சர்க்கரை நோய் எப்படி வருகிறது? தினமும் அரிசி சாதம் சாப்பிடுவதால்??

தினமும் அரிசி சாதம் சாப்பிடுவதால் அதிக அளவில் சர்க்கரை நோய் வருவதாக கூறுகிறார்கள். ஆனால் அது தவறு. நாம் எப்படி சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம்.

சர்க்கரை நோய் எப்படி வருகிறது?
இன்று குக்கரில் வேகவைத்த சாதத்தை பலரும் சாப்பிடுகிறார்கள். கஞ்சியை வடிக்காமல் சாதம் சாப்பிடுவதால் தான் நீரிழிவு ஏற்படுகிறது.

 கஞ்சியின் பயன்கள் :-

* சாதம் வடித்த கஞ்சி சூடாக இருக்கும் போது சிறிது உப்பைப் போட்டு பருகினால் கண் எரிச்சல், பித்தம் ஆகியவை சரியாகும்.
கஞ்சியை ஆற வைத்து குடித்தால் வாயுவை ஏற்படுத்தும்.

*சாதம் உலையில் கொதிக்கும் போதே கஞ்சியை எடுத்துப் பருகினால் நீர்க்கடுப்பை நீக்கும்.

 சாதத்தை எப்படி சாப்பிட வேண்டும்? :-

*கொதிக்க கொதிக்க சாதத்தை சாப்பிடக்கூடாது. சாதத்தை மிதமான சூட்டிலேயே சாப்பிட வேண்டும்.

*சாதத்தை சில்லென்று ஆறிப்போய் சாப்பிட்டால் குதிவாதம், மூட்டுவாதம் ஏற்படும்.

 பழைய சோறு :-

ஆரம்ப காலத்தில் பழைய சோறு சாப்பிட்டு தான் நம் முன்னோர்கள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தார்கள். சாதத்தில் தண்ணீர் ஊற்றி மறுநாள் காலையில் பழைய சோற்றை சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சி, வலிமை தருவதுடன் வயிற்றுக்கோளாறு, அல்சர், மூட்டுவலி ,தோல் நோய்கள் போன்றவை வராமல் தடுக்கிறது.

*பழைய சோற்றில் தயிர் ஊற்றி சாப்பிடக்கூடாது. மோரைக் கடைந்து ஊற்றி சாப்பிட வேண்டும்.

சாதத்தின் பயன்கள் :-

*சாதம் வெதுவெதுப்பாக இருக்கையில் பசும்பால் ஊற்றி சாப்பிட்டால் தண்ணீர் தாகம் ஏற்படுவதும்,பித்தம் உண்டாவதும் நீங்கும்.

*பச்சரிசி சோற்றில் பால் சேர்த்து சாப்பிட வாதம், பித்தம் நீங்கும்.

*மோர் சாதம் செரிமானக் கோளாறுகளை நீக்கி வாதம், பித்தத்தை தணிக்கிறது.

*சம்பா சோறு வயிற்றுப் பொருமலுக்கு மிகவும் நல்லது.

*வாழையிலையில் சாப்பிடுவதால் அதிலுள்ள துவர்ப்புச் சத்து உடலில் சேர்ந்து நன்மை செய்கிறது.

 ஆரோக்கியமாக இருக்க கடைப்பிடிக்க வேண்டியவை :-

*காலை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன் தோல் நீக்கிய இஞ்சித் துண்டை சாப்பிட்டால் தொப்பையைக் கரைக்கும்.

*உணவை நன்றாக மென்று பொறுமையாக உண்ணுங்கள்.

*ஏற்கனவே பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தி அந்த எண்ணெயில் பண்டங்களைச் செய்து சாப்பிடக்கூடாது. இதனால் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்.

*மைதாவினால் செய்யப்படும் பரோட்டா போன்ற பொருட்களை சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். இது வாழ்நாளைக் குறைக்கும்.

*பிராய்லர் கோழிக்கறி சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். இதற்கு பதில் மீன், அல்லது ஆட்டுக்கறி,நாட்டுக்கோழி சாப்பிடுங்கள்.

*மதியம் சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரம் முன்பு சுக்குக் காப்பி சாப்பிடுவது மிகவும் நல்லது.

*உண்ட உணவு முழுமையாகச் செரிக்கும் முன்பு திட உணவு சாப்பிடக் கூடாது.

*பாதாம், முந்திரி, உலர்பழம்,பழங்கள்,கீரைகள்,கிரீன் டீ,கடலை மிட்டாய்,எள் உருண்டை, பனைவெல்லம் ஆகியவற்றை நாள்தோறும் சாப்பிடுவது நல்லது.

டீன் ஏஜ் செக்ஸ்? கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles