ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா நிச்சயதார்த்தம்? எப்போது தெரியுமா? – வெளியான தகவல்!

நடிகர்கள் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் தொடர்ந்து பல நாள்களாக டேட்டிங் செய்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், அதிகாரப்பூர்வமாக இரு நடிகர்களும் இதனை உறுதிப்படுத்தப்படவில்லை.விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் இணைந்து கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் என இரண்டு படங்களிலும் நடித்துள்ளனர். இந்த திரைப்படங்களும் பெரிய வசூலை குவித்தன.

தெலுங்கு திரையுலகை தாண்டி இருவருக்கும் தமிழ், இந்தி உள்ளிட்ட திரையுலகிலும் பெரிய வரவேற்பு கிடைத்தது. ராஷ்மிகா நாடு முழுவதும் புகழ்பெற்ற நடிகையாக திகழ்கிறார். புஷ்பா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அவர் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிரபலமானார். குறிப்பாக, அவர் ‘சாமி… சாமி…’ என்ற பாடலின் அட்டகாசமாக நடனமாடியது பலரையும் கவர்ந்தது.

ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா நிச்சயதார்த்தம்? எப்போது தெரியுமா? - வெளியான தகவல்!
ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா நிச்சயதார்த்தம்? எப்போது தெரியுமா? – வெளியான தகவல்!

ராஷ்மிகாவும், விஜய் தேவரகொண்டாவும் இணைந்து நடித்த இரு படங்களிலும் அவர்களுக்கு இடையிலான கெமிஸ்ட்ரி ரசிகர்களால் சிலாகிக்கப்பட்டது. எனவேதான், தொடர்ந்து அவர்கள் இருவரும் டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன. குறிப்பாக, இருவரும் வெளிநாட்டில் தங்களின் விடுமுறை தினங்களை இணைந்து கொண்டாடுவதாகவும் அவ்வப்போது கிசுகிசுக்கப்படும். இருப்பினும், இதன்மீது இருவர் தரப்பிலும் எவ்வித தகவல்களும் வழங்கப்படவில்லை.

அந்த வகையில் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் வரும் பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் தங்கள் நிச்சயதார்த்தம் குறித்த அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெலுங்கு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், இது குறித்து ராஷ்மிகா மந்தனாவோ, விஜய் தேவரகொண்டாவோ எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களாக விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் நிச்சயதார்த்தம் குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில், தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள விஜய் தேவரகொண்டாவின் வீட்டில் ராஷ்மிகா மந்தனா தீபாவளியை கொண்டாடினார். இருவரும் ஒன்றாக விடுமுறைக்கு செல்வதையும் பல நேரங்களில் காணமுடிந்தது.

இருப்பினும், விஜய் தேவரகொண்ட தரப்பில் இருந்து இது உண்மை இல்லை எனவும் இதுபோன்று சமூக வலைதளங்களில் செய்திகளை பரப்ப வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டதாகவும் தெலுங்கு ஊடக வட்டாரங்களில் கூறப்படுகிறது. மேலும் பல சந்தர்பங்களிலும் தாங்கள் வெறும் நண்பர்கள்தான் என இருவரும் கூறியிருந்தது நினைவுக்கூரத்தக்கது.

சமீபத்தில், ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான ‘அனிமல்’ படம் உலகளவில் 800 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்தது. இந்த பிளாக்பஸ்டர் படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடித்தது மட்டுமில்லாமல் கதையின் முக்கிய கதாபாத்திரமாகவும் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். நடிகர் தற்போது அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா: தி ரூல்’ என்ற அதன் இரண்டாம் பாக படப்பிடிப்பில் இருக்கிறார். ‘ரெயின்போ’, ‘தி கேர்ள்பிரண்ட்’ மற்றும் ‘சாவா’ ஆகிய படங்களையும் தனது வரிசையில் வைத்துள்ளார். விஜய் தேவரகொண்டா அடுத்ததாக பரசுராம் பெட்லாவின் ‘Family Star’ மற்றும் இயக்குனர் கௌதம் தின்னனுரியின் அடுத்த படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles