பிக்பாஸில் இன்று திடீர் ட்விஸ்ட்… வெளியேறிய முக்கிய போட்டியாளர்… இவ்வளவு சம்பளமா!

தமிழ் தனியார் சேனலான விஜய் டிவியிலும், டிஸ்னி பிளஸ் ஹோட்ஸ்டாரிலும் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி அதன் இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது எனலாம். இன்று 100ஆவது நாள் என்ற நிலையில், வரும் ஜன.14ஆம் தேதி பிரம்மாண்ட் இறுதிநாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வழக்கமாக ஒவ்வொரு பிரம்மாண்ட இறுதிப்போட்டி மாலை 6 மணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.

நெருங்கும் கிளைமேக்ஸ்

விஷ்ணு நேரடியாக Finale போட்டியாளராக தேர்வான நிலையில், அவரை தவிர்த்து 5 பேர் போட்டியில் உள்ளனர். மாயா கிருஷ்ணன், விஜய் வர்மா, மணிசந்திரா, தினேஷ், அர்ச்சனா ஆகியோர் உள்ளனர். இந்த வாரம் இறுதியில், பிக்பாஸ் 7 டைட்டிலை வென்று ரூ.50 லட்சம் பரிசுத்தொகையை தட்டித்தூக்கப்போவது யார் என்பது தெரிந்துவிடும்.

100ஆவது நாள்

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் புது ட்விஸ்டாக Mid-Week Eviction செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், தற்போது வரையில் குறைவான வாக்குகளை பெற்ற போட்டியாளர் இன்றைய எபிசோடில் வெளியேற்றப்படுவார் என தகவல் கூறப்படுகிறது. அதில், குறைந்த வாக்குகளை விஜய் வர்மா (Vijay Varma Eviction) பெற்றிருப்பதாகவும், அவர்தான் இன்று வெளியேற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும் இது முழுக்க முழுக்க சர்ப்ரைஸ் எனவும் இதுகுறித்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அர்ச்சனா போன்றில்லாமல் விஜய் வர்மா தொடக்கத்தில் இருந்தே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர். அவர் 21ஆவது நாளிலேயே எவிக்ட் செய்யப்பட்டார். அதன் பின் வைல்ட் கார்டில் அவர் என்ட்ரி கொடுத்தார். வைல்ட் கார்ட் மூலம் 56ஆவது நாள் அன்று பிக்பாஸ் வீட்டுக்கு வந்த இவர் 100ஆவது நாளான இன்று வெளியேறுகிறார் என கூறப்படுகிறது. இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும் ஏறத்தாழ உறுதியாகிவிட்டதாகவே தகவல்கள் சமூக வலைதளங்களில் தெரிவிக்கின்றன.

விஜய் வர்மா சம்பளம்

அப்படி விஜய் வர்மா இன்று எவிக்ட் செய்யப்பட்டால் அவர் பிக்பாஸ் மூலம் எவ்வளவு சம்பாதித்தார் என்ற தகவல்களும் வெளியாகி இருக்கின்றன. அதாவது முதல் 21 நாள்கள் விஜய் வர்மா பிக்பாஸ் வீட்டில் இருந்தார். அதில் ஒருநாளைக்கு ரூ.15 ஆயிரம் வீதம் 21 நாளைக்கு ரூ. 3 லட்சத்து 15 ஆயிரம் அவருக்கு சம்பளம் கிடைத்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில், தற்போது இந்த 44 நாள்களையும் சேர்த்து மொத்தம் 9 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை பிக்பாஸ் மூலம் விஜய் வர்மா சம்பாதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பிக்பாஸ் சீசன் 7 தொடரின் வெற்றியாளராக இருப்பார் என பலராலும் கணிக்கப்பட்ட நடிகை விசித்ரா கடந்த வாரம் எவிக்ட் செய்யப்பட்டார்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles