குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள் அனுஷம் 04.10.2018 முதல் 04.11.2019 வரை
மற்றவர்களின் இடையூறுகளையும் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் அனுஷ நட்சத்திர அன்பர்களே! இந்த குருபெயர்ச்சியால் உங்கள் வாழ்வில் சந்தோஷமும், முன்னேற்றமும் அடையப் போகிறீர்கள். சிலர் வாழ்வில் முக்கிய கட்டங்களை சந்திக்கப் போகிறீர்கள். குடும்பத்தில் தந்தை வழியே வர வேண்டிய சொத்துகள், பிதுர்ராஜ்ய சொத்துகளிலிருந்த பாகப் பிரிவினைகள் எந்த பிரச்னையுமின்றி தீரும். வழக்குகள் ஏதாவது நடைபெற்றுக் கொண்டிருக்குமாயின் அது இந்த குருபெயர்ச்சிக்கு பிறகு உங்களுக்கு சாதகமான தீர்ப்புகளாக வரும். அதுவரை பொறுமையாக இருந்து அனைவரின் ஒத்துழைப்பையும் பெறுவீர்கள்.
தொழில் செய்பவர்கள் சில முக்கிய முடிவுகளை தந்தையின் ஆலோசனையின்படி கேட்டு முடிவு எடுப்பது நன்மையைத் தரும். வீண் செலவுகளைத் தவிருங்கள். உத்தியோகஸ்தர்களில், வெளிநாடுகளுக்கு செல்ல நினைக்கும் அன்பர்கள் இப்போது அதற்கான முயற்சியை மேற்கொள்ளுங்கள். சக நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு பெற்றோர் வகையில் ஆதாயம் உண்டு. கணவரிடம் அன்யோன்யம் அதிகரிக்கும். நிர்வாகம் செய்வதில் எந்தவித தொல்லையும் வராது. சிறு சேமிப்பைத் துவங்குவீர்கள்.
மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் உங்களை சிறப்பாக வழி நடத்துவார்கள். சங்கீதம் பயிலும் மாணவர்களுக்கு நல்ல ஞானம் கிடைக்கும். அரசியல்துறையினருக்கு கட்சியில் மிகப் பெரிய பதவி உயர்வு கிடைக்கும். மக்களிடையேயும், தொண்டர்களிடையேயும், செல்வாக்கு உயரும். கலைத்துறையினருக்கு கிடைக்கக்கூடிய விருதுகள் கிடைக்கும். வெளிநாடுகளுக்குச் சென்று பணியாற்றும் வாய்ப்பு அமையும்.



