குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள் சுவாதி 04.10.2018 முதல் 04.11.2019 வரை
குடும்ப சிந்தனையுடனே உழைக்கும் சுவாதி நட்சத்திர அன்பர்களே! இந்த குருபெயர்ச்சியானது உங்களுக்கு பலவிதமான லாபத்தை அள்ளித்தரப் போகிறது. அதற்கு உங்கள் முயற்சியை மேலும் இரட்டிப்பாக்குங்கள். குருபகவான் உங்களுக்கு நன்மையை அளிப்பார். குடும்பத்தில் தூர தேசத்திலிருந்து வரும் செய்திகளால் மனதிற்கு மகிழ்ச்சி ஏற்படும். தாயின் உடல் நலத்தில் அக்கறை செலுத்தினால் சிறு உடல் உபாதைகளை தவிர்க்கலாம். பிள்ளைகளின் வளர்ச்சி பற்றி அவ்வப்போது கவலை வந்து போகும். கணவன் – மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.
தொழில் செய்து கொண்டிருந்தவர்களுக்கும், புதிதாக தொழில் தொடங்குவதற்கும் பண உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உங்களுக்கு வர வேண்டிய பணமும் வந்து சேரும். தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும். உத்யோகஸ்தர்களுக்கு பண விஷயத்தைப் பொறுத்த வரை கவலை வேண்டாம். அலுவலகத்தில் உங்களுக்கு வர வேண்டிய பணம் வந்து சேரும். உங்கள் சேமிப்பும் அதிகரிக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் இருந்த பணப்பிரச்னைகள் குறையும். குடும்ப உறுப்பினர்கள் உங்களைப் புரிந்து நடந்து கொள்வது உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.
மாணவர்கள் சில நுணுக்கமான பாடங்களை எளிய முறையில் பயில வாய்ப்பு கிடைக்கும். உங்களின் அறிவுத்திறன் பளிச்சிடும். அரசியல்துறையினர் மக்களுக்குத் தேவையானவற்றில் பணத்தை செலவழிப்பீர்கள். மதிப்பும், மரியாதையும் மிகுந்து காணப்படும். கலைத்துறையினருக்கு பணமுடை நீங்குவதற்கு வாய்ப்புள்ளது. சக கலைஞர்களின் நட்பு வகையில் பிரச்னைகள் வரலாம்.


