
ஜோதிட சாஸ்திரத்தின் படி, அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என எழைக்கப்படுகின்றன. கிரக பெயர்ச்சிகளின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் ஏற்படுகின்றது. இபற்றால் சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகின்றன.
வரும் ஜூன் 14ஆம் தேதி, அதாவது இன்னும் 2 நாட்களில் கிரகங்களின் இளவரசராக கருதப்படும் புதன் மிதுன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். புதன், புத்திசாலித்தனம், அறிவாற்றல், பேச்சாற்றல், மென்மை, செழிப்பு ஆகியவற்றின் காரணி கிரகமாக உள்ளார். மிதுன ராசியின் அதிபதி புதன் கிரகம். அத்தகைய சூழ்நிலையில், புதன் தனது சொந்த ராசியான மிதுன ராசியில் பெயர்ச்சி ஆவது பத்ர ராஜயோகத்தை உருவாக்கும்.
ஜோதிடத்தில், பத்ர மகாபுருஷ ராஜயோகம் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இந்த ராஜயோகத்தின் உருவாக்கம் 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும். இவர்களுக்கு தொழில், வியாபாரத்தில் பெரும் முன்னேற்றம் ஏற்படும். ஜூன் 14, 2024 முதல் புதன் பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ரிஷபம்
புதன் பெயர்ச்சியால் உருவாகும் பத்ர ராஜயோகத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான பலன்கள் கிடைக்கும். ஏனெனில் புதன் இவர்களுக்கு அறிவாற்றல் மற்றும் பேச்சாற்றலுக்கான பலன்களை தரப்போகிறார். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். எதிர்பாராத பணவரவு அவ்வப்போது கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சிக்கிய பணம் மீண்டும் கிடைக்கும். வங்கி இருப்பு அதிகரிக்கும். சேமிப்பதில் வெற்றி பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில் உங்கள் வணிகம் நன்றாக விரிவடையும். இதன் காரணமாக லாபம் அதிகரிக்கும்.
கன்னி
புதன் பெயர்ச்சி கன்னி ராசியினருக்கு மிகவும் நன்மை பயக்கும். கர்மவினையின் அடிப்படையில் பல நன்மைகளைப் பெறுவீர்கள். வேலை மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் பெறலாம். வியாபாரம் விரிவடையும். செல்வத்துடன் மரியாதையும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பதவி உயர்வு இருக்கலாம். புதன் அருளால் பொருளாதார நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரம் உயரும் வாய்ப்புகள் உள்ளன. உங்கள் தந்தையுடனான உறவு வலுவடையும். வீட்டில் சுபிட்சம் இருக்கும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.
துலாம்
புதன் பெயர்ச்சியால் உருவாகும் பத்ர ராஜயோகம் துலாம் ராசிக்காரர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். அனைத்து வேலைகளும் எளிதாக முடிவடையும். தடைபட்ட பணிகள் இப்போது வெற்றிகரமாக நடந்துமுடியும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். கணிசமான நிதி ஆதாயம் ஏற்படும். சமூகத்தில் உங்கள் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். நீண்ட தூர பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. நீண்ட நாள் கனவும் நனவாகலாம்.



