குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள் விசாகம் 04.10.2018 முதல் 04.11.2019 வரை

0
831
vishakam guru peyarchi palangal
vishakam guru peyarchi palangal

குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள் விசாகம் 04.10.2018 முதல் 04.11.2019 வரை

விடாமுயற்சியுடன் காரியங்களை செய்து முடிக்கும் விசாக நட்சத்திர அன்பர்களே! இந்த குருபெயர்ச்சியால் பலவித நன்மைகள் உங்கள் வாழ்வில் நடக்கப் போகிறது. உத்தியோகம் தொடர்பான பிரச்னைகள் அகலும். குடும்பத்தைப் பொறுத்தவரை கணவன் – மனைவிக்கிடையே இருந்த பிரச்னைகள் விலகி இன்பமாக வாழ வழி பிறக்கும். இளைய சகோதரர்களிடையே இருந்த சண்டைகள், பிளவுகள் காணாமல் போகும். நீண்ட நாட்களாக வர இருந்த பணவரவுகள் இப்போது வரலாம். தாயாரின் அன்பு அதிகரிக்கும்.

தொழிலைப் பொறுத்தவரை சற்று மந்தநிலை காணப்பட்டாலும் சில வெற்றிகள் உண்டாகும். தந்தையாரின் தொழிலை கவனித்து வரும் அன்பர்களுக்கு நல்ல லாபம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வீண் பிரச்னைகள் வந்து போகும். நம்பிக்கையாக யாரிடமும் எதையும் சொல்ல வேண்டாம். வேலை நிமித்தமாக வெளியூர் பயணம் சென்றுவர  வேண்டியிருக்கும். பெண்களுக்கு திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல இடத்திலிருந்து வரன்கள் அமையப் பெறுவீர்கள். வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிகமாக உழைக்க வேண்டி வரலாம்.

மாணவர்கள் கல்வியில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். மேற்படிப்பில் அக்கறையுடன் படித்தால் மட்டுமே நல்ல வேலை எதிர்காலத்தில் அமையும்.  அரசியல் துறையினர் முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு ஆயத்தமாவீர்கள். சிலரது காரியங்களுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கும். கலைத்துறையினருக்கு விருதுகள், பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள். நீண்ட நாளைய கனவுகள் பலிக்கும். வெளிநாடுகளில் படப்பிடிப்புக்காக சென்று வருவீர்கள்.

பரிகாரம்: 
குருபகவானுக்கு முல்லை மலர் சாத்தி வழிபட மேன்மை உண்டாகும்.

ஏனைய நட்சத்திரங்களுக்கான குரு பெயர்ச்சி பலன்களை இங்கே சென்று பார்வையிடுங்கள்