இவ்வளவு சொத்து சேர்த்துட்டா நீ நிம்மதியா இருந்திடுவியா என நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து, சக நடிகர் வடிவேலுவை கடுமையாக விளாசியுள்ளார்.
கடுமையான விமர்சனம்
கேப்டன் விஜயகாந்தின் இறப்பிற்கு வராததால் நடிகர் வடிவேலு கடுமையான விமர்சனத்திற்கு ஆளானார். மேலும், கலைஞர் நூற்றாண்டு விழாவில் அவர் பங்கேற்றதால் இணையதளத்தில் படுமோசமாக விளாசப்பட்டார்.
Actor Vadivelu

இந்த நிலையில், நடிகர் சிங்கமுத்து அளித்துள்ள நேர்காணல் ஒன்றில் நடிகர் வடிவேலுவை காட்டமாக விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில்,
‘வடிவேலுவின் பாடிலேங்குவேஜ் அவருக்கு கைகொடுத்தது. அவர் இவ்வளவு சொத்து சேர்த்தற்கு காரணம் நான் தான். ஆனால் ஏழு கோடியை காணோம் என்று சொல்லிட்டார். எனக்கு எந்த கோடினே தெரியாது. சொத்து வாங்க உதவி செய்ததில் இருந்து பாஸ்போர்ட் வரை நான் அவருக்கு எடுத்து கொடுத்திருக்கிறேன்.
இவ்வளவு சொத்து சேர்த்துட்டா நீ நிம்மதியா இருந்திடுவியா..எல்லாம் ஒரு லிமிட்ல இருக்கணும். மக்களுக்கு அவன் அப்பாவி மாதிரி படத்தில் நடித்ததால் பிடித்துவிட்டது. ஆனால் இப்போது அவரைப்பற்றி எல்லாருக்கும் தெரிந்துவிட்டது’ என்றார்.
விஜயகாந்த் இறப்புக்கு வந்தியா?
மேலும் பேசிய அவர், ‘ஒரு மனிதன் நல்ல குடும்பத்தில் பிறந்திருக்கணும், அல்லது நல்ல நண்பர்களை வைத்திருக்க வேண்டும். அல்லது நல்ல நூல்களை படித்திருக்க வேண்டும். இது மூணுமே வடிவேலு கிட்ட கிடையாது. வளர்ப்பு சரியில்ல. விஜயகாந்த் இறப்புக்கு வந்தியா? மனோபாலா இறப்புக்கு வந்தியா? மயில்சாமி இறப்புக்கு..அவன் வரவே மாட்டான்.
யாராவது இறந்துட்டா ஊர்ல இருக்க மாட்டாரு.. செத்ததுக்கு தண்ணியபோட்டு சந்தோசம்..இவருக்கு அடுத்த வருஷம் தெரியும் ஜாதகப்படி. வடிவேலு என் மேல் வழக்குபோட்டார், அதனால நான் சொல்றத கூட பொய் என்று நினைக்கலாம். ஆனால் மற்றவர்களும் சொல்றாங்களே..அப்போ அதுதான் உண்மை. இந்த சமுதாயத்திற்கும், மக்களுக்கும் வில்லனே அவன் தான்’ என்றார்.



