☀️ Weekly rasi palan 2022 ☀️ அடுத்த 6 நாட்களில் வரப்போகும் ஆபத்து? இந்த 4 ராசிக்கும் எச்சரிக்கை – பண பிரச்சனையை அதிகமா சந்திப்பீங்க! தற்போது சுக்கிரன் கடக ராசியில் பயணித்து வருகிறார்.
இவர் 2022 ஆகஸ்ட் 31 ஆம் தேதி சூரியன் ஆளும் சிம்ம ராசிக்கு செல்கிறார்.
சிம்மம் செல்லும் சுக்கிரனின் தாக்கம் அனைத்து ராசியிலும் மாற்றங்களை ஏற்படுத்தும்.
இருப்பினும் சில ராசிக்காரர்கள் சிம்மம் செல்லும் சுக்கிரனால் பல பிரச்சனைகளை சந்திக்கவுள்ளார்கள். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
அடுத்த 6 நாட்களில் வரப்போகும் ஆபத்து? இந்த 4 ராசிக்கும் எச்சரிக்கை – பண பிரச்சனையை அதிகமா சந்திப்பீங்க! | Venus Transit In Leo On 31 August Zodiac Signs
ரிஷபம்
சுக்கிரன் ரிஷப ராசியின் 4 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் இக்காலத்தில் ஆரோக்கியத்தில் சில ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். சுக்கிரனின் நிலை இக்காலத்தில் மகிழ்ச்சியைக் குறைக்கும். செலவுகள் அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
மிதுனம்
மிதுன ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் எதிலும் அவசரத்தையும், பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் சற்று கலவையான பலன்களையே பெறுவார்கள்.
ஆனால் வேறு யாரும் உங்களுக்கு உதவி முன்வரமாட்டார்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வாகனத்தில் செல்லும் போது விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும்.
தனுசு
தனுசு ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் பல தடைகளை சந்திப்பார்கள். இது இந்த ராசிக்காரர்களின் வேலையை மெதுவாக்கும் மற்றும் சிக்கல்களை ஏற்படுத்தும். குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
தொழிலதிபராக இருந்தால், தொழிலில் அதிக பணத்தை முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும்.
மகரம்
மகர ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் செலவுகள் அதிகமாக இருக்கும். சேமிப்பு குறைவாக இருக்கும்.
மேலும் சுக்கிரன் இந்த ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கையையும் பாதிக்கும். இப்பெயர்ச்சியால் உங்கள் திருமண வாழ்க்கையில் மற்றவர்கள் தலையிடுவார்கள்.
உங்களின் மகிழ்ச்சி குறையும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும்.
குரு பெயர்ச்சி 2023: வியாழன் கிரகத்தின் வக்கிர பெயர்ச்சி! அசுப பலன்களால் ஆபத்தை சந்திக்கும் ராசிகள் 2023 Guru Peyarchi Palangal in Tamil
கீழே உள்ள உங்கள் ராசியினை கிளிக் செய்வதன் மூலம் உங்களுடைய ராசி பலன்களை அறிய முடியும்.















