமா? எச்சரிக்கை தகவல்
பிரித்தானியாவில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா தொற்று, கனடாவில் இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கனடாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக,534,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 14,700 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக கனடாவில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.குறிப்பாக, குடும்ப வட்டத்திற்கு வெளியே தனியார் வேறு நபருடன் சேர்ந்து கூட்டங்கள் கூட தடை செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில், தற்போது பிரித்தானியாவின் இங்கிலாந்தில் இருக்கும் Durham-ல் இருந்து திரும்பிய ஜோடிக்கு இந்த புதிய வகை கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி…
பிரான்ஸ் மக்களே வாங்கிடாதீங்க… கொரோனாவுக்கான போலியான தடுப்பு மருந்து விற்பனை: எச்சரிக்கை தகவல்
பிரான்சில் கொரோனாவுக்கான போலியான தடுப்பு மருந்துகள் சந்தைக்கு வந்துள்ளதாக மக்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலுக்கு தடுப்பு மருந்துகள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.ஒரு சில தடுப்பு மருந்துகளுக்கு பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகள் அனுமதி வழங்கிவிட்டாலும், ஒரு சில நாடுகளில் கொரோனாவிற்கான தடுப்பு மருந்து இறுதிகட்ட கட்ட சோதனையில் உள்ளது.இதற்கிடையில் கொரோனாவிற்கான தடுப்பு மருந்துகள் என்று மக்களை ஏமாற்றும் வகையில், சில சம்பவங்கள் நடந்து வருகின்றன.அந்த வகையில், கொரோனா வைரசுக்கான போலியான மருந்துகள் சந்தைக்கு…
கனடாவில் முழு ஊரடங்கை அறிவித்த முக்கிய மாகாணம்: மீறுவோருக்கு கடும் அபராதம்
கனடாவின் கியூபெக் மாகாணம் எதிர்வரும் சனிக்கிழமை முதல் கொரோனா ஊரடங்கை அமுலுக்கு கொண்டுவர இருப்பதாக அறிவித்துள்ளது.ஊரடங்கு அமுலில் இருக்கும் நேரங்களில் மாகாண குடிமக்கள் கட்டாயம் குடியிருப்புக்குள் தங்கியிருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.மீறுவோருக்கு 6000 கனேடிய டொலர் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சனிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் இந்த ஊரடங்கானது பிப்ரவரி 8 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என தெரிய வந்துள்ளது.கியூபெக் மாகாணம் முழுவதும் எதிர்வரும் சனிக்கிழமை முதல் இரவு 8 மணி முதல் காலை…