
வயிற்று வலி மற்றும் காய்ச்சலுக்கு இப்யூபுரூஃபன் எடுத்துக் கொள்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஆய்வு சொல்லும் விஷயங்கள் அதிர்ச்சி ஏற்படுத்துகின்றன. இப்யூபுரூஃபன் என்பது ஸ்டீராய்டுஅல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் அல்லது NSAID குழுவிலிருந்து ஒரு மருந்து. இது நமது உடலில் உற்பத்தியாகும் புரோஸ்டாக்லாண்டின்களை தற்காலிகமாக குறைக்கும். தலைவலி, மாதவிடாய் வலி, வயிற்றுவலி, பல்வலி என உடலின் அனைத்து வலிகள் மற்றும் காய்ச்சலுக்கு எடுத்துக் கொள்ளும் மருந்து தொடர்பான ஆய்வு இது.
வலி நிவாரணி
பொதுவாக, இப்யூபுரூஃபன் உடலில் வலி நிவாரணியாக செயல்படுகிறது, இந்த வலி நிவாரணியை எடுத்துக் கொள்ள மருத்துவரின் பரிந்துரை தேவையில்லை, சுலபமாக கிடைக்கும் இந்த மருந்தை உட்கொள்வது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்று கூறப்படுகிறது.
இப்யூபுரூஃபன் பக்கவிளைவுகள்
மாரடைப்பு, ரத்தம் உறைதல், அல்சர், குழந்தையின்மை போன்ற பல பிரச்சனைகளை இப்யூபுரூஃபன் ஏற்படுத்தும் என்று அண்மை ஆய்வு ஒன்று கூறுகிறது.
மாரடைப்பு மற்றும் பக்கவாதம்
‘பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல்’ (British Medical Journal) படி, இப்யூபுரூஃபனை உட்கொள்வது இதயத் தடுப்பு அபாயத்தை 31 சதவீதம் அதிகரிக்கும் என்றும், இந்த மருந்தை அதிக காலம் உட்கொள்வது இதயத்திற்கான ஆபத்தை கணிசமாக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
காது கேளாமை
‘அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் எபிடெமியாலஜி’ (Proceedings of the National Academy of Sciences) ஹார்வர்ட் ஆராய்ச்சியின் படி, இப்யூபுரூஃபனை தொடர்ந்து உட்கொள்வது கேட்கும் திறனைக் பாதிக்கும் என்று தெரிகிறது. அதிலும், வாரத்திற்கு இரண்டு முறை இப்யூபுரூஃபனை உட்கொள்ளும் பெண்களுக்கு 24 சதவீதம் காது கேளாமை பிரச்சனைகள் அதிகரித்திருக்கிறது.
அல்சர் வயிற்றில் ரத்தக்கசிவு
ஐப்யூபுரூஃபன் புரோஸ்டாக்லாண்டின்களைக் குறைக்க வேலை செய்கிறது. இதனால் வயிற்றில் ஏற்படும் பக்கவிளைவுகளால் சேதம் அதிகமாகிறது. இது வயிற்றில் புண்கள் ஏற்படுவது மற்றும் இரத்தக்கசிவை ஏற்படுத்துகிறது.
கருவுறாமை
‘Proceedings of the National Academy of Sciences’ என்ற இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, தொடர்ந்து 6 வாரங்களுக்கு இப்யூபுரூஃபனை உட்கொள்ளும் இளம் வயதினருக்கு பாலியல் ஹார்மோன்களின் உற்பத்தி குறைகிறது. வழக்கமாக பாலியல் ஹார்மோன் உற்பத்தி என்பது வயதான ஆண்கள் மற்றும் புகைபிடிப்பவர்களுக்கு ஏற்படுகிறது.
18-35 வயதுடையவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 600mg அளவிலான ஐப்யூபுரூஃபனை ஒரு நாளைக்கு இரண்டு முறை என தொடர்ந்து 2 வாரங்களுக்கு உட்கொள்பவர்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைகிறது.ஐப்யூபுரூஃபன் மருந்தை தேவையில்லாமல் உட்கொள்ளும் போதும், தேவைக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும்போதும் அதன் பக்க விளைவுகள் அதிகரிக்கின்றான. வலி நிவாரணியான ஐப்யூபுரூஃபன் மருந்தை, தேவைப்படும்போது மட்டும் குறுகிய காலத்திற்கு வலி நிவாரணியாக எடுத்துக் கொண்டால் பக்க விளைவுகளின் அபாயத்தை குறைக்கலாம்.



