Saturday, July 20, 2024

நினைத்தேன் வந்தாய் : இந்துவை அழிக்க மனோகரி செய்த பூஜை.. மயங்கி விழுந்த கவின்

- Advertisement -
நினைத்தேன் வந்தாய் : இந்துவை அழிக்க மனோகரி செய்த பூஜை.. மயங்கி விழுந்த கவின்
நினைத்தேன் வந்தாய் : இந்துவை அழிக்க மனோகரி செய்த பூஜை.. மயங்கி விழுந்த கவின்

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘நினைத்தேன் வந்தாய்’ சீரியல்.

நினைத்தேன் வந்தாய் : இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் செல்வி ஏற்பாடு செய்த போலி சாமியார் வீட்டிற்கு வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

- Advertisement -

மனோகரி, செல்விக்கு அதிர்ச்சி

அதாவது, போலி சாமியார் பேயை ஓட்டுவதாக சொல்லி ரூம் ரூமாக சென்று திருட்டு வேலைகளை செய்ய இதை கவின் பார்த்து விடுகிறான். என்ன திருடுனீங்க என்று கேட்க அந்த சாமியார் கவினை அடிக்க அவன் மயங்கி விழ அங்கிருந்து இந்துவின் ஆவிக்கு சக்தி வந்து சாமியாரை அடித்து துரத்த சத்தம் கேட்டு மனோகரியும் செல்வியும் ஓடி வந்து பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். இதையெல்லாம் பேயோட வேலை என்று பயப்படுகின்றனர்.

- Advertisement -

இதையடுத்து மனோகரி உண்மையான சாமியார் ஒருவரை சந்தித்து நடந்த விஷயத்தை சொல்ல அவர் நீ எதோ தப்பு பண்ணி இருக்க, உன்னால இந்த உலகத்தை விட்டு போனது திரும்ப வந்து இருக்கு. அது பழி தீர்க்காமல் போகாது என்று சொல்லி கொஞ்சம் மஞ்சளையும் எலுமிச்சை பழத்தையும் கொடுத்து ஒரு பூஜையை செய்தால் அந்த ஆத்மாவால் வீட்டிற்குள் வர முடியாது என்று சொல்கிறார்.

- Advertisement -

பூஜைக்கான வேலையை தொடங்கும் மனோகரி

அதே சமயம் இந்த மஞ்சளை அந்த ஆவியோடு ரத்த சம்மந்தம் இருக்கவங்க யாரும் தொட கூடாது என்றும் சொல்லி கொடுத்து அனுப்ப வீட்டிற்கு வந்த மனோகரி பூஜைக்கான வேலையை தொடங்குகிறாள். ரூமில் எழில் இந்து ஞாபகத்தில் கலங்கி அழுகிறான். இந்துவின் ஆவி அவனை கட்டியணைக்க அதை உணரும் எழில் நீ இங்க தான் இருக்க இந்து வெளியில் வந்து தேடி அலைய மழையில் நனைந்து விடுகிறான். அதற்குள் மனோகரி பூஜையை முடித்து பானையையும் மஞ்சளையும் சாமியார் சொன்னது போல் வைத்து விட இந்துவால் வீட்டிற்குள் நுழைய முடியாமல் போகிறது.

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Hot this week

2024 ஜூன் 29 வக்ர சனியின் மாற்றத்தில் நன்மைகளைப் பெற உதவும் சனி பரிகாரங்கள்! வணங்கினால் வாழ்க்கை வளம் பெறும்!!

நவகிரகங்களில் சனீஸ்வரரின் தாக்கம் வாழ்க்கையின் எல்லா காலகட்டங்களிலும் இருந்துக் கொண்டே இருக்கிறது,...

ஆடி மாத அதிர்ஷ்ட ராசிகள்! கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் போது யாருக்கு எப்படி இருக்கும்?

Suriya Peyarchi Palangal: மாதப் பிறப்பு என்பது பலருக்கும் உற்சாகமான நாளாக...

சூரிய பெயர்ச்சி 2024: பணமழையில் நனையப்போகும் ராசியினர் யார்?

மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு செல்லும் சூரிய பகவானால் சில ராசிகளுக்கு அதிஷ்டம்...

Tamil Trending News

ஆடிக்கூழ் – அரிசிமா கூழ் செய்வது எப்படி? இலகுவான முறை

aadi kool seivathu eppadi ஆடிக்கூழ் - அரிசிமா கூழ் செய்வது...

2024 ஜூன் 29 வக்ர சனியின் மாற்றத்தில் நன்மைகளைப் பெற உதவும் சனி பரிகாரங்கள்! வணங்கினால் வாழ்க்கை வளம் பெறும்!!

நவகிரகங்களில் சனீஸ்வரரின் தாக்கம் வாழ்க்கையின் எல்லா காலகட்டங்களிலும் இருந்துக் கொண்டே இருக்கிறது,...

சூரிய பெயர்ச்சி 2024: பணமழையில் நனையப்போகும் ராசியினர் யார்?

மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு செல்லும் சூரிய பகவானால் சில ராசிகளுக்கு அதிஷ்டம்...

இம்முறை செவ்வாயின் ராசி மாற்றம்! பணத்தில் குளிக்கும் ராசிகள் யார் தெரியுமா?

செவ்வாய் பகவான் ரிஷப ராசி பயணத்தினால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசியினர்களை இங்கு...

வேட்டையை தொடங்கிய குருவால் கொட்டும் அதிர்ஷ்டம்! இவங்களை கையில் பிடிக்கவே முடியாதாம்

குரு பகவானின் நட்சத்திர இடமாற்றத்தால் பண அதிர்ஷ்டத்தில் மூழ்கும் ராசியினரை குறித்து...

Related Articles

error: Content is protected !!