தலைவாரும் பெண்களே உஷார்! எப்போதுமே இப்படி தலையை சீவி கொள்ளாதீர்கள். அதிர்ஷ்டம் உங்களை விட்டு போய்விடும்.

பொதுவாகவே நம்முடைய முன்னோர்கள், பெண்கள் தலைவிரி கோலமாக இருக்கக்கூடாது என்று சொல்லுவார்கள். ஆனால், இன்றைய சூழ்நிலையில் தலைவிரி கோலமாக இருப்பதுதான் ஃபேஷன் என்று ஆகிவிட்டது. ஆனால், எதற்காக பெண்கள் தங்களுடைய கூந்தலை பின்னி முடிந்து கொள்ள வேண்டும் என்று சொல்லி வைத்துள்ளார்கள்! இதற்கான காரணம் என்ன என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

அந்த காலங்களில் எல்லாம் துயரம் ஏற்படும் சமயத்தில் தான் தலைவிரி கோலமாக இருப்பார்கள். கண்ணகி தன் கணவனை இழந்த பின்புதான் தலைவிரி கோலமாக தன்னை மாற்றிக் கொண்டால். வீட்டில் ஏதாவது தூக்கம் நடந்துவிட்டால் தான் இப்படி தலைவிரி கோலமாக இருந்து, தங்களுடைய கஷ்டத்தை வெளிப்படுத்துவார்கள். இந்த விஷயங்கள் எல்லாம் நமக்குத் தெரிந்தது தான். இருந்தாலும் தலைவிரி கோலம் என்பது இந்த காலகட்டத்தில் வளர்ந்து வரும் நாகரீகம் ஆகிவிட்டது. ஒரு குடும்பத்தின் குலத்தை விரிவுபடுத்தும் பெண்ணுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் உண்டு.

இந்த பெண்ணாகப் பட்டவள் புகுந்த வீட்டையும் பிறந்த வீட்டையும் ஒன்றாக இணைக்கும் ஒரு சக்தியாக இருக்க வேண்டும். அதாவது பெண்கள் ஜடை பின்னி கொள்ளும் போது, தங்களது முடியினை மூன்றாகப் பிரித்து, அதன் பின்பு மூன்று பிரிவுகளையும் சேர்த்து பின்னி கொள்வார்கள். இந்த மூன்று பிரிவில் நடுவில் இருப்பது, அந்த பெண்ணாகவும், வலது பக்கம், இடது பக்கம் இருக்கும் பிரிவு, புகுந்த வீடும் பிறந்த இடமாகவும், கருதப்படுகிறது.

tamil-combing hair-thinatamil
tamil-combing hair-thinatamil

இரு வீட்டாரையும் என்றைக்குமே ஒன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை இந்த பின்னல் வலியுறுத்துவதாக சொல்லப்படுகிறது. இது மட்டுமல்லாமல், பெண்களுக்கு உடம்பில் இருக்கும் நல்ல சக்தியானது மயிர் கால்களின் வழியாக வெளியேறுவதாகவும் சில சாஸ்திர குறிப்புகள் சொல்லப்படுகின்றன. இதனால்தான் அந்த காலங்களில் எல்லாம் பெண்கள் தங்களுடைய கூந்தலின் முனையை குஞ்சிலத்தால் கட்டிக் கொள்வார்கள். அல்லது ரிப்பன் வைத்து முடிச்சு போட்டு கொள்வார்கள். அதாவது கூந்தலின் நுனிப்பகுதி வெளியில் தெரியாத அளவிற்கு மறைத்து வைத்து இருப்பார்கள். இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

பெண்களை வசியம் செய்யவும் அல்லது கெட்ட சக்தியை ஏவி விடவும் பெண்களின் முடி உபயோகப்படுத்தப்படும். இதனால் கூட, தங்களின் முடி உதிர கூடாது என்பதை நினைவில் கொண்டு அவர்கள் தங்களுடைய முடிகளை பின்னி வைத்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. பெண்கள் சமையலறையில் சமைக்கும் போது, அதில் முடி உதிர கூடாது என்ற ஒரு காரணமும் அடங்கியுள்ளது. எது எப்படியாக இருந்தாலும், ஒரு பெண் தலைவிரி கோலமாக இருப்பது தவறு என்பதுதான் உண்மை. முடிந்தவரை பெண்கள் தலை சீவும் போது நேர் வகுடு எடுத்து சீவ வேண்டும்.

அப்படி நம்முடைய முடிகளை இரண்டு பாகங்களாக சரியாகப் பிரிக்கும் பட்சத்தில், அறிவியல் ரீதியாக நம்மின் மூளை சீராக செயல்படும் என்ற ஒரு உண்மையும் மறைந்திருக்கிறது. இப்போது இந்த இடத்தில் சில பேருக்கு, ஒரு சந்தேகம் வரும். நடிகைகள் எல்லாம் எப்போதுமே தலைவிரி கோலத்தில் தானே இருக்கிறார்கள். அவர்கள் பணக்காரர்களாக இல்லையா? அதிர்ஷ்டசாலிகளாக இல்லையா? என்ற கேள்வியை கட்டாயம் கேப்பீங்க! ஒரு நல்ல விஷயத்தை முன்வைக்கும்போது தேவையற்ற விதண்டாவாத கேள்விகள் வருவது சகஜம்தான்.

தலைவிரி கோலத்தோடு இருப்பவர்கள் எல்லாம் பணக்காரர்களாக இருக்கலாம் அவர்களுக்கெல்லாம் நிம்மதியான சூழ்நிலையும், அமைதியான வாழ்க்கையும், சந்தோஷமான குடும்பமும், உண்மையிலேயே அமைந்து விடுகிறதா என்பதை யாரும் சென்று பார்ப்பதில்லை. பணம் மட்டும் இருந்துவிட்டால் போதுமா? தங்களுடைய தலை முடியை எப்படி வாரி கொள்ள வேண்டும் என்பது அவரவருடைய இஷ்டம்தான். சாஸ்திரமும், முன்னோர்களும் என்ன சொல்கிறது என்பதை பற்றி தெரிந்து கொள்ளவே இந்த பதிவு. பெண்கள் தலைவிரி கோலமாக இருப்பது கெட்டதுதான் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles