குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள் கேட்டை 04.10.2018 முதல் 04.11.2019 வரை

எதிர்ப்புகளை எதிர்த்து வீர நடை போடும் கேட்டை நட்சத்திர அன்பர்களே! இந்த குருபெயர்ச்சி உங்களுக்கு எல்லாவித வளங்களையும் பெற குருபகவான் அருள் செய்கிறார். வாழ்வில் முக்கியமான கட்டங்களை தெரிந்து கொள்வீர்கள். குடும்பத்திலிருப்பவர்கள் அனைவரும் உங்கள்  பேச்சுக்கு மிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தவர்களுக்கு இப்போது அதற்கான பாக்கியம் கிட்டும். வாழ்வில் அவரவர் வயதிற்கு ஏற்ப நன்மைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்.

தொழில் செய்பவர்களுக்கு அதிக லாபம் இல்லை என்றாலும் நஷ்டமும் இருக்காது. நம்பிக்கையானவர்களை உடன் வைத்துக் கொள்வது உங்களையும் உங்கள் தொழிலையும் காப்பாற்றும். ஏற்றுமதி – இறக்குமதி தொழில் சிறப்பாக நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைப்பதற்காக அதிகமான வேலைப்பளுவை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வீர்கள்.

பெண்களில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும். தந்தையாரின் அன்பு அதிகரிக்கும். மாமியார் – மருமகளிடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும். மாணவர்கள் நண்பர்களுடன் வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. நல்ல மதிப்பெண் பெறுவதற்கு ஆசிரியர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். அரசியல்துறையினர் கட்சிப் பணிகளில் புதிய முயற்சிகள் கை கூடும். இதனால் மக்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு தந்தை வழியாக வாய்ப்புகள் வந்து குவியும். புதிய படத் தயாரிப்பாளர்கள் தயாரிப்புகளில் ஈடுபட்டு நல்ல லாபத்தை பெறலாம்.

பரிகாரம்: 
கந்தர் சஷ்டி கவசம் சொல்லி முருகப் பெருமானை வழிபடுங்கள். ஏழை எளியோருக்கு உதவுங்கள்.

ஏனைய நட்சத்திரங்களுக்கான குரு பெயர்ச்சி பலன்களை இங்கே சென்று பார்வையிடுங்கள்

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here