
கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் பெண்களுக்கு முக்கியமான ஆலோசனைகள்
கர்ப்பம் உறுதி செய்யப்பட்டவுடன் பெண்களுக்கு தினசரி வேலைகள், உடற்பயிற்சி, விடுக்கைகள், மற்றும் ஆரோக்கியம் குறித்து பல சந்தேகங்கள் எழுவதுண்டு. இவை குறித்து மகப்பேறு மருத்துவர் ஜெயந்தி கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பகிர்ந்துகொள்கிறார்.
தினசரி வேலைகளை செய்யலாமா?
கண்டிப்பாக தினசரி வேலைகளை செய்யலாம், ஆனால் மிகவும் கவனமாக செய்ய வேண்டும்.
தடுமாற்றமின்றி நிதானமாக செயல்படுவது அவசியம்.
மாடி படிகளில் ஏறி இறக்கலாமா?
தாராளமாக ஏறி இறங்கலாம்.
ஆனால், மெதுவாகவும் மிகுந்த கவனத்துடனும் செயல்பட வேண்டும்.
உடற்பயிற்சி செய்யலாமா?
முதல் மூன்று மாதங்களில் வாக்கிங் மற்றும் ஸ்ட்ரெட்சிங் பயிற்சிகள் செய்யலாம்.
அடுத்த கட்டங்களில் மருத்துவரின் ஆலோசனைகளின் அடிப்படையில் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
பிரத்யேக சூழலில் உடற்பயிற்சி தவிர்க்க வேண்டியது:
இரத்தப்போக்கு இருப்பவர்கள்
முதல் குழந்தை குறை பிரசவத்தில் பெற்றவர்கள்
கருப்பை வாய் அருகில் நஞ்சுக்கொடி கர்ப்பப்பை உள்ளவர்கள்
தரையில் படுக்கலாமா?
தாராளமாக தரையில் படுக்கலாம், ஆனால் எழும்பும்போது கவனமாக இருக்க வேண்டும்.
கர்ப்பகால ஊசிகள்
TT (Tetanus Toxoid):
ஒன்றரை மாத இடைவெளியில் இரண்டு முறை
இன்ப்ளுயன்சா ஊசி:
7வது மாதத்தில் மூச்சுத்திணறல் மற்றும் நிமோனியாவைத் தடுக்க
கர்ப்பகால மாத்திரைகள்
போலிக் அமிலம்
இரும்புச்சத்து
கால்சியம்
இவற்றை மாத்திரை அல்லது உணவுப் பொருட்களின் வழியாகவும் பெறலாம்.
ஸ்கேன் எடுக்கும் அவசியம்
முதலில் ஸ்கேன் மூலம்:
குழந்தையின் சரியான பொசிஷன்
இதயத் துடிப்பு
குழந்தைகளின் எண்ணிக்கை மற்றும் அளவு
பிரசவ தேதிக்கான கணிப்பு
இவற்றை உறுதிப்படுத்தலாம்.