மலையாள சினிமா மற்றும் தொலைக்காட்சித் துறையில் முக்கிய நடிகராக பரிச்சயமான விஷ்ணு பிரசாத், இன்று அதிகாலை கொச்சி மருத்துவமனையில் காலமானார்.

கல்லீரல் சிகிச்சைக்காக போராடிய நடிகர்
விஷ்ணு பிரசாத் கடந்த சில மாதங்களாக கல்லீரல் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை அவசியமாகிய நிலையில், அவரது மகள் தானம் செய்ய முனைந்திருந்தார். சிகிச்சைக்காக ரூ.30 லட்சத்துக்கும் மேல் தொகை தேவைப்பட்டதால், நன்கொடை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.
மருத்துவமனையில் அனுமதி – உயிரிழந்தார்
இந்நிலையில், கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ICU-வில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று அதிகாலை உயிரிழந்தார்.
திரையுலகின் இரங்கல்கள்
அவரது மரணம், மலையாள திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர், இயக்குநர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் சமூக ஊடகங்களில் தனது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.



