Wednesday, June 3, 2020
Home ஆன்மீகம் இந்த பொருட்களை எல்லாம், பக்கத்து வீட்டில் போய் கடனா கேக்காதீங்க! நீங்களும் யாருக்கும் கடனாக தராதீங்க!...

இந்த பொருட்களை எல்லாம், பக்கத்து வீட்டில் போய் கடனா கேக்காதீங்க! நீங்களும் யாருக்கும் கடனாக தராதீங்க! தேவையில்லாத கஷ்டம் தான் வரும்.

பொதுவாகவே சில பொருட்களை அடுத்தவர் வீட்டில் இருந்து கடனாக கேட்க கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். இதேபோல் சில பொருட்களை கடனாகவும் கொடுக்கக் கூடாது. முடிந்த வரை கடன் கேட்பதை தவிர்ப்பது நல்லது. நம் வீட்டில் இருப்பதை வைத்ததே, நம் வேலைகளை முடித்துக் கொள்ள வேண்டும். இல்லாத பொருட்களை அடுத்தவரிடம் போய் கடன் கேட்பது மிகவும் தவறு.

அதிலும் குறிப்பாக செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, நல்ல நாள் கிழமை, விளக்கு வைத்த நேரம், இப்படி என்று எதுவுமே பாராமல் சிலபேர், சில வீடுகளுக்கு சென்று கடனாக சில பொருட்களை கேட்பார்கள், என்ன செய்வது? நாள் கிழமைகளில் கடனாக வந்து கேட்டாலும், சில பேர் எதையும் பொருட்படுத்தாமல் தங்கள் வீட்டிலிருந்து, வந்திருப்பவர் கேட்கும் பொருளை தூக்கி கொடுத்து விடுவார்கள். ஆனால் இது மிகவும் தவறான ஒன்று என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட பொருட்கள் என்னென்ன என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த பொருட்கள் எல்லாம் நமக்கு தெரிந்த பொருட்களாக இருந்தாலும், இந்த தவறுகளை நாம் சில சமயங்களில் செய்து விடுவோம். முதலில் அந்த பொருட்கள் என்னென்ன என்பதை பார்த்து விடலாம். குறிப்பாக தண்ணீர், சுண்ணாம்பு, சர்க்கரை, பால், தயிர், இப்படிப்பட்ட வெள்ளைநிறப் பொருட்களை விளக்கு வைத்த வைத்த பின்பு நம் வீட்டில் இருந்து வெளி ஆட்களுக்கு கொடுக்கவே கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள். அதற்காக தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்று சொல்லவில்லை.

சில பேர் எல்லாம் அடுத்தவர்கள் வீட்டிலிருக்கும் ஐஸ்வர்யம் தனக்கு வரவேண்டும் என்று தெரிந்தே, இது வேண்டும்! அது வேண்டும்! என்று விளக்கு வைத்த சமயத்தில் அடுத்தவர் வீட்டிற்குப் போய் கேட்கும் பழக்கத்தை வைத்திருப்பார்கள். ஆனால், அவர்கள் வீட்டிலிருந்து எதையுமே கொடுக்க மாட்டார்கள். இப்படி இருக்க, நாம் மட்டும் ஏன் நம் வீட்டு ஐஸ்வர்யத்தை அடுத்தவர்களுக்கு தூக்கிக் கொடுக்க வேண்டும். சற்று சிந்தித்துப் பாருங்கள்! அதாவது நம் முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே இந்த சாஸ்திர குறிப்புகளை எல்லாம் நமக்கு சொல்லி வைத்துள்ளார்கள்.

- Advertisement -

நம் பாட்டிமார்கள் நமக்கு சொல்லுவார்கள், விளக்கு வைத்த பின்பு இந்த பொருட்களை எல்லாம் அடுத்தவர்களுக்கு கொடுக்கக் கூடாது என்று. ஆனால் மூடப்பழக்கம் என்று காலப்போக்கில் அதெல்லாம் இன்று மாறிப் போய்விட்டது. ஆனால் இப்படிப்பட்ட பொருட்களை நாம் அடுத்தவர்களுக்கு விளக்கு வைத்த சமயத்திலோ அல்லது வெள்ளிக்கிழமை செவ்வாய்க் கிழமைகளிலோ தூக்கி கொடுக்கும் போது, நம்முடைய ஐஸ்வரியம் குறைந்து போகும் என்பது ஒரு பக்கம் இருக்க, நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் சுவையும் குறைந்து போகும் என்று சொல்லப்பட்டுள்ளது.

நம் வாழ்க்கையில் இருக்கும் சந்தோஷம், இன்பமும் குறைந்து போனால் பரவாயில்லை என்று நினைப்பவர்கள் வேண்டுமென்றால், இந்தப் பொருட்களையெல்லாம் மற்றவர்களுக்கு தானமாக கொடுக்கலாம். ஆனால், சற்று சிந்தித்துப் பார்த்தால் நம்முடைய பழக்க வழக்கங்கள் ஒவ்வொன்றாக மாறிக்கொண்டே வரவர, நமக்கு பிரச்சனைகளும் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது என்று கூறலாம்.

அவர்கள் சொல்லி விட்டுச் சென்ற குறிப்புகள் எல்லாம் ஒருவேளை சரியாகத்தான் இருக்குமோ! என்று சிந்திக்கும் நிலைமையில் இன்று நாம் இருக்கின்றோம் என்று சொன்னால் அது கட்டாயம் பொய்யாகாது. நம்பிக்கை உள்ளவர்கள் இவைகளை கடைப்பிடிக்கலாம். நம்பிக்கையில்லாதவர்கள் தவிர்த்துவிடலாம். அது அவரவர் இஷ்டம் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisment -

ஏனைய செய்திகள்

பீஷ்மரைவிட சகுனி ஏன் சிறந்தவன் ? கிருஷ்ணரின் விளக்கம்

#சகுனி தன் முன்னே கை நீட்டி விரல்கள் விரித்து கண்மூடி அமர்ந்து இருக்கும் தந்தை சுபலனைக் கண்டான் சகுனி, இந்த கைகள்தானே என்னை வாரியணைத்தவை. இந்த விரல்கள்தானே என் கண்ணி துடைத்தவை. இந்த கைகள் தானே...

வியப்பூட்டும் மலர் மருத்துவம் – Flower Theraphy Natural Medicine

மூலிகைகள் எப்படி நோய் தீர்க்கும் வல்லமை கொண்டதாக இருக்கிறதோ, அதேபோல் மலர்களும் சக்தி வாய்ந்தவையே. இந்திய மருத்துவத்தில் மலர்களை பழங்காலத்தில் இருந்தே பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனாலும், இதற்கு நவீன அடையாளமும் அங்கீகாரமும் கொடுத்தவர்...

காற்று மாசை இனி கட்டுப்படுத்தலாம்… -Air pollution can no longer...

இன்று மொத்த உலகையும் நடுங்க வைத்துக் கொண்டிருக்கிறது காற்று மாசு. இத்தகைய சூழலில் நாம் வாழும் நம் வீடு/அலுவலகத்தில் சுத்தமான காற்றை சுவாசிக்கத் தரும் செடிகள் குறித்து தெரிந்துகொள்வோம். Air pollution can...

உன் சமயலறையில் …..!

* புளித்த மோராக இருந்தால் மோர்க்குழம்பு ஜீரணமாகாது. சிறிது பூண்டு சேர்த்தால் குழம்பு சுவையாகவும் இருக்கும். எளிதில் ஜீரணமாகும். * பிரெட் ஸ்லைஸ் மீதியாகி விட்டால் அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வெயிலில்...

வாய்ப்புண்ணை போக்கும் பப்பாளி -papaya cures Mouth sore

பப்பாளி மரத்தின் இலைகள், விதைகள், காய், பழம் என அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தவை. இந்தப் பழத்தை ‘ஏழைகளின் ஆப்பிள்’ என்றும் வர்ணிக்கின்றனர். * பப்பாளிக்காயை கூட்டாகச் செய்து சாப்பிட்டு வந்தால் குண்டான உடல்...

அதிகம் வாசிக்கப்பட்டவை

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..

உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க.. A  B  C  (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); D E F G H  I  J  K L ...

“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

முன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...

K ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

கடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...

2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்

2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள்  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

P ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?

P’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...
error: Content is protected !!
Inline