வெளிநாடுகளில் ஏன் இரவில் குழந்தைகளை தனி அறைகளில் தூங்க வைக்கிறார்கள்?
ஒரு இதழில் படித்தேன்.அதை இங்கு பதிவிடுகிறேன்.
பொதுவாக நம்நாட்டில் குழந்தைகளுக்கு சாப்பாடு உண்ண நாம் நிலாவை காட்டியோ , சுற்றியுள்ள இடங்களில் அங்கும் இங்கும் குழந்தையை தூக்கிக்கொண்டோ ,காக்கா குருவியை காட்டிக்கொண்டோதான் ஊட்டுவோம் .

ஆனால் வெளிநாடுகளில் ஒரு தட்டில் உணவை கொண்டுவந்து கொடுப்பார்கள்.குழந்தை அதை அங்கும் இங்கும் சிந்தி சாப்பிடும்.இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு ஊட்ட மாட்டார்கள் நம்மைப்போல . இதற்கு காரணம் விரைவாக பழகட்டும் என்பதற்காகவும் ,தன் வேலையை தாமே செய்ய வேண்டும் என்பதை மனதில் நிலைநிறுத்தவும் தான் .
தன்னம்பிக்கையை வளர்க்கும் பொருட்டே குழந்தைகள் தனியறையில் வளர்கப்படுகிறார்கள் .



