தனக்கு கிடைக்கும் நெகட்டிவ் கமெண்டுகளை குறித்து சின்னத்திரை நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ரேஷ்மா பசுபுலேட்டி
பாக்கிய லட்சுமி சீரியல் மூலம் பிரபலமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி. மேலும், இவர் தமிழில் விஷ்ணு விஷால் நடித்த ”வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” படத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானார்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ரேஷ்மா, தற்போது சின்னத்திரையில் பிஸியாகவுள்ளார். தொடர்ந்து சமுகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மாவிற்கு நிறைய பாலோவர்சும் உள்ளனர்.
அண்மையில் இவர் அளித்த பேட்டியில், ஒரு ஆடை அணிந்தால் அதனை குறித்து ஒரு பத்து பாசிட்டிவான கமெண்டுகள் வந்தால், அதற்கு மிச்சமாக 100 நெகட்டிவான கமெண்டுகள் வரும் என்று கூறினார்.
அந்த கமெண்ட்டுகளில், அதை பார் இதை பார் என்று தன்னுடைய உடல் பாகங்களை வைத்து பேசுவார்கள் என கூறிய ரேஷ்மா, உனக்கு அதை பார்க்க வேண்டும் என்றால் தாராளமாக பார்த்துக் கொள் என்றும் அதற்காக நான் உன்னை நிறுத்த மாட்டேன் என்றும் அதிரடியாக தெரிவித்தார்.



